Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
சொன்னா நம்பமாட்டீங்க... இந்த உணவுகளால் ஒருவரது உயிரே போக வாய்ப்பிருக்கு தெரியுமா?
இங்கு ஒருவரது உயிரையே பறிக்கும் அளவில் விஷம் கொண்ட சில உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
நம் வீட்டு சமையலறையில் இருக்கும் அனைத்து உணவுப் பொருட்களுமே மிகவும் சுவையானதாக தான் இருக்கும். ஆனால் அவற்றில் சிலவற்றால் நம் உடல் ஆரோக்கியமே பாழாகும் என்பது தெரியுமா? அதுவும் நாம் ஆரோக்கியம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் சில உணவுப் பொருட்களை சரியாக தேர்ந்தெடுத்து வாங்காவிட்டால், அவற்றால் ஆபத்தை சந்திக்கக்கூடும்.
அந்த உணவுகள் எவையென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? இந்த கட்டுரையில் நம் வீட்டில் இருக்கும் உயிரையே பறிக்கக்கூடிய சில மோசமான உணவுப் பொருட்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து, இனிமேல் உஷாராக இருங்கள்.

காளான்
அனைத்து வகையான காளானுமே ஒரே மாதிரியானவை அல்ல. பாஸ்தாவுடன் சேர்த்து சாப்பிட கிரிமினி காளான்கள் மிகச் சிறந்த ஒன்று. ஆனால் சிலவகையான காளான்களில் ஆளைக் கொல்லும்படியான விஷம் இருக்கும். எனவே காளான் வாங்கும் போது பார்த்து வாங்குங்கள்.

தக்காளி
தக்காளி என்றதும் அச்சம் கொள்ள வேண்டாம். தக்காளியின் இலைகளில் உள்ள க்ளைகோலாய்டு, வயிற்று பிரச்சனைகளான வயிற்று பிடிப்புகள், வயிற்று உப்புசம் மற்றும் பதட்டம் போன்றவற்றை உண்டாக்கும். எனவே தெரிந்தோ தெரியாமலோ, அதன் இலைகளை உணவில் சேர்த்துவிடாதீர்கள்.

ருபார்ப் இலைகள்
ருபார்ப் அனைத்து வகையான இனிப்பு வகைகளையும் தீயில் வாட்ட உதவலாம். ஆனால் அதன் இலைகள் விஷமிக்கவை. இதை உட்கொண்டால், அது மூச்சு விடுவதில் சிரமம், பக்கவாதம், சிறுநீரக செயலிழப்பு மற்றும் சில நேரங்களில் இறப்பையும் ஏற்படுத்தும்.

வேர்க்கடலை
வேர்க்கடலை சிலருக்கு அழற்சியை ஏற்படுத்தும். அப்படி அழற்சி இருக்கும் போது வேர்க்கடலையை உட்கொண்டால், அது மூச்சு விடுவதில் சிரமம், அதிர்ச்சி மற்றும் சுயநினைவை இழக்கச் செய்யும். இன்னும் தீவிர நிலையில் அது இறப்பைக் கூட ஏற்படுத்தும். எனவே ஒவ்வொருவரும் தங்களுக்கான அழற்சி என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

கடல்சிப்பி
கடல் சிப்பிக்கு அழற்சி கொண்டவர்கள், இதை அதிகம் உட்கொண்டால், அதன் தீவிரத்தினால் முச்சு திணறல் மற்றும் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம்.

உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கின் தண்டு மற்றும் இலைகள் இரண்டுமே விஷம் நிறைந்தவை. அதோடு பச்சை நிற உருளைக்கிழங்கை உட்கொண்டால், அதனால் இறப்பு கூட நேரலாம். ஆனால் இது மிகவும் அரிது.

செர்ரி
செர்ரிப் பழங்களின் விதைகளில் விஷமிக்க ஹைட்ரஜென் சையனைடு உள்ளது. எனவே பார்த்து கவனமாக உட்கொள்ளுங்கள்.

வேக வைக்காத இறைச்சி மற்றும் முட்டை
முட்டை மற்றும் இறைச்சிகளை நன்றாக வேக வைக்காமல் சாப்பிட்டால், அதில் உள்ள சால்மோனெல்லா பாக்டீரியா, இரைப்பையை பெரிதும் பாதிப்பதோடு, அந்த பாக்டீரியால் இரத்த குழாய்களில் நுழைந்தால், அது நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனமாக்கி, உயிரையே பறிக்கக்கூடும்.

பாதாம்
பாதாம் மிகவும் ஆரோக்கியமான நட்ஸ்களில் ஒன்று. ஆனால் பாதாம் கசப்பாக இருந்தால், அதை தூக்கிப் போடுங்கள். ஏனெனில் அந்த வகை பாதாமில் உயிரைப் பறிக்கும் சையனைடு உள்ளது. ஆகவே பாதாமை முடிந்த அளவு லேசாக வறுத்து சாப்பிடுங்கள். இதனால் அதில் உள்ள டாக்ஸின்கள் நீங்கிவிடும்.

ஹாட்டாக்ஸ்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஹாட் டாக்ஸ், சில சமயங்களில் மூளை மற்றும் மார்பு பகுதியை பெரிதும் பாதித்து, மூச்சுத்திணறலை உண்டாக்கி உயிரைப் பறிக்கும். எனவே இம்மாதிரியான ஆரோக்கியமற்ற உணவை குழந்தைகளுக்கு கொடுக்காதீர்கள்.

