இந்த 4 உணவுகளையும் மீந்து போனா சாப்பிடவே கூடாது!! ஏன் ?

Written By:
Subscribe to Boldsky

நாம் உணவுகளை வீணடிக்கக் கூடாது என பலவற்றை பல நாட்களாக வைத்து சாப்பிடுகிறோம். அது மிகவும் உடலுக்கு நச்சை விளைவிக்கும் என்பதை நீங்கள் அறிவீர்களா?

Avoid eating these 4 leftovers at anycost

சில உணவுப் பொருட்களை அதிக நாட்கள் ஃப்ரிட்ஜில் வைத்திருக்கக் கூடாது. சில வகை உணவுகளை மீந்து போய் சாப்பிடக் கூடாது. அப்படி சாப்பிட்டால் என்னாகும்? தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காய்கறிகள் :

காய்கறிகள் :

நாம் நிறைய காய்கறிகளை வாங்கி வாரக்கணக்கில் ஃப்ரிட்ஜில் வைத்து உபயோகிப்போம். ஆனால் சில வகை காய்களுக்கு நச்சை உற்பத்தி செய்யும் பண்பு இருகிறது. பீட்ரூட், பசலைக் கீரையை அதிக நாட்கள் வைத்திருந்தால் அவை நைட்ரேட்டை உற்பத்தி செய்யும்.

இதனால் அவை காய்களிலேயே தங்கி அதனை சாப்பிடும்போது உடலில் நைட்ரேட் நச்சை அதிகப்படியாக உண்டாக்கி செல்களை சிதைக்கும். ஆகவே இந்த காய்கறிகளை அதிக நாட்கள் வைத்திருக்கக் கூடாது.

சிக்கன் :

சிக்கன் :

சிக்கனில் அதிக புரதம் உள்ளது. இதனை 2 நாட்களுக்கு மேல் உபயோகிக்கக் கூடாது. குறிப்பாக திரும்ப சுட வைத்து சாப்பிடுவது நல்லதல்ல. இதய நோய்கள், கல்லீரல் பிரச்சனை ஆகியவ்ற்றை கொண்டு தரும்.

அரிசி :

அரிசி :

அரிசியை சமைத்தாலும் தீய பேக்டீரியாக்கள் அரிசியில் பெருக அதிக வாய்ப்புண்டு. அதனை திரும்ப சுட வைத்தாலும் உயிரோடே இருக்கும். இவை இரட்டிப்பாகி பல்வேறு ஜீரண சம்பந்த நோய்களை உண்டாக்கும்.

ஆகவே அரிசியை ஒரு முறைதான் சமைக்க வேண்டும். திரும்ப சுட வைக்கக் கூடாது, வேண்டுமானால் மீந்த அரிசி உணவில் நீர் ஊற்றி சாப்பிடுவதால் நேர்மறை நன்மைகளை தரும்.

வெஜிடேபிள் எண்ணெய் :

வெஜிடேபிள் எண்ணெய் :

சூரிய காந்தி எண்ணெய் மற்றும் மக்காசோள என்ணெய் ஆகியவ்ற்றை திரும்ப சூடு வைப்பது போல் தீயது வேறெதுவுமில்லை.

அவற்றிலுள்ள நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் லினோலியிக் அமிலமாக மாறி இதய நோய்கள், பக்க வாதம் மற்று புற்று நோய்களை தருகிறது. ஆகவே திரும்ப திரும்ப ஒரே எண்ணெயை சமையலுக்கு பயன்படுத்தவே கூடாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Avoid eating these 4 leftovers at anycost

You should never eat these 4 leftovers at any cost. reasons explained in this article.
Story first published: Tuesday, March 7, 2017, 9:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter