தினசரி உபயோக்கிக்கும் இந்த பொருளால் உங்களது கல்லீரல் பழுதடையலாம்!

Written By:
Subscribe to Boldsky

நமது ஊர்ப்பகுதி உணவுகள் அனைத்தும் மிகவும் காரசாரமானவையாக தான் இருக்கும். குறிப்பாக பல வகையான சைவ அசைவ உணவுகளில் மசாலா பொருட்களை சேர்ப்பது வழக்கமான ஒன்று தான்... அதில் முக்கியமாக சேர்க்கப்படும் மசாலா பொருள் தான் இந்த இலவங்கப்பட்டை... இந்த இலவங்கப்பட்டையில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன.. ஆனால் இதனை நீங்கள் அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளும் போது இது உங்களது உடலுக்கு தீங்கு விளைவிக்கும்...!

எதையுமே அளவுக்கு மீறி சாப்பிட்டால் அது நஞ்சு தான்...! அதே போல தான் இந்த இலவங்கப்பட்டையும் கூட.. இந்த இலவங்கப்பட்டையை நீங்கள் அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது இது உங்களது உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது.. இந்த பகுதியில் இலவங்கப்பட்டையை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகளை பற்றி விரிவாக காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கல்லீரல் பழுது

கல்லீரல் பழுது

சராசரியாக 60 கிலோ எடையுள்ள ஒருவர் ஒரு நாளுக்கு 5 mg அளவு பட்டையை தான் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்... அதாவது வெறும் ஒன்று அல்லது ஒன்றரை டீஸ்பூன் அளவு தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பல ஆய்வுகள் இந்த இலவங்கப்பட்டையை அதிகமாக சாப்பிடுபவர்களுக்கு கல்லீரல் பழுது ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கிறது..

கேன்சர்

கேன்சர்

ஆய்வு ஒன்று அதிகமாக இலவங்கப்பட்டையை உணவில் சேர்த்துக் கொண்டால், நுரையிரல், கல்லீரல், சிறுநீரக பிரச்சனைகள் போன்றவையும் உண்டாக வாய்ப்புகள் உள்ளது.

மேலும் அறிவியியலாளர்களும் இந்த இலவங்கப்பட்டையை தொடர்ந்து அதிகமாக சாப்பிட்டு வந்தால் உடலின் உள் உறுப்புகள் பழுதுபட வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

வாய்ப்புண்

வாய்ப்புண்

சிலர் இலவங்கப்பட்டையை அளவுக்கு அதிகமாக சாப்பிட்ட காரணத்தினால், வாய்ப்புண் உண்டானதையும் அனுபவித்துள்ளனர். இதனை அதிகமாக சாப்பிடும் போது வாயில் அரிப்பு, எரிச்சல், பல் வலி போன்றவை உண்டாவதையும் உணர்ந்துள்ளனர்.

இரத்த சர்க்கரை அளவு

இரத்த சர்க்கரை அளவு

இலவங்கப்பட்டை இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும் என்பது தெரிந்த உண்மை தான்..! ஆனால் இதனை அதிகமாக சாப்பிடும் போது உங்களது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு மிக அதிகமாக குறைந்து விடும். இதுவும் ஒரு ஆபத்தான நிலை தான்...!

சுவாச பிரச்சனை

சுவாச பிரச்சனை

ஒரே நாளில் அதிகமாக இலவங்கப்பட்டையை சாப்பிட்டால் உங்களுக்கு சுவாசப்பிரச்சனைகள் உண்டாகும். அதுமட்டுமின்றி தொண்டையில் எரிச்சல் உண்டாகும்.

எவ்வளவு சாப்பிடலாம்

எவ்வளவு சாப்பிடலாம்

ஒரு நாளைக்கு நீங்கள் ஒரு டீஸ்பூன் அளவிற்கு இலவங்கப்பட்டையை பொடியை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும். மேலும் இந்த இலவங்கப்பட்டையின் நன்மைகள் பற்றி காணலாம்.

ஆன்டிஆக்சிடன்டுகள்

ஆன்டிஆக்சிடன்டுகள்

ஆன்டிஆக்சிடன்டுகள் ஆக்சிஜனேற்றத்தால் உடலுக்கு ஏற்படும் சேதங்களைத் தடுக்க உதவுகின்றன. இலவங்கப்பட்டையில் பாலிஃபீனால்களும் ஆக்சிஜனேற்ற எதிர்ப்புப் பண்பில் இது பூண்டை விட மிகுந்த செயல்திறன் கொண்டதாகத் திகழ்கிறது.

