Latest Updates
-
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்!
உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த ஜூஸை மாதம் ஒருமுறை குடித்தால் போதும்!
உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த ஜூஸை மாதம் ஒருமுறை குடித்தால் போதும்!
நாம் உண்ணும் உணவே சில சமயம் மருந்தாக செயல்படுகிறது. காய் வகைகளில் ஒன்றான முள்ளங்கியில் பல்வேறு பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. கோடை காலத்தில் உடலுக்கு உஷ்ணம் அதிகம் அதிகம் ஏற்படாமல் பாதுகாப்பதில் முள்ளங்கிக்கு முக்கிய பங்குண்டு. அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட முள்ளங்கியில் உடலுக்கு தேவையான வைட்டமின்சத்துக்களும் தாது உப்புக்களும் உள்ளன.
முள்ளங்கியில் சிவப்புமுள்ளங்கி, வெள்ளை முள்ளங்கி என இரண்டு வகை உண்டு. இதில் வெள்ளை முள்ளங்கி மட்டுமே மருந்தாகப் பயன்படுகின்றது. சிவப்பு முள்ளங்கி சுவைக்கு மட்டுமே ஏற்றது.

சத்துக்கள்
- கலோரி - 17 கிராம்
- நார்ச்சத்து - 2 கிராம்
- வைட்டமின் சி -15 மில்லி கிராம்
- கால்சியம்-35 மில்லி கிராம்
- பாஸ்பரஸ் - 22 மில்லி கிராம்
காய்கறிகளிலேயே வைட்டமின் சி, கால்சியம், பாஸ்பரஸ் அதிகளவில் காணப்படுவது முள்ளங்கியில் தான் உள்ளது. எனவே இது ஒரு ஆரோக்கியமானதாகும்.

உடல் எடை குறைய
முள்ளங்கியில் மிக குறைந்த கலோரிகள் உள்ளது. இதில் கொழுப்புகள் இல்லை. மிக அதிகமான நீர்ச்சத்துக்கள் உள்ளது. இதில் செரிமானமாகக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. இது உங்களை நீண்ட நேரத்திற்கு பசியில்லாமல் வைத்திருக்க உதவுகிறது. உங்களுக்கு உடல் எடையை குறைக்க வேண்டும் என்றிருந்தால் முள்ளங்கியை எடுத்துக்கொள்ளுங்கள்.

கல்லீரல் பாதுகாப்பிற்கு
முள்ளங்கி உங்களுடைய கல்லீரல் பாதுகாப்பிற்கு மிகவும் உதவியாக உள்ளது. இது கல்லீரலில் உண்டாகும் பாதிப்புகளை தடுக்கிறது. உங்களுடைய கல்லீரல் எந்தவிதமான பிரச்சனையும் இல்லாமல் செயல்பட வேண்டும் என்றால் முள்ளங்கியை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

நச்சுக்களை வெளியேற்ற..
உங்களது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த முள்ளங்கி மிகவும் உதவியாக உள்ளது. உங்களது உணவில் முள்ளங்கியை சேர்த்துக் கொள்வதால் இது நச்சுக்களை வெளியேற்றி உங்களது உடலை சுத்தமாக வைக்கிறது. இதனால் பல பிரச்சனைகள் தடுக்கப்படுகின்றன.

கேன்சர்
முள்ளங்கி கேன்சரில் இருந்து உங்களை பாதுகாக்க உதவுகிறது. இது உடலில் உள்ள கேன்சர் செல்களின் வளர்ச்சியை எதிர்த்து போராடுகிறது. எனவே நீங்கள் ப்ரோகோல்லி, முட்டைக்கோஸ் போன்றவற்றை போலவே முள்ளங்கியையும் அடிக்கடி உணவில் சேர்க்கலாம்.

மலச்சிக்கல்
மலச்சிக்கல் என்பது பலரையும் தாக்க கூடிய பிரச்சனைகளில் ஒன்றாகும். தினமும் இரண்டு முறை மலம்கழிக்க வேண்டியது அவசியமாகும். அப்படி இல்லை என்றால் உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். எனவே நீங்கள் முள்ளங்கி ஜூஸை பருகுங்கள்.

