பல நோய்களுக்கு மருந்தாகும் இலந்தைப்பழத்தை நாம் மறந்துவிட்டோமா?

Written By:
Subscribe to Boldsky

இலந்தை உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. இதில் மாவுப்பொருள், புரதம் , தாது உப்புக்கள் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை உள்ளது. இலந்தை பழத்தில் மட்டுமல்லாமல், இலந்தை இலையிலும் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. இத்தகைய சிறப்புகள் மிக்க இலந்தையின் மருத்துவ குணங்களை பற்றி இந்த பகுதியில் விரிவாக காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. எலும்புகள் வலு பெற

1. எலும்புகள் வலு பெற

உடலில் கால்சியம் குறைந்தால் எலும்புகள் பலமிழந்து போகும். இதனால் லேசாக கீழே விழுந்தாலும் கூட எலும்புகள் உடைந்து போகும். இவர்கள் இலந்தை பழம் சாப்பிட்டால், எலும்புகள் பற்கள் இரண்டுமே வலுவாகும்.

2. பித்தம் குறைய

2. பித்தம் குறைய

பித்தம் அதிகரித்தால், தலைவலி, மயக்கம், தலைசுற்றல் என பல பிரச்சனைகள் உண்டாகும். இந்த பித்தத்தை குறைக்க இலந்தைப்பழம் சாப்பிட்டால் போதும். பித்தம் குறையும்.

3. வாந்தி, தலைசுற்றல்

3. வாந்தி, தலைசுற்றல்

நீண்ட நேரம் பயணித்தால் சிலருக்கு வாந்தி, தலைசுற்றல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதற்கு இலந்தை பழத்தை சாப்பிட்டு வந்தால் சரியாகும்.

4. உடல்வலி

4. உடல்வலி

சிறிய வேலை செய்தால் கூட உடல் ரொம்ப வலியாக இருக்கிறதா? இந்த உடல் வலியை போக்கி உடலை வலுவாக வைத்துக்கொள்ள இலந்தை பழம் சாப்பிடுவது சிறந்த மருந்தாக அமையும்.

5. பசியின்மை மற்றும் செரிமான பிரச்சனை

5. பசியின்மை மற்றும் செரிமான பிரச்சனை

பசியின்மை மற்றும் செரிமான பிரச்சனைகளுக்கு தீர்வாக இலந்தை உள்ளது. இலந்தையின் விதையை நீக்கிவிட்டு பழச்சதையுடன் மிளகாய், உப்பு சேர்த்து உலர்த்தி எடுத்துக்கொண்டு காலையும், மாலையும் 2 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் செரிமான பிரச்சனை நீங்கும்.

6. மாதவிலக்கு கால பிரச்சனை

6. மாதவிலக்கு கால பிரச்சனை

மாதவிலக்கு காலத்தில் ஏற்படும் சில பிரச்சனைகளை குறைக்கவும், உதிரப்போக்கை தடுக்கவும் இலந்தைப்பழம் பயன்படுகிறது. மாதவிடாய் காலங்களில் பெண்கள் இந்த பழங்களை சாப்பிடலாம்.

7. புத்திகூர்மைக்கு

7. புத்திகூர்மைக்கு

மந்த புத்தி உள்ளவர்கள் இலந்தை பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர மூளை புத்துணர்சி பெறும். இதனை பகல் உணவிற்கு பின்னர் சாப்பிட வேண்டும். மூளை நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி, தூக்கத்தையும் மன அமைதியையும் தருவதுடன், உணவு, சிறுநீர்ப்பாதை மற்றும் சுவாசப் பாதையில் தோன்றும் வறட்சியை நீக்கி, புண்களை ஆற்றி, உடலுக்கு குளிர்ச்சியையும் தருகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

fruit for bone strength

fruit for bone strength