ப்பா..!! இந்த சின்ன முட்டைக்குள்ள இத்தனை சத்துக்களா? என்ன முட்டை அது?

Written By:
Subscribe to Boldsky

இறைச்சிகளை சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வித விதமான இறைச்சிகளை பலர் விரும்பி சாப்பிடுகிறார்கள். அந்த வகையில் காடை இறைச்சி சற்று பிரபலமாக கருதப்படுகிறது. சாலையோர தள்ளுவண்டி கடைகள் முதல் நட்சத்திர ஓட்டல்கள் வரை காடை இறைச்சிகள் விற்பனை செய்யப்படுகின்றன.

amazing health benefits of Tiny Quail Egg

காடை இறைச்சியை போல், அதன் முட்டையும் சமீப காலமாக பிரபலமடைந்து வருகிறது. இந்த முட்டையை சாப்பிடுவது உடலுக்கு நன்மை தருமா என்றால் நிச்சயமாக காடை முட்டையானது பல நன்மைகளை தன்னுள் அடக்கியது தான்...! இந்த முட்டையின் அளவு சிறிது தான் என்றாலும் இதன் உள் இருக்கும் சத்துக்கள் ஏராளமாகும். இது கோழி முட்டையை விட அதிக சத்துக்களை உள்ளடக்கியது ஆகும்.

காடை முட்டையில் அதிகளவில் விட்டமின்களும், மினரல்களும் அடங்கியுள்ளன. இந்த காடை முட்டையானது உங்களது ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதில் எள் அளவும் சந்தேகம் வேண்டாம். இந்த பகுதியில் காடை முட்டையின் நன்மைகளை பற்றி காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புரத சத்துக்கள்

புரத சத்துக்கள்

காடைகள், ஒரு வருடத்துக்கு சுமார் 250 முட்டைகள் வரை இடுகின்றன. இது, கோழி முட்டைகளை காட்டிலும், சுவை மிக்கதாகும். இதில், கோழி முட்டைகளை விட 3 முதல் 4 மடங்கு வரை அதிகமான உணவு சத்துகள் நிறைந்துள்ளன. கோழி முட்டையில் 11 சதவீத புரதம் உள்ளது. ஆனால், காடை முட்டையில் 13 சதவீத புரதம் இருக்கிறது.

அதிக ஊட்டச்சத்துகள்

அதிக ஊட்டச்சத்துகள்

காடை முட்டைகளில் அதிகளவு விட்டமின்கள் மற்றும் மினரல்கள் உள்ளன. மேலும் இதில் இரும்புச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், ஜிங்க், தையமின், விட்டமின் பி6, விட்டமின் பி12, விட்டமின் ஏ, விட்டமின் இ இன்னும் பல சத்துக்களும் இந்த முட்டையில் உள்ளது... மேலும் இதில் கால்சியம் சத்தும் உள்ளது.

கர்ப்ப காலத்தில்

கர்ப்ப காலத்தில்

காடை முட்டையை கர்ப்ப காலத்தில் சாப்பிடுவதால் கர்ப்பிணி பெண்களுக்கு உள்ள குறைபாடுகள் அனைத்தும் சரியாகும். இந்த முட்டையானது கருவில் உள்ள குழந்தைகளின் எலும்புகளின் வளர்ச்சியை வழுப்படுத்துகிறது. இதில் அதிகளவு விட்டமின் டி உள்ளது...! இது கால்சியத்தை உறிஞ்சிக் கொள்ள உதவியாக உள்ளது. இத்தனை சத்துக்களும் இந்த சின்ன முட்டைக்குள் தான் உள்ளது என்றால் நம்ப முடிகிறதா?

அலர்ஜி

அலர்ஜி

இப்போது காற்று மாசுபாடு அதிகமாக உள்ளது. அந்த காற்று மாசுப்பாடுகளினால் மூக்கில் திரவம் வெளியேறுதல் மேலும் சில அலர்ஜிகள் உண்டாகின்றன. இந்த அலர்ஜிகளில் இருந்து விடுபடும் திறனை இந்த காடை முட்டை உங்களுக்கு தருகிறது.

ஆஸ்துமா

ஆஸ்துமா

ஆஸ்துமா பிரச்சனை என்பது தற்போது பலருக்கும் உள்ள ஒரு முக்கியமான பிரச்சனையாகும். இந்த ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள இந்த காடை முட்டையை நீங்கள் சாப்பிடலாம்.

