For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த உணவுகள் எல்லாம் ஆரோக்கியமானதா இருந்தாலும் நீங்க அடிக்கடி சாப்பிடக் கூடாது! ஏன் ?

நீங்கள் அடிக்கடி சாப்பிடக்கூடாத ஆரோக்கியமான உணவுகள் என்று அழைக்கப்படும் சில உணவுகள் இருக்கின்றன! நீங்கள் தினமும் சாப்பிடக்கூடாத ஆரோக்கியமான உணவுகளைப் பற்றி மேலும் தெரிந்துக் கொள்ள தொடர்ந்து படிக்கவும்

By Bala Latha
|

எல்லோரும் நினைப்பது என்னவென்றால் உணவு உட்கொள்ளும் முறையானது ஆரோக்கியமான உணவினைக் கண்டுபிடித்து அதனை தொடர்ந்து உட்கொள்வதன்மூலம் முழுமையடைவதாக நினைக்கின்றனர்.

சில ஆரோக்கியமான உணவுகளை அதிகமாக சாப்பிடுவதை நீங்கள் ஒருபோதும் சிந்திக்கக்கூடாது, ஏனெனில் அவை நல்லது செய்வதை விட அதிக தீமைகளை விளைவிக்கின்றன.

புகழ்பெற்ற தர நிறுவனச் சின்னம் கொண்ட மற்றும் பெயரிடப்பட்ட உணவுகள் 'சர்க்கரை-இல்லாத', 'முற்றிலும் -இயற்கையான' மற்றும் ' இயற்கை உணவு' போன்றவை, ஆரோக்கியமான உணவுகள் என நாம் நம்புவதற்காக கொடுக்கப்படும் தலைப்புகள் ஆகும். இருப்பினும், உண்மை முற்றிலும் முரண்பாடாக உள்ளது.

Healthy Foods That You Should Not Eat Often!

அதிகப்படியாக சில உணவுகளை உட்கொள்ளுதல் நம் உடலுக்கு மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். நீங்கள் விஷயத்தை எளிதாகப் புரிந்துக்கொள்ள, அடிக்கடி சாப்பிடக்கூடாத ஆரோக்கியமான உணவுகள் சிலவற்றை நாங்கள் இங்கே பட்டியலிட்டுள்ளோம். சில குறிப்பிட்ட உணவுகள் நீங்கள் நினைப்பது போல் அத்தனை ஆரோக்கியமானது அல்ல. சில உணவுகள் இரகசிய சர்க்கரை அணுகுண்டுகள் ஆகவும் இருக்கலாம் அல்லது அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது வீக்கம் தரக்கூடியதாகவும் இருக்கலாம்.

எனவே, நீங்கள் தினமும் சாப்பிடக்கூடாத ஆரோக்கியமான உணவுகள் பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படிக்கவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 1. புகையில் சுடப்பட்ட சால்மன்

1. புகையில் சுடப்பட்ட சால்மன்

சால்மோன்கள் எரிக்கப்படும்போது, அவை பாலிசிலிக் நறுமண ஹைட்ரோகார்பன்களை (PAHs) உற்பத்தி செய்கின்றன. அதிக உணவு வெளிப்பாடு வாழ்நாள் புற்றுநோயை உருவாக்கலாம். நீங்கள் அவற்றை வறுத்து பாதுகாப்பாக உண்ணலாம்.

2. கொம்புச்சா

2. கொம்புச்சா

கொம்புச்சா மிகவும் அமிலத்தன்மை கொண்டதாக அறியப்படுகிறது. நெஞ்சு எரிச்சலைத் தரக்கூடியது. மேலும் நாள் முழுதும் உறிஞ்சுவதால் பற்களில் சர்க்கரை சேர்ந்து பற்சொத்தைக்கு வழிவகுக்கும்.

 3. டியூனா

3. டியூனா

டியூனாக்கள் ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாக கருதப்படுகின்றன. ஆனால் அதன் உயர் பாதரச உட்பொருள் காரணமாக, நீங்கள் தினமும் சாப்பிடக் கூடாது, குறிப்பாக நீங்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தாலோ அல்லது கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்றால் சாப்பிடக் கூடாது. மெர்குரி விஷம் பார்வை பிரச்சினை மற்றும் தசை பலவீனத்தை ஏற்படுத்தும்.

