அது என்ன எரி எண்ணெய் சாதம் ? கேள்விப்பட்டிருக்கீங்களா? உங்களை வியக்க வைக்கும் பலன்கள்!!

Posted By: Gnaana
Subscribe to Boldsky

என்ன பெயரைப்பார்த்ததும், குழப்பமா? நாம் அறியாத சாதமா, சாம்பார் சாதம்,புளி சாதம், தக்காளி சாதம்,தேங்காய் சாதம்,தயிர் சாதம் ஏன் கீரை சாதம் கூட கேள்விப்பட்டிருப்போம், இது என்ன எரி எண்ணை சாதம் என யோசிக்கிறீர்களா? ஹ்ம்ம், அப்படி யோசித்தால், நாம் நம்முடைய பாரம்பரிய ஆரோக்கிய வீட்டு உணவுமுறைகளை மறந்துவாழ்கிறோம் என்றுதானே, பொருள்.

நம்முடைய வீடு கூட்டுக்குடித்தனமாக, வீட்டின் பெரியோருடன் வாழும் வீடுகளாக இருந்திருந்தால், இன்று நம்முடைய குழந்தைகளின் சாதாரண உடல்நலம் சார்ந்த பாதிப்புகளுக்குக்கூட, டாக்டரிடம் ஓடவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. வீட்டில் உள்ள பெரியவர்கள் குழந்தைகளின் நிலை அறிந்து, சாதாரண, வீட்டு சமையல்ப்பொருட்களைக் கொண்டே, குழந்தைகளின் உடல் உபாதைகளை சரிசெய்துவிடுவார்கள்,

எளிய மருந்தைக் கொடுத்துவிட்டு,ஒன்றும் இல்லையப்பா, சாதாரண காய்ச்சல்தான், இதற்கு ஏன் மருத்துவரிடம் சென்று குழந்தைகளுக்கு தேவையற்ற துன்பங்கள் தருகிறீர்கள்?, தூங்கினால் சரியாகிவிடும், என்று நமக்கு ஆறுதலும் சொல்லக்கூடிய, பெரியவர்கள் அன்று நம் வீட்டில் இருந்தார்கள்,.

இன்று நம்மில் சிலர், அவர்களைத் தேவையற்ற பாரம் என்று கருதி, புறக்கணித்து விட்டோம், அதோடு இல்லாமல், நம்முடைய குழந்தைகளுக்கு இயல்பாக கிடைக்கவேண்டிய, நலம் தரும் பக்கவிளைவுகள் இல்லாத வீட்டு மருத்துவத்தை கொடுக்காமல், அவற்றைக் குறைத்து மதிப்பிட்டு, குழந்தைகளை ஆங்கில மருந்துகளுக்கே பழக்கி, அவர்கள் எதிர்காலத்தை, நாம் அறியாமல், கெடுத்துவருகிறோம் என்பதே உண்மை என்பது, நம்மில் எத்தனை பேர் அறிவர்?

Health benefits of oil rice ball

சமூக மாற்றம், விஞ்ஞான வளர்ச்சியால் வந்த நவீனத்துவம் நம் பழமையை, அலட்சியப்படுத்திவிட்டது. உச்சகட்ட கொடுமை, மிகக்குறைந்த செலவில் கிடைக்கும் நம்முடைய வீட்டு மருத்துவத்தின் எளிமையை, எள்ளி நகையாடி, டாக்டர்கிட்டே காட்டி ஒரு ஊசி போட்டா சரியாகிடப்போகுது, இதுக்குபோயி, பாட்டி சொன்னாள் என்று கண்டதைக்கொடுத்து, குழந்தையின் ஆரோக்கியத்தை கெடுத்துவிடாதீர்கள் என்ற, போலி ஆலோசனைகளையே நாம் பின்பற்றுகிறோம்.

நம் பெரியவர்கள் நம்முடைய நன்மைக்கு என்று நிறைய விசயங்கள் நம் குழந்தைப்பருவத்தில் நமக்கு செய்திருப்பார்கள், அவற்றை நீங்கள் மறந்திருந்தால், அல்லது அத்தகைய வாய்ப்புகள் எங்களுக்குக் கிடைக்க வில்லை, எனும் நிகழ்கால இளம்பெற்றோருக்கு, குழந்தைகளுக்கு உணவின்மேல் உள்ள வெறுப்பை அகற்றி, அவர்கள் மீண்டும் நன்கு சாப்பிட, பெரியவர்கள் அளித்த ஒரு பாரம்பரிய சிறப்புமிக்க எளிய உணவுமுறையை, உங்களுக்கு அறிமுகம் செய்கிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எரி எண்ணெய் சாதம் :

எரி எண்ணெய் சாதம் :

இந்த எரி எண்ணைசாதம் என்ற மிக எளிய ஆனால், மிக அதிக பலன்கள் தரக்கூடிய உணவை எப்படி சமைப்பது, என்று பார்ப்போம், வழக்கம்போல வீட்டுக்கு சமைக்கும் சாதத்திற்கு தேவையான அளவைவிட, ஒரு அரை டம்ளர் அளவு கூட அரிசி இட்டு, சாதம் வடியுங்கள்.

