விட்டமின் டி குறைந்தால் உண்டாகும் ஆபத்தை அறிவீர்களா?

Written By: Hemalatha V
Subscribe to Boldsky

விட்டமின் டி நம் உடலில் பல்வேறு வளர்சிதை மாற்றத்திற்கு தேவைப்படுகிறது. மேலும் ஹார்மோன் சுரக்கவும், கால்சியம் உடலில் சேர்வதற்கும் மிகவும் தேவையானது.

எலும்புகள் பலம் பெறவும் பற்கள் உறுதியாகவும் இருக்க தேவையான கால்சியம் பெற விட்டமின் டி யையும் நாம் நம்ப வேண்டியிருக்கிறது.

Vitamin D deficiency associated with kidney diseases

விட்டமின் டி யை சூரியனிடமிருந்தும் , குறைந்த அளவில் மீன் போன்ற சிலவகை உணவுகளிடமிருந்தும் பெறலாம். நமக்கு போதிய அளவு இந்த சத்தினை பெற இப்போது வணிக சந்தைகளில் விட்டமின் டி யை பயிறுவகைகளிலும், பழச் சாறுகளிலும் சேர்க்கிறார்கள்.

Vitamin D deficiency associated with kidney diseases

விட்டமின் டி குறைந்தால் கால்சியம் அளவும் உடலில் குறையும். இது முன்னமே தெரிந்ததுதான். ஆனால் விட்டமின் டி குறைபாட்டினால், சிறு நீரகமும் பாதிக்கப்படும் என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

Vitamin D deficiency associated with kidney diseases

முக்கியமாய் குழந்தைகளிடம் விட்டமின் டி குறைபாட்டினால், சிறுநீரகம் பழுதடைதல், புற்று நோய், ஆஸ்டியோபோரோஸிஸ், இதய நோய்கள் போன்றவைகள் தாக்கும் ஆபத்து உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

சிறு நீரக பாதிப்பு அடைந்த குழந்தைகளிடம் விட்டமின் டி குறைவாகவே உள்ளது என தெரிய வந்துள்ளது. சிறுநீரகம் பாதிக்கப்பட்ட சுமார் 500 குழந்தைகளிடம் ஆராய்ச்சி செய்ததில் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. குளோமெருலோபதி உள்ள குழந்தைகளிடம் விட்டமின் டி குறைவாகவே உள்ளது தெரிய வந்துள்ளது.

Vitamin D deficiency associated with kidney diseases

அவர்களுக்கு தொடர்ந்து விட்டமின் டி சப்ளிமென்ட்ரி கொடுத்ததில் அவர்களின் சிறு நீரக பாதிப்பு ஓரளவு சீரானது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இதனைப் பற்றிய ஆராய்ச்சி மேலும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. சிறு நீரகபாதிப்படைந்த குழந்தைகளுக்கு எவ்வாறு விட்டமின் டி சத்தினை உடலில் அதிகப்படுத்துவது என ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கிறது.

இதற்கான வழிகளும் கண்டுபிடிக்கப்படும் என ஆய்வாளர் அங்கே டோயான் கூறுகின்றார்.

Vitamin D deficiency associated with kidney diseases

இந்த ஆய்வினை தொகுத்து, கிளினிகல் ஜர்னல் ஆஃப் அமெரிக்கன் சொஸைட்டி ஆஃப் நெஃப்ராலஜி என்னும் இதழ் வெளியிட்டுள்ளது. இதில் இளம் வயதினருக்கு சிறு நீரக நோயினால் உண்டாகும் விட்டமின் டி குறைப்பாட்டினை எவ்வாறு சரிபண்ணலாம் என்று ஆராய இந்த இதழ் உதவி புரிகின்றது.

English summary

Vitamin D deficiency associated with kidney diseases

Vitamin D deficiency associated with kidney diseases