உடல் எடை குறைய

உடல் எடை குறைய

அதிக கொழுப்பு உள்ள உணவுகளால் நேரும் தீங்கைத் தணிக்க இலவங்கப்பட்டை உதவக்கூடும். உடல் எடை குறைவதற்கு இலவங்கப்பட்டை உதவுகிறது என்பதை நிரூபிக்கும் ஆய்வுகள் மிகச் சிலவே என்றாலும், உடலின் குளுக்கோஸ் அளவை மாற்றுவதால் இது உடல் எடை குறைவதற்கு உதவக்கூடும் என்று கூறப்படுகிறது. இலவங்கப்பட்டையில் சிறிதளவு நார்ச்சத்து உள்ளது, இது செரிமானத்திற்கும் உடலில் இருந்து நச்சுப்பொருள்களை வெளியேற்றவும் உதவுகிறது.

நீரிழிவு

நீரிழிவு

டைப் 2 வகை நீரிழிவுநோயை சமாளிப்பதில் இலவங்கப்பட்டை உதவுகிறது என்று சில ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இது இரத்த அழுத்தம் மற்றும் இன்சுலின் எதிர்ப்புப் பண்புகளைக் குறைப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

பூஞ்சை எதிர்ப்பு

பூஞ்சை எதிர்ப்பு

இலவங்கப்பட்டை நுரையீரலில் இருந்து சளியை அகற்றுவதால், நுரையீரலில் ஏற்பட்டிருக்கும் இறுக்கம்/அடைப்பை சரிசெய்ய உதவுகிறது. மற்ற சிகிச்சைகளுடன் சேர்த்து இலவங்கப்பட்டையையும் பயன்படுத்தும் போது, ​​அது ஒரு பருவகால இருமல், ஜலதோஷம் முதல் பெரிய பிரச்சனைகள் வரை பலவற்றில் உதவுகிறது.

நீர்க்கட்டிகள்

நீர்க்கட்டிகள்

சினைப்பை நீர்க்கட்டிகள் அறிகுறிகள் தொகுப்பு உள்ள பெண்களுக்கு உடல் எடை கூடுவதற்குக் காரணமாக இருக்கும் இன்சுலின் எதிர்ப்புப் பண்பைக் கட்டுப்படுத்த இலவங்கப்பட்டை உதவுகிறது. அதுமட்டுமின்றி, எண்டோமெட்ரியாசிஸ் மற்றும் கருப்பை நார்த்திசுக் கட்டிகள் உள்ளவர்களுக்கு அளவுக்கு ஏற்படும் அதிகமான மாதவிடாய் இரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது என்று கூறப்படுகிறது.

மூளை செயல்பாடு

மூளை செயல்பாடு

முன்பே குறிப்பிட்டதுபோல், இலவங்கப்பட்டையில் ஆன்டிஆக்சிடன்ட் பண்புகள் உள்ளன. அவை அல்சீமர் நோய், பர்கின்சன் நோய் போன்ற நரம்பியல் நோய்கள் வருவதைத் தடுக்கவும் உதவக்கூடும். நரம்புகளைப் பாதுகாக்கும் புரதங்களைத் தூண்டி செயல்படுத்துவதன் மூலம் இது மூளை செல்கள் செதமடைவதைத் தடுக்க உதவுவதாக ஆராய்ச்சிகள் தெரிவித்துள்ளன.

பற்கள் பாதுகாப்பு

பற்கள் பாதுகாப்பு

பெப்பர்மின்ட் போலவே, இலவங்கப்பட்டையும் வாயிலிருக்கும் பாக்டீரியாக்களை அகற்றுகிறது, இதனால் வேதிப்பொருள்கள் எதுவும் இல்லாமலே சுவாசப் புத்துணர்வைப் பெற முடிகிறது. வாயில் இருக்கும் பாக்டீரியாக்களால் பற்சிதைவு, பற்சொத்தை அல்லது வாய் நோய்த்தொற்றும் ஏற்படலாம். பாக்டீரிய எதிர்ப்புப் பண்பு கொண்ட மவுத்வாஷாகவும் இலவங்கப்பட்டை பயன்படும், பற்பொடி மற்றும் பற்பசைகளில் நெடுங்காலமாக இலவங்கப்பட்டை ஒரு முக்கியப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருவதற்குக் காரணம் இதுவே.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

side effects of cinnamon powder

side effects of cinnamon powder
Story first published: Friday, December 1, 2017, 15:55 [IST]