வெண்ணைய் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள் !!

Posted By:
Subscribe to Boldsky

நவநாகரிகமாக வளர்ந்துவிட்ட இன்றைய யுகத்தினர் உடல் நலத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துவருகிறார்கள். அதே நேரத்தில், நாகரிகம் என்ற பெயரில் கண்ட உணவுகளை எடுத்துக்கொண்டு திண்டாடுவது தான் மிச்சம். பழங்காலத்தில் முக்கிய உணவுப்பொருட்களில் ஒன்றாக இருந்த வெண்ணெய் இன்றைக்கு பயன்படுத்துவதே இல்லை.

வெண்ணெய் என்றவுடன் அது சில வீடுகளில் மாட்டியிருக்கும் ஃப்ரேம் போட்ட படத்தில் இருக்கும் கிருஷ்ணர்,அவரது காதைத் திருகி கோபத்துடன் முறைக்கும் யசோதை தான் நினைவுக்கு வரும். இங்கே வெண்ணெயை சாப்பிட்டால் யாரும் வந்து காதை திருகாமல் இருக்க இந்த குறிப்புகளை எல்லாம் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 சத்துக்கள் :

சத்துக்கள் :

வெண்ணையில் அதிகமாக கொழுப்புச்சத்து மட்டுமே உள்ளது. அது தவிர குறைந்த அளவு விட்டமின் ஏ இருக்கிறது. இதைத் தவிர வேறு எந்த சத்துக்களும் வெண்ணையில் கிடையாது.

குழந்தைகள் :

குழந்தைகள் :

குழந்தைகளுக்கு வெண்ணையை தாராளமாக கொடுக்கலாம். குறிப்பாக எடைக்குறைவுடன் இருக்கும் குழந்தைகளுக்கு இதனை கொடுக்கலாம். அதே போல குழந்தைகளுக்கு காலை நேரங்களில் மட்டும் வெண்ணையை கொடுங்கள் இரவு நேரங்களில் கொடுப்பதை தவிர்த்திடுங்கள்.

பெரியவர்கள் :

பெரியவர்கள் :

குழந்தைகளைத் தவிர,விளையாட்டு வீரர்கள், உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்கள் வெண்ணெயை உணவுடன் அவ்வப்போது சேர்த்துக்கொள்ளலாம். காச நோயால் அவதிப்படுபவர்களுக்கு வெண்ணெய் மிகவும் நல்லது. இது நீண்ட நேரத்திற்கு உடலுக்கு தேவையான எனர்ஜியை கொடுத்திடும்.

தவிர்ப்பது நல்லது :

தவிர்ப்பது நல்லது :

வெண்ணையை எல்லாரும் எடுத்துக் கொள்ளக் கூடாது, 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதயநோய், உடல் பருமன் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், வெண்ணெய் எடுத்துக் கொள்ளக்கூடாது. ஏனென்றால் வெண்ணையில் இருக்கும் கலோரி எளிதில் கரையாது. இதனால் உடலில் உள்ள கொழுப்பின் அளவும் அதிகரிக்கும்.

வெண்ணையா? நெய்யா? :

வெண்ணையா? நெய்யா? :

வெண்ணையை விட நெய் தான் நல்லது. வளரும் குழந்தைகளுக்கு தினமும் நெய் கொடுக்கலாம். அதனை காலை நேரங்களில் சூடான உணவுகளில் கலந்து கொடுங்கள். நெய் சேர்க்கும் போது உணவில் கண்டிப்பாக உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் குழந்தைகளுக்கு உடல் வெப்பத்தை குறைத்திடும். ஆறிப் போன உணவு, இரவு நேரங்களில் மற்றும் அசைவ உணவுகளுடன் நெய் பயன்படுத்தக்கூடாது.

பயன்பாடு :

பயன்பாடு :

வெண்ணையை பிரட்டுடன் மட்டுமல்ல பொங்கல், சப்பாத்தி, சாம்பார் போன்ற உணவுகளுடன் சிறிதளவு சேர்க்கலாம். இது சுவையை அதிகரிக்கும். அதே போல் வெண்ணையை அதிகமாக எடுத்துக் கொண்டால், பசி எடுக்கும் தன்மையைக் குறைந்துவிடும். அதிகமாக வெண்ணெய் பயன்படுத்துவதால் இதயம் சார்ந்த நோய்கள், சர்க்கரை நோய் போன்றவை ஏற்படும் என்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

health facts about butter

health facts about butter
Story first published: Thursday, August 10, 2017, 13:44 [IST]
Subscribe Newsletter