 4. தேங்காய் எண்ணெய்

4. தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் என்பது நிறைவுற்ற கொழுப்பு பொருளாகும். இதில் நடுத்தர சங்கிலி கொழுப்பு அமிலங்களில் ஏராளமாக உள்ளது. இது ஒட்டுமொத்த கொழுப்பு மற்றும் டிரைகிளிசரைடு கொழுப்பு அமிலங்களின் அளவைக் குறைக்கலாம். இதன் கலோரியின் அடர்த்தியானது கரண்டிக்கு 121 எரிசக்தி அளவைக் கொண்டுள்ளது. இது தினமும் சாப்பிடக்கூடாத ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாகும்.

5. கேன்களில் அடைக்கப்பட்ட சூப்

5. கேன்களில் அடைக்கப்பட்ட சூப்

கேன்களில் அடைக்கப்பட்ட சூப் ஆனது சோடியம் குடுவையில் அடைக்கப்படுகிறது. ஆனால் பரிந்துரைக்கப்பட்ட அளவை விட நாள் ஒன்றுக்கு 2300 மி.கி அதிகமாக உள்ளது. நீங்கள் சூப் சாப்பிடாமல் உயிர் வாழ முடியாதென்றால், குறைந்த சோடியம் வகைகளை தேர்ந்தெடுக்கலாம். இதுவும் நீங்கள் அடிக்கடி சாப்பிடக் கூடாத ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாகும்.

6. வறுத்த இறைச்சி

6. வறுத்த இறைச்சி

மாமிசங்களான மாடு, பன்றி, இறைச்சி, மீன் மற்றும் கோழி போன்றவை அதிக வெப்பநிலையில் கடாயில் பொறிக்கும்போதோ அல்லது வறுக்கும்போதோ புற்றுநோயை உருவாக்கும் ஹெட்டோரோசைக்ளிக் அமின்கள் (HCAs) உருவாக வாய்ப்பிருக்கிறது.

 7. பழச்சாறு

7. பழச்சாறு

பழச்சாறுகள் சோடாவைப் போலவே மோசமானவை. ஒரு சராசரி பழச்சாறு 45.5 கிராம் ஃப்ருக்டோஸ் எனப்படும் பழச்சர்க்கரை செறிவைக் கொண்டுள்ளது. மேலும் சோடாவில் பழச்சர்க்கரை செறிவு 50 கிராம் ஆக உள்ளது.

8. காய்கறிகளிலிருந்து எடுக்கப்படும் தாவர வெண்ணெய்

8. காய்கறிகளிலிருந்து எடுக்கப்படும் தாவர வெண்ணெய்

இந்த வெண்ணெயில் அதிக டிரான்ஸ் கொழுப்பு உள்ளது. இது இரண்டாம் வகை நீரிழிவு மற்றும் பல உடல்நலப் பிரச்சினைகளை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் கொண்டது.

9. காய்கறி எண்ணெய்கள்

9. காய்கறி எண்ணெய்கள்

காய்கறி எண்ணெய்கள் பெரும்பாலும் ஆரோக்கியமான எண்ணெய்களில் ஒன்றாகும் என்றாலும் அடிக்கடி உபயோகப்படுத்தக்கூடாது. கனோலா எண்ணெய் போன்ற காய்கறி எண்ணெய்கள் மிகவும் அழற்சி கொண்டதாகும். மேலும் எந்த வகையிலும் ஆரோக்கியமானதல்ல.

10. வெளிநாட்டு காபி பானங்கள்

10. வெளிநாட்டு காபி பானங்கள்

உங்கள் துணையுடன் நீங்கள் விரும்பி சாப்பிடும் காபியானது உடலுக்கு நல்லது செய்யும் பொருள் அல்ல. இந்த பிரபலமான காபியில் அதிக அளவு சர்க்கரை, குறிப்பாக உயர் ஃப்ருக்டோஸ் சர்க்கரை கார்ன் சிரப் கலந்த பாகு உள்ளது. இது நம் கல்லீரலை சேதப்படுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Healthy Foods That You Should Not Eat Often!

Healthy Foods That You Should Not Eat Often.
Desktop Bottom Promotion