ஆஸ்துமாவை குணப்படுத்தும் சக்தி வாய்ந்த வெள்ளெருக்கின் நன்மைகள் !!

By: Gnaana
Subscribe to Boldsky

எருக்கு, கிராமங்களின் ஒதுக்குப்புறமான சாலைகளின் ஓரம், வயல் வெளிகளின் திடலில், குப்பைகளின் ஓரமாக இதுபோல நாம் காணும் அநேக இடங்களில் வளர்ந்திருந்தாலும், ஏனோ பெரும்பாலோர் அதனைக் கண்டு, சற்று அச்சத்துடனே, விலகிச் செல்வர். இதற்குக் காரணம், எருக்கின் விஷத்தன்மைகளாகும்.

அரிய நற்பலன்களை மனிதர்களுக்கு அளிக்கவல்லது, எருக்கஞ் செடிகள். பழங்காலத்தில் இருந்து தமிழர்களின் மருத்துவத்தில், வியாதிகளை குணமாக்கி, உடலை வலுப்படுத்துவதில், சிறந்த நன்மைகளை அழிப்பது.

Medicinal benefits of Calotropis Gigenta.

மேல்நோக்கி வளரும் இலைகளைக் கொண்ட எருக்கு, ஐந்தடி உயரம் வரை வளரும் ஒரு வறண்ட நிலத் தாவரமாகும். சதைப்பிடிப்புமிக்க இதன் தண்டைக் கீற, பால் வடியும். இலைக்காம்பை கிள்ளி எடுத்தாலும், பால் வடியும். காய்களில் பஞ்சுகளைக் கொண்ட எருக்கு, அந்த பஞ்சுகள் விதைகளுடன் காற்றில் பரவுவதன் மூலம், எருக்குகள் பல்வேறு இடங்களில் பரவி வளர்கின்றன.

கொத்தாக மலரும் பூக்களைக் கொண்ட எருக்கு வகைகளில் கிட்டத்தட்ட ஒன்பது வகைகள் இருக்கின்றன. அருக்கன், ஆள்மிரட்டி என்பது எருக்கின் வேறு பெயர்களாக இருக்கிறது.

நாம் அதிகம் காணும் எருக்கு, ஊதா வண்ண மலர்களைக் கொண்டு இருக்கும். வெண்ணிற மலர்களைக் கொண்ட எருக்கு, மிக அரிதாகவே காணப்படும். ஆன்மீகத்தில் இரண்டு வகை எருக்கும் பயன்பட்டாலும், வெண்ணிற எருக்கின் வேரிலிருந்து செய்யப்படும் விநாயகர் சிலை தான் ஆகர்ஷண சக்தி மிக்கதாகக் கூறப்படுகிறது.

இத்துடன் இன்னும் சில எருக்கு வகைகள் இருந்தாலும், தற்காலங்களில் பரவலாகக் காணப்படுவது, இந்த எருக்கு வகைகளே.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எருக்கு

எருக்கு

எருக்கஞ் செடிகள் நீர் இல்லாத வறண்ட சூழலில், வளரும் இயல்புடையது. நீரே இல்லாமல் பனிரெண்டு ஆண்டுகள் வரை உயிர் வாழும் ஆற்றலுடைய எருக்கு, காற்றில் உள்ள நீரை உறிஞ்சி உயிர்வாழும் அதிசயத் தன்மை படைத்தது.

தேவ மூலிகை என அழைக்கப்படும் எருக்கஞ் செடியின் மலர்கள், ஆன்மீகத்தில் இறைவனுக்கு சூட்டும் மாலைகளாகப் பயன்படுகின்றன.ஊதா மற்றும் வெண்மை என்று இரு வண்ணங்கள் எருக்க மலர்களில் இருந்தாலும், இரு வண்ண மலர்களும் இறை வழிபாட்டில் பயன்படுகின்றன. சிவபெருமானுக்கு உகந்த மலராக, பூஜைகளில் சூட்டும் மாலையாகத் திகழ்கிறது, எருக்கு.