முதிர்ச்சியான தோற்றம்
முள்ளங்கி ஜூஸை பருகுவதால் உங்களது முதிர்ச்சியான தோற்றம் மறையும். அதுமட்டுமின்றி உங்களது முகம் பொலிவு பெறும். இது மெலனின் சுரப்பை குறைத்து உங்களது சருமம் ஆரோக்கியமாக இருக்க உதவும்.

முள்ளங்கியின் நறுமணம் :
முள்ளங்கியை சமைக்கும் போதும் உண்ணும் போது ஒரு வித வாசனை ஏற்படும். சாப்பிட்ட பின்பும் நாம் விடும் மூச்சிலும், வியர்வையிலும் கூட இந்த வாசனை இருக்கும் அதற்குக் காரணம் அதில் கந்தகமும், பாஸ்பரசும் அதிகம் காணப்படுவதால்தான். முள்ளங்கியின் கிழங்கு, இலை, விதை ஆகிய மூன்றுமே மருத்துவ குணம் கொண்டது.

குழந்தைகளுக்கு ஜலதோஷம்
குழந்தைகளின் ஜலதோஷம் போக்கும் பச்சிளம் குழந்தைகளைத் தாக்கும் ஜலதோஷம், வயிற்றுப் பிரச்சினைகளுக்கு, முள்ளங்கிப் பிஞ்சு சாறு நிவாரணம் தரும்.

குழந்தைகளுக்கான உணவு
இட்லி வேகவைப்பது போல முள்ளங்கிப்பிஞ்சை ஆவியில் வேக வைத்து, அதில் இருந்து சாறு எடுத்து பாலாடையில் வைத்து குழந்தைகளுக்கு ஊட்டலாம்.

முள்ளங்கி சாறு மற்றும் தேன்
முள்ளங்கி சாறுடன் கொஞ்சம் தேன் அல்லது சர்க்கரை கலந்து கொடுத்தால் மலச்சிக்கல், சளித் தொந்தரவு போன்ற பிரச்சினைகள் தீரும் தரும் சிறுநீர் பிரச்சினை தீரும்.

உடலுக்கு குளிர்ச்சி தரும்
உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் இயல்புடையது முள்ளங்கி. எனவே உடல் உஷ்ணம் உள்ளவர்கள் முள்ளங்கி ஜூஸை பருகலாம். இதனால் உடல் உஷ்ணம் குறையும்.

சீறுநீர் பாதை பிரச்சனைகள்
சிறுநீர்ப்போக்கு இயல்பாக இல்லாமல் இருப்பது, சிறுநீர்ப் பாதையில் பிரச்சினை உள்ள பெரியவர்களும் இந்த முள்ளங்கிச் சாற்றைக் குடிக்கலாம். இதனால் சிறுநீர் போக்கு சீராகும் மேலும் சிறுநீர் பாதையில் தொற்றுக்கள் உண்டாகாமலும் தடுக்கலாம்.

முள்ளங்கி கீரை
முள்ளங்கிக்கீரையை எண்ணை விட்டு நன்கு வதக்கி, துவையல் செய்து சாப்பிட்டால் நீர்ச்சுருக்கு சிக்கல் நீங்கும். முள்ளங்கியை அடிக்கடி சாப்பிட்டால் வயிற்றில் பொருமல், எரிச்சல் போன்ற பிரச்சினைகள் வரும். எனவே, அளவாக சாப்பிடுவது நல்லது.

நீரிழிவு நோயாளிகளுக்கு
முள்ளங்கி நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றதாக உள்ளது. ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை கட்டுப்படுத்தும் ஆற்றல் முள்ளங்கிக்கு உள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தி
முள்ளங்கியில் நோய் எதிர்ப்புக் சக்தி அதிகமாக உள்ளது. அவ்வப்போது நோயுற்று பலவீனமானவர்கள் முள்ளங்கியை சாப்பிடுவதன் மூலமாக நோய் எதிர்ப்புக் சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.புதிதாக உள்ள முள்ளங்கியில் அதிகமான கால்சியச் சத்து உள்ளது. அதிலும், முள்ளங்கிக் கீரையில் அதிகமான கால்சியம் இருப்பதால் கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் மிகவும் நல்லது



Click it and Unblock the Notifications