ஆப்பிள் மற்றும் ஸ்டோன் பழங்களின் விதைகள்
ஆப்பிள்கள் மற்றும் ஸ்டோன் பழங்களான செர்ரி, ப்ளம்ஸ், பேரிக்காய், பீச் மற்றும் ஆப்ரிகாட் போன்றவற்றின் விதைகளுடன், அவற்றின் இலைகள் மற்றும் பட்டைகளிடமிருந்தும் விலகி இருங்கள். ஏனெனில் இவற்றில் விதை, இலை மற்றும் பட்டைகளில் சையனைடை உற்பத்தி செய்யும் உட்பொருள் உள்ளது. இவைகளை அளவுக்கு அதிகமாக ஒரே நேரத்தில் உட்கொண்டால், தலைச்சுற்றல், வதந்தி, உயர் இரத்த அழுத்தம், சிறுநீரக செயலிழப்பு மற்றும் சில நேரங்களில் மரணத்தை கூட ஏற்படுத்தலாம்.

எல்டர்பெர்ரி
நம்மில் பலருக்கும் பெர்ரிப் பழங்கள் பிடிக்கும். ஆனால் சிரப்புகள், சோடாக்கள் மற்றும் மது பானங்களில் பயன்படுத்தப்படும் எல்டர் பெர்ரிப் பழங்களின் தண்டுகள் மற்றும் இலைகள் தீவிரமான வயிற்று உப்புசத்தை ஏற்படுத்தும். ஆகவே கவனமாக இருங்கள்.

விளக்கெண்ணெய்
ஆமணக்கு செடியின் கொட்டையில் இருந்து கிடைக்கும் விளக்கெண்ணெயில் ரிசின் என்னும் விஷம் இருக்க வாய்ப்புள்ளது. எனவே விளக்கெண்ணெயைத் தயாரிக்கப் பயன்படுத்தும் ஆமணக்கு விதை பாதுகாப்பு வழிமுறைகளின் படி தான் தயாரிக்கப்பட்டதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

பஃபெர் மீன்
பஃபெர் மீனின் தோல் மற்றும் அதன் குறிப்பிட்ட உறுப்புக்களில் கடுமையான விஷம் உள்ளது. இதை சாப்பிட்டால், அது ஒரு மனிதனை முடக்கி, மரணத்தை கூட ஏற்படுத்தலாம்.

உயிருள்ள ஆக்டோபஸ்
வித்தியாசமான உணவுகளை சுவைக்க ஆர்வம் கொண்டவரா? உயிருள்ள ஆக்டோபஸ் சுவைக்கப் போகிறீர்களா? அப்படியெனில் கவனமாக இருங்கள். ஏனெனில் இதை சாப்பிடும் போது நன்கு மென்று சாப்பிடாவிட்டால், சில நேரங்களில் அது தொண்டையில் சிக்கி, உயிரையே கூட பறித்துவிடும்.

அக்கி பழம்
பேரிக்காய் வடிவில் இருக்கும் அக்கி பழத்தை நன்கு கனிய வைத்து தான் சாப்பிட வேண்டும். நன்கு கனியாத பழத்தில் உயிரைப் பறிக்கும் டாக்ஸின் உள்ளது. அமெரிக்காவில் அக்கி பழம் கனியாமல் இருந்தால், அது இறக்குமதி செய்ய தடை செய்யப்பட்டுள்ளது.

தேன்
மருத்துவ குணம் நிறைந்த தேனில் பைரோலிஜிடைன் அல்கலாய்டுகள் என்னும் டாக்ஸின்கள் உள்ளது. தேன் சரியாக பதப்படுத்தப்படாமல் இருந்தால், அது தலைவலி, தலைச்சுற்றல், பலவீனம், வாந்தி போன்றவற்றை ஏற்படுத்தும்.

கிட்னி பீன்ஸ்
கிட்னி பீன்ஸை சரியாக சமைத்து சாப்பிடாவிட்டால், அது ஆரோக்கியத்தைப் பாதிக்கும். ஆகவே கிட்னி பீன்ஸை பல மணிநேரம் நீரில் ஊற வைத்து, பின் சாப்பிடுங்கள். இதனால் அதில் உள்ள லெக்டின் என்னும் வயிற்றில் உள்ள செல்களை அழிக்கும் பொருள் நீக்கப்படும்.

டூனா
டூனா மீனில் தீங்கு விளைவிக்கும் பாதரசம் உள்ளது. எனவே கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு கொடுக்கும் போது, இந்த வகை மீனை நன்கு சமைத்து பின் கொடுங்கள். ஒருவேளை இதை சாப்பிட்டு சரும அரிப்பு, வயிற்று வலி, உயர் இரத்த அழுத்தம் போன்றவை இருந்தால், அது அவர்களுக்கு ஒப்புக் கொள்ளவில்லை என்று அர்த்தம்.

ஜாதிக்காய்
பொதுவாக அனைவரது சமையலறையிலும் இருக்கும் ஒரு மசாலாப் பொருள் தான் ஜாதிக்காய். இதை ஒருவர் அளவுக்கு அதிகமாக சேர்த்துக் கொண்டால், மனச்சோர்வு, மாயத்தோற்றம் மற்றும் உயர்ந்த உற்சாகம் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.



Click it and Unblock the Notifications