நீங்கள் அதிக அளவு விட்டமின் ஏ எடுத்துக் கொண்டால் உண்டாகும் பாதிப்புகள் பற்றி தெரியுமா?

Written By:
Subscribe to Boldsky

நீரில் கரையும் விட்டமின் மற்றும் கொழுப்பில் கரையும் விட்டமின் என இருவகையில் விட்டமின்கள் உள்ளன.

இதில் அதிக அளவு நீரில் கரையும் விட்டமின்களான பி காம்ப்ளக்ஸ் மற்றும் சி சாப்பிட்டால், தேவைக்கேற்ப உறிஞ்சிக் கொண்டு மீதியை சிறு நீரகம் வழியாக வெளியேற்றிவிடும். இவை சேமிக்கப்படுவதில்லை.

ஆனால் கொழுப்பில் கரையும் விட்டமின்களானஏ, டி, ஈ கே ஆகியவை அதிக அளவில் எடுத்துக் கொண்டால் மீதமானவை சேமிக்கப்படுகின்றன.

Side effects of vitamin A toxicity

நாம் சாப்பிடும் காய்கறிகள், பழங்களிலேயே தேவையான விட்டமின் ஏ யை பெற முடியும். இன்னும் சிலர் உணவுகளைத் தவிர்த்து சப்ளிமென்ட்ரியை எடுத்துக் கொண்டால் ஆரோக்கியம் என விட்டமின் ஏ மாத்திரைகளை சாப்பிடுவார்கள்.

இது தவறு. இதன் நச்சுக்கள் பல பக்க விளைவுகளை தரும். எவ்வாறென பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கரோடினீமியா :

கரோடினீமியா :

பொதுவாக காய்கறிகளில் இருக்கும் பீட்டா கரோடின் நமது உடலில் சென்ற பிறகு விட்டமின் ஏ வாக மாறுகிறது.

அளவுக்கு அதிகமாக இந்த கரோடின் சப்ளிமென்ட்ரி சாப்பிடும்போது கரோடினீமிய என்ற பிரச்சனை உண்டாகிறது. இதனால் உள்ளங்கைகள் மஞ்சளாக மாறுவது இதன் அறிகுறிகளில் ஒன்று.

அதேபோல் தொடர்ச்சியாக கரோடின் மாத்திரை சாப்பிடும்போது அது புற்று நோய் தாக்கும் ஆபத்துக்களையும் தருகிறது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

 தலைவலி :

தலைவலி :

அதிக அளவு விட்டமின் ஏ சாப்பிடும்போது உண்டாகும் ரத்த அழுத்தத்தால் , நரம்புகள் பாதிப்புள்ளாகி தலைவலியை தருகிறது. தொடர்ச்சியான தலைவலி,கண் வறட்சி, ஆகியவை உண்டாகும்.

சரும அலர்ஜி :

சரும அலர்ஜி :

அரிப்பு தடிப்பு போன்ற சரும அலர்ஜிகள் உண்டாகும். சருமம் அதிகமாக வறண்டு போகும். உதடுகளில் வெடிப்பு ஏற்படும். சருமம் மிருதுத்தன்மை இழந்து கரடுமுரடாக காணப்படும்.

எலும்புகள் பலவீனம் :

எலும்புகள் பலவீனம் :

ஹைபரோஸ்டோஸிஸ், அர்த்ரால்ஜியா போன்ற எலும்பு சம்பந்தப் பட்ட நோய்கள் உண்டாகும்.

மிக அதிகமான விட்டமின் ஏ கால்சியம் எலும்புகளில் சேரப்படுவதை தடுக்கிறது. இதனால் எலும்பு பலமிழந்து எளிதில் முறிவுகள் குறிப்பாக குழந்தைகளுக்கு உண்டாகும்.

தைராய்டு பிரச்சனை :

தைராய்டு பிரச்சனை :

அதிகப்படியான் விட்டமின் ஏ அதிக தைராய்டு சுரப்புதலை தூண்டும். இதனால் உடல் பருமன் அதிகமாகி, பல ஹார்மோன் மாற்றங்கள் உண்டாக்கி உடல் நிலையை பாதிக்கும்.

நரம்பு சம்பந்த நோய்கள் :

நரம்பு சம்பந்த நோய்கள் :

அதிப்படியான பதட்டம், நரம்புத் தளர்ச்சி உண்டாகும். அதேபோல் ரெட்டினால் அளவு அதிகரித்து அசாதரண சூழ் நிலையை கண்களில் உண்டாக்கி கண் பார்வையை பாதிக்கச் செய்யும்.

இந்த அறிகுறிகள் தோன்றும்போதே உடலில் விட்டமின் ஏ அளவை குறைத்துக் கொண்டால் 4 வாரங்களில் இந்த அறிகுறி மற்றும் பாதிப்புகள் மெல்ல மறைந்துவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Side effects of vitamin A toxicity

Impacts of Vitamin A toxicity to your body
Story first published: Wednesday, October 12, 2016, 14:45 [IST]
Subscribe Newsletter