Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
சிறுநீரக கற்களை கரைக்க இந்த ஜூஸை தினமும் அரை டம்ளர் குடித்தால் போதும்!
கால்சியம் கற்கள், ஸ்ட்ரக்டிவ் கற்கள், யூரிக் அமிலம் கற்கள், சிஸ்டைன் கற்கள் மற்றும் மற்றவை என சிறுநீரக கற்களில் பல வகை கூறப்படுகின்றன. இதில், பெரும்பாலும் கால்சியம் கற்கள் தான் உண்டாகின்றன. இது உணவு பழக்காத்தால் உண்டாவது.
ஸ்ட்ரக்டிவ் கற்கள் சிறுநீர் பாதை தொற்று காரணமாக உண்டாகிறது. அதிக புரதச்சத்து உணவு டயட், குறைவாக நீர் குடிப்பது, சரியான அளவில் நீராகாரம் எடுத்துக் கொள்ளாமல் இருப்பதால் யூரிக் அமிலம் கற்கள் உண்டாகின்றன.
சிஸ்டைன் வகையிலான சிறுநீரக கற்கள் பரம்பரை அல்லது மரபணு சார்ந்து உருவாவது. இதுப்போக அரிதாக ஏற்படும் சில வகை சிறுநீரக கற்களும் இருக்கின்றன....

சிட்ரிக் அமிலம்!
சிட்ரிக் அமிலத்திற்கு கற்கள் உருவாவதை தடுக்கும் தன்மை உள்ளை. இது கற்கள் உருவாவதை தடுப்பது மட்டுமின்றி, ஆரம்பக் கட்டத்திலேயே உருவான கற்களை சிறிது, சிறிதாக உடைக்கவும் செய்யும்.
சிறுநீரில் அதிக சிட்ரிக் அமிலம் இருப்பது, சிறுநீரக கற்கள் புதிதாக உருவாவதை எதிர்த்து பாதுகாக்கிறது.

சிறுநீரக கற்கள்!
சிட்ரிக் அமிலம், சின்ன, சின்ன கற்கள் கூட சிறுநீரக கற்களாய் அபாயமாக மாறுவதை தடுத்து உதவுகிறது. மேலும், சின்ன, சின்ன கற்கள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து பெரிதாக ஆவதையும் இது தடுக்கிறது.

எலுமிச்சை!
எலுமிச்சையில் அதிக சிட்ரிக் அமிலம் இருக்கிறது. மருந்தியல் அளவிலான சிட்ரிக் அமிலம், பொட்டாசியம் சிட்ரேட். இது சிறுநீரக கற்களை கரைக்க உதவுகிறது.
இதை மருந்தாக நீங்கள் வாங்கி உட்கொள்ளும் போது ஏறத்தாழ 12 மாத்திரைகள் வரை உட்கொள்ள வேண்டும் என அறிவுரைக்கப்படலாம்.

ஜூஸ்!
நான்கு அவுன்ஸ் சுத்தமான எலுமிச்சை ஜூஸ்-ல் இருக்கும் அதே அளவு சிதறிக் அமிலம் தான், மருந்தியல் முறை சிகிச்சையிலும் இருக்கிறது.

குடிக்கும் முறை!
இரண்டு அவுன்ஸ் எலுமிச்சை ஜூஸில், ஆறு அவுன்ஸ் நீர் கலந்து தினமும் காலை, மாலை இருவேளை குடித்து வர வேண்டும். இது, சிறுநீரக கற்கள் உண்டாகாமல் தடுக்கும். கற்களை கரைக்கவும் உதவும்.

குறிப்பு:
ஒவ்வொருவரின் உடல்நிலை மற்றும் சிறுநீரக கற்களின் தன்மை அல்லது தாக்கத்தின் வீரியம் குடித்து மருத்துவ முறை அல்லது சிகிச்சையின் அளவு வேறுபாடும். எனவே, மருத்துவரிடம் ஆலோசித்துக் கொள்வது நல்லது.



Click it and Unblock the Notifications