ஆரோக்கியத்தை பன்மடங்கு அதிகரிக்க செய்யும் தமிழரின் 7 பாரம்பரிய பானங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

பெப்ஸி, கோக், மாஸா, செவனப் போன்றவை வருவதற்கு முன்னர் நமக்கு செரிமான கோளாறு, அஜீரண பிரச்சனை, குடலியக்க பிரச்சனைகள், சர்க்கரை நோய் போன்றவை அதிகளவில் தெரியாது. ஆனால், இன்று உண்மையான மாம்பழம், உண்மயான ஆரஞ்சு என கூறி விற்கப்படும் போலிகளை குடித்து ஆரோக்கியத்தை பாழாக்கிவிட்டோம்.

Our Own Natural Health Drinks Which Improves Your Health Better and Better!

Image Courtesy

ஆனால், நமது தமிழர் கலாச்சாரத்தில் பின்பற்றி வரப்பட்ட இயற்கை பானங்கள் அனைத்தும் மிகவும் ஆரோக்கியமானவை. உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும் பண்புகள் கொண்டிருந்தன. ஆனால், அவற்றை நாம் மறந்துவிட்டோம். ஆனால், இனிமேல் மறக்க வேண்டாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பானகம் !

பானகம் !

கொதிக்க வாய்த்த நீரில் கொடம்புளி, நாட்டு வெல்லம், எலுமிச்சை சாறு போன்றவற்றை சேர்த்து தயாரிக்கப்படும் பானம் தான் பானகரம்.

இதில் ஐஸ் கலப்பது தவிர்க்க வேண்டியது. வெயில் காலத்தில் உடல் சூடு, சிறுநீரக பிரச்சனைகள் போன்றவற்றை எதிர்த்து பாதுகாப்பளிக்கும் பானம் பானகரம்.

பதநீர்

பதநீர்

கிராமப்பகுதிகளில் இன்றளவும் கோடையின் சிறந்த பானமாக திகழ்வது இந்த பதநீர் தான். இது உடல் சூட்டை அதிகரிக்காமல் இருக்க உதவும். பனையில் இருந்து எடுக்கப்படும் இந்த பானத்தில் இரும்பு, கால்சியம் போன்ற சத்துக்கள் மிகுதியாக இருக்கிறது. இது நீர்வறட்சி உண்டாகாமல் இருக்கவும் உதவுகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு உகந்த பானம் பதநீர்.

இளநீர்!

இளநீர்!

உடல் வறட்சி, சரும கோளாறுகள், சிறுநீரக கற்கள், கொலஸ்ட்ரால் என பல வகைகளில் நன்மைகள் அளிக்கவல்லது இளநீர். வெயில் காலத்தில் மற்ற பானங்களை விட இளநீருக்கு மவுசு கொஞ்சம் அதிகம்.

நன்னாரி சர்பத்!

நன்னாரி சர்பத்!

ஆயுர்வேத மருத்துவ குறிப்புகளில் நன்னாரியின் நன்மைகள் பலவன கூறப்படுகின்றன. இது மருத்துவ பண்புகள் அதிகம் கொண்டுள்ள பானம் ஆகும். இது சந்தையிலும் கிடைக்கும். இதை வாங்கி இதனுடன் எலுமிச்சை சாறு, குளிர்ந்த நீர் சேர்த்து பருகினாலே போதும். உடல் சூடு,, செரிமானம், அஜீரண கோளாறு, தலைவலி என பயன்கள் அளிக்கவல்லது நன்னாரி சர்பத்.

நீர் மோர்!

நீர் மோர்!

உடல் சூட்டை தணிக்கும், உடலில் நீர் வறட்சி உண்டாகாமல் பாதுகாக்கும், உடலுக்கு சக்தி அளிக்கும்., செரிமானத்தை ஊக்குவிக்கும், வயிறை குளுமையாக வைத்துக் கொள்ளும். மிகுந்த குளிர் காலம் தவிர்த்து மற்ற காலங்களில் தாராளமாக நீர் மோர் பருகலாம். மதிய நேரத்தில் பருகுவது மிகவும் நல்லது.

காய கல்பம்!

காய கல்பம்!

காலையில் இஞ்சி, சாரு, மதிய வேளையில் சுக்கு போடி நீர், இரவு கடுக்கைப் போடி நீர் என மூன்று வேளைகள் குடித்து வருவது காயகல்பம் எனும் சித்த மருத்துவ முறை ஆகும். இது பண்டைய காலத்து மருத்துவ முறை. இது ஒரு சிறந்த ஆரோக்கிய பானம்.

இதுவும் உடல் சூட்டை குறைக்கும் பண்பு கொண்டது. இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லது.

பஞ்சகோலம்!

பஞ்சகோலம்!

சுக்கு பொடி, திப்பிலி, திப்பிலி வேர், மிளகு வேர்ப் பொடி, கொடிவேலி வேர் ஆகியவற்றில் தலா 5 கிராம் எடுத்துக் கொள்ளுங்கள். இதை 200 மில்லி மோரில் கலந்து குடித்து வரவேண்டும்.

காலை, மாலை என நாளுக்கு இரண்டு வேளைகள் இந்த பஞ்சகோலத்தை குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இது குளிர் காலம், மழைக் காலங்களில் ஏற்படும் சளி தொல்லைக்கும் சிறந்த தீர்வளிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Our Own Natural Health Drinks Which Improves Your Health Better and Better!

Our Own Natural Health Drinks Which Improves Your Health Better and Better!
Please Wait while comments are loading...
Subscribe Newsletter