சரும ஆரோக்கியம்

சரும ஆரோக்கியம்

முட்டையின் வெள்ளைக்கரு சருமத்திற்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் என்பது அனைவரும் அறிந்தது தான்.. ஆனால் இந்த காடை முட்டையானது கோழி முட்டையை விட சக்தி வாய்ந்ததாகும். இந்த காடை முட்டையின் வெள்ளை கருவில் உள்ள புரோட்டின் மற்றும் சில ஊட்டச்சத்துகள் உங்களது சருமத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது.

கண்களுக்கு...

கண்களுக்கு...

காடையின் முட்டையில் அதிகளவு விட்டமின் ஏ உள்ளது. 100 கிராம் முட்டையில் 543IU அளவிற்கு விட்டமின்கள் உள்ளன. இது உங்களது கண்களை பாதுகாக்க உதவுகிறது. முக்கியமாக சிறு வயதிலேயே கண் பார்வை குறைபாடு உண்டாகும் குழந்தைகளுக்கு இந்த முட்டை மிகச்சிறந்தது.

இளமையாக இருக்க

இளமையாக இருக்க

காடை முட்டை சாப்பிடுவதால் என்றும் இளமையான தோற்றம் உங்களுக்கு கிடைக்கும். இதில் உள்ள விட்டமின் ஏ, சிலினியம் மற்றும் ஜிங்க் போன்றவைகள் உங்களது சருமத்திற்கு மிகவும் சிறந்தது. இதில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட் உங்களது சரும செல்களை பாதிப்படைவதில் இருந்து தடுக்கிறது.

சர்க்கரை நோய்

சர்க்கரை நோய்

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இந்த காடை முட்டையானது சீன மருத்துவ டயட்டில் சேர்க்கப்படுகிறதாம். க்ரீன் டீ, மல்பெரி பழம், வாத்து முட்டைகள் போன்றவை அவர்களுக்கு உதவுகிறதாம். நீங்கள் இந்த முட்டையை உங்களது டயட்டில் சேர்த்துக் கொள்ளும் முன்னர் உங்களது மருத்துவரிடன் ஆலோசனை செய்ய வேண்டியது அவசியமாகும்.

வயதானவர்களுக்கு

வயதானவர்களுக்கு

எச்.டி.எல். என்னும் கொழுப்பு சத்து உள்ளதால் வயதானவர்களும் இதை உண்ணலாம். காடை முட்டையில் உடலுக்கு கேடு விளைவிக்கும் கொழுப்பு சத்து குறைந்து, மனித மூளையை இயக்கும் கோலின் என்னும் வேதியியல் பொருள் நிறைந்து உள்ளது.

புற்றுநோய்க்கு எதிராக...

புற்றுநோய்க்கு எதிராக...

இரத்த சோகை சிகிச்சைக்கு காடை முட்டைகள் உதவுகின்றன. ரத்தத்தில் உள்ள நச்சுக்களையும், உலோகங்களையும் வெளியேற்றுகின்றது. புற்றுநோய் பெருக்கத்தை தடுத்தும், அதற்கு எதிராகவும் செயல்படுகிறது.

ஆண்மை அதிகரிக்க

ஆண்மை அதிகரிக்க

ஆண்களின் ஆண்மை தன்மையை மீட்க உதவுகிறது. நினைவாற்றல் மற்றும் மூளை செயல்பாட்டை மேம்படுத்துகிறது.நோய் எதிர்ப்பு சக்தியின் இயக்கத்தையும், உடல் உறுப்புகளையும் வலுவடைய செய்கிறது. இதய தசைகளை பலப்படுத்துகிறது. தோலின் நிறத்தை மேம்படுத்தும் வல்லமை கொண்டது.

2 முட்டைகள்

2 முட்டைகள்

காடை முட்டையின் மஞ்சள் கருவில் அதிகம் காணப்படுகின்ற கோலினிஸ்ட்ரேஸ் நொதி மூலம் அல்சைமர் நோய் உருவாகும் ஆபத்தை தடை செய்கிறது. தலை முடியை பராமரிக்கும் அழகு சாதனங்களுக்கும் பயன்படுகிறது.

குழந்தைகளுக்கு

குழந்தைகளுக்கு

குழந்தைகளுக்கு, உணவில் தினமும் இரண்டு காடை முட்டைகள் கொடுத்து வந்தால், நல்ல உடல் வளர்ச்சி பெற்று, தொற்று நோய்த் தாக்கத்திலிருந்து காப்பாற்றப்படுவார்கள். காடை இறைச்சியும், முட்டையும் கர்ப்பிணிப் பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் சத்துள்ள உணவாக பயன்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

amazing health benefits of Tiny Quail Egg

amazing health benefits of Tiny Quail Egg
Story first published: Thursday, November 30, 2017, 17:19 [IST]