கல்லீரலை ஐந்தே நாட்களில் சுத்தம் செய்ய உதவும் அற்புத ஜூஸ்!

Posted By:
Subscribe to Boldsky

ஏன் கல்லீரலை சுத்தம் செய்ய வேண்டும்? நமது உடலில் இருக்கும் முக்கியமான உறுப்புகளில் முதன்மையானது கல்லீரல். இது நமது உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றி, உடற்சக்தியை உற்பத்தி செய்யும் செயல்பாட்டை செய்து வருகிறது.

புகைத்து, புகைத்து பொசுங்கிப் போன நுரையீரலை சுத்தம் செய்யும் உணவுகள்!

ஒருவேளை நாம் கல்லீரலை சரியாக பாதுகாக்காமல் இருந்தால், மெல்ல, மெல்ல உங்கள் உடலின் செயற்திறனில் குறைபாடு ஏற்பட ஆரம்பிக்கும். இதனால், மற்ற பாகங்களின் செயற்திறனிலும் தீய தாக்கங்கள் உண்டாகும் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.

குடலை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுகள்!

மேலும், கல்லீரலை சுத்தமாக வைத்துக் கொள்ளாமல் இருந்தால் கீழ் கூறப