வாழை இலை :

வாழை இலை :

நுனி வாழை இலை நன்கு அலசி எடுத்து, அதில் வடித்த சாதத்தில் ஒரு சிறு அளவு, இலையின் நடுவில் குவித்து வைத்துவிடுங்கள்.

காய்ந்த சிகப்பு மிளகாய் மூன்று எடுத்து, சாதத்தின் மேல் செருகி வையுங்கள். ஆலக்கரண்டி அல்லது நல்ல அழமுள்ள பெரிய கரண்டியில் நல்லெண்ணையை விட்டு அடுப்பில், நன்கு கொதிக்க வையுங்கள், எந்த அளவு கொதிக்க வேண்டும் என்றால், எண்ணை நன்கு காய்ந்து எண்ணையின் மேற்பரப்பில், தீ ஜுவாலை வரும் அளவிற்கு.

தீ ஜுவாலை :

தீ ஜுவாலை :

பிறகு உணவை வெறுக்கும் குழந்தை மற்றும் வீட்டில் உள்ள குழந்தைகள் அனைவரையும், மிளகாய் செருகி வைத்திருக்கும் சாத இலைக்கு எதிர்புறம் அமரவைத்து, தீ ஜூவாலையுடன் உள்ள இந்த எண்ணையை, சற்றே கவனமுடன் மிளகாய்களின் மேல் ஊற்றுங்கள்.

அப்போது, படபடவென ஒரு சத்தத்துடன் தீ ஜுவாலை, மிளகாய் மேல் பட்ட எண்ணைக் காரணமாக, மேலே எழும்பிச்செல்லும். அந்த ஜூவாலையை குழந்தைகள் அவசியம் பார்க்க வேண்டும்.

ஒரு பிடி சாதம் :

ஒரு பிடி சாதம் :

அந்த சாதத்தை சற்றே சூடு ஆறியபின், சிறிது உப்பிட்டு, மிளகாய்களுடன் நன்கு பிசைந்து, ஒரு கவளம் [ ஒரு பிடி ] சாதத்தை, நாய்க்கு வைக்கவேண்டும், நன்கு கவனியுங்கள், இந்த உணவு, முதலில் நாய்க்கு மட்டும்தான், அதற்குபிறகே, வீட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்களும் ஆளுக்கு ஓரிரு முறை, சிறிது சாப்பிட்டாலே போதும். சற்றுநேரம் கழித்து, வழக்கமான உணவை சாப்பிடலாம். இந்த எரி எண்ணை சாதத்தால் உண்டாகும் உடனடிப் பலன்களைப் பார்ப்போமா?

எரி எண்ணெய் சாதத்தின் பலன் :

எரி எண்ணெய் சாதத்தின் பலன் :

அதிகம் நொறுக்குத்தீனி சாப்பிட்டு, பசியின்றி, சாப்பாட்டை வெறுத்து மறுக்கும், எவ்வளவு வற்புறுத்தி சாப்பிட வைத்தாலும், சாப்பிட மாட்டார்கள், அந்தக்குழந்தைகளுக்கு உணவின்மேல் நாட்டம் வர வைக்கவே, இந்த எரி எண்ணை சாதம். இதனை பெரியவர்களும் சாப்பிடலாம்.

பசியின்மை :

பசியின்மை :

இந்த சாதத்தை அனைவரும் சாப்பிட, அதன் சுவையை அறியலாம். நல்ல மணத்துடன் அற்புத சுவை கொண்டது, எனவே, குழந்தைகள் சாப்பிட்டுவிடுவர், இந்த சாப்பாடு, அவர்களுக்கு ஜீரண உறுப்புகளை சரிசெய்து, பசியை உண்டாக்கும், அதன்பின்னால், அவர்களாகவே, பசிக்குது, சாப்பாடு கொடுங்கள் என்பர்.

எளிய வீட்டு வைத்தியத்தில் குணமாகும் குழந்தைகளின் பசியின்மை பிரச்னைக்கு, இந்த சாதத்தை ஒரு முறை செய்து கொடுத்தால் போதும், தேவைப்பட்டால், சில மாதங்கள் கழித்து மீண்டும் கொடுக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health benefits of oil rice ball

Health benefits of oil rice ball