விநாயகருக்கு எருக்க மலர்களில் செய்த மாலையை அணிவிப்பது, விஷேசமாகக் கருதப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி திருநாட்களில் விநாயகரை அர்ச்சித்து வணங்கி, அணிவிக்கும் மாலையாக, எருக்க மாலை திகழ்கிறது.

வெள்ளெருக்கு விநாயகர்

வெள்ளெருக்கு விநாயகர்

வெள்ளெருக்கு வேர்களில் இருந்து செய்யப்படும் விநாயகர், விஷேச நற்பலன்களைத் தருவார், என்று சமய நூல்கள் கூறுகின்றன. ஆயினும், மிகவும் நுட்பமான முறைகளில், வெள்ளெருக்கு வேரை, சேகரிக்க வேண்டும் என்கின்றனர். ஆற்றல் மிக்க செடியாதலால், உயிர்ப்பை செடியில் இருக்க வைத்து, வேரை எடுத்து வர, சிலைகளில் ஆற்றல் கிடைக்கும் என்றும்,

வெள்ளெருக்கு வேரில் செய்யப்படும் விநாயகர் சிலையை முறைப்படி வணங்கி வர, செல்வத்தை வீடுகளில் பெருகச் செய்வார் என்றும்.

வெள்ளெருக்கு தண்டின் நாறைத் திரியாக்கி அதைக்கொண்டு விளக்கேற்றி வர, ஏற்பட்ட துன்பங்கள் விலகி, இல்லங்களில் மகிழ்ச்சி உண்டாகும் என்றும் எருக்கின் நன்மைகளை, உரைக்கின்றனர், பெரியோர்.

ஆஸ்துமா பாதிப்பை குணமாக்க :

ஆஸ்துமா பாதிப்பை குணமாக்க :

வெண்ணிற எருக்கு மலர்களின் நடுவில் உள்ள நரம்புகளை எடுத்துவிட்டு, மலர்களின் மடல்களை மட்டும் சேகரித்துக் கொண்டு, அத்துடன் மிளகு, கிராம்பு இவற்றை சேர்த்து, நன்கு மைபோல அரைத்து, குன்றிமணி அளவில் சிறு உருண்டைகளாகச் செய்து, ஆஸ்துமா பாதிப்பினால் ஏற்படும் மூச்சிறைப்பின் போது, ஒரு உருண்டை மருந்தை வாயில் போட்டு, தண்ணீர் பருகி வர, இரைப்பு பாதிப்பு விலகும்.

மூச்சிரைப்பிற்கு :

மூச்சிரைப்பிற்கு :

சில வெள்ளெருக்குப் பூக்கள், சிறிது இஞ்சி மற்றும் மிளகு இவற்றை சற்று அரைத்து, அந்தக் கலவையை இரண்டு தம்ளர் நீர் விட்டு காய்ச்சி, தண்ணீர் ஒரு தம்ளர் அளவுக்கு சுண்டி வந்ததும், ஆற வைத்து, தினமும் இரண்டு வேலை பருகி வர வேண்டும். இதன் மூலமும் சுவாச இரைப்பை குறைக்க முடியும் என்கிறார்கள், முன்னோர்கள்.

விஷக்கடிகள் பாதிப்பிற்கு

விஷக்கடிகள் பாதிப்பிற்கு

எருக்க இலைகளை நன்கு அரைத்து சிறு உருண்டை போல உருட்டி, கொடிய விஷங்கள் ஏறியவர்களுக்கு அளித்து, விஷத்தின் கடுமையையும், வலியையும் குறைக்க முடியும்.

 காலில் முட்கள் தைத்த வலிக்கு :

காலில் முட்கள் தைத்த வலிக்கு :

கிராமங்களில் மாடு மேய்க்க அல்லது வேறு வேலையாக வயல் வெளிகளில் செல்லும்போது, பொதுவாக எல்லோரும் செருப்புகள் போடாமலேயே நடப்பார்கள். அந்த நேரங்களில், நெருஞ்சி முள்ளோ அல்லது மூங்கில் முள்ளோ காலில் கூராக ஏறிவிடக் கூடும். இதன் காரணமாக முள் குத்திய இடத்தில், கால் கடுக்க ஆரம்பிக்கும்.

இந்த பாதிப்புகளை விலக்க,

எருக்க இலையைச் செடியில் இருந்து பறித்து, அதை சாறு பிழிய வடியும் பாலை, முள் குத்திய இடத்தில் நன்கு தடவி வைக்க வேண்டும். இதன்மூலம், சதைப்பகுதி இளகி. காலில் தைத்த முள் வெளியேறி விடும். குத்திய இடத்தில் ஏற்பட்ட கடுப்பும் நீங்கி விடும்.

உடலில் ஏற்படும் கட்டிகள் வீக்கங்கள் வடிய :

உடலில் ஏற்படும் கட்டிகள் வீக்கங்கள் வடிய :

எருக்க இலைகளில் விளக்கெண்ணை தடவி, அதை தீயில் வாட்டி, சூடு பொறுக்கும் அளவில் வந்ததும், உடலில் கட்டி ஏற்பட்ட இடங்களில் வைத்து கட்டி வர, வீக்கங்கள் கட்டிகள் வடிந்து, சருமம் இயல்பாகி விடும்.

எருக்கம் பஞ்சு தலையணை:

எருக்கம் பஞ்சு தலையணை:

தலையணையில் இலவம் பஞ்சுக்கு பதில், எருக்கம் பஞ்சுகளை அடைத்து, அதில் உறங்கி வர, நல்ல உறக்கம் உண்டாகும். மேலும், உறுதியான கயிறுகளைச் செய்ய இதன் நார்கள் பயன்படுகின்றன.

வயிற்றுப் பூச்சிகளுக்கு :

வயிற்றுப் பூச்சிகளுக்கு :

வெள்ளெருக்கின் இலை, தண்டு, மலர்கள் மற்றும் வேர் அனைத்தும் மருத்துவ பலன்கள் மிக்கவை.. எருக்கிலை சாற்றில் தேன் கலந்து சிறிது சாப்பிட, வயிற்றுப் பூச்சிகள் அழியும்.

தொழு வியாதிக்கு:

தொழு வியாதிக்கு:

கடுமையான தொழு வியாதி போக்கும் தன்மை வாய்ந்தவை, எருக்க மலர்கள். உலர்த்தி காயவைத்து தூளாக்கிய எருக்க மலர்த்தூளுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து, தினமும் சாப்பிட்டு வர, தொழு வியாதிகளின் பாதிப்புகள் விலகும்.

எருக்கு வேர் மருந்து:

எருக்கு வேர் மருந்து:

வேரை நெருப்பில் இட்டு, கரியானதும், விளக்கெண்ணையில் கலந்து, உடலில் ஆறாத காயங்கள், பூச்சிக்கடி மற்றும் பிறப்புறுப்பு புண்களில், இந்தக் கலவையைத் தடவி வர, பாதிப்புகள் விரைவில் நீங்கும்.

எருக்கம் பால்:

எருக்கம் பால்:

உடலில் சரும பாதிப்புகளால் ஏற்பட்ட படை, அரிப்பு மற்றும் சொறி போன்றவற்றில் எருக்கம் பாலைத் தடவி வர, அவை எல்லாம், விரைவில் மறையும்.

கை கால் மூட்டுகளில் ஏற்படும் வலிகளைப் போக்க, எருக்கம் பாலை, வலியுள்ள இடங்களில் தடவி வர, குணமாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Medicinal benefits of Calotropis Gigenta.

Medicinal benefits of Calotropis Gigenta.
Story first published: Monday, December 11, 2017, 8:00 [IST]
Subscribe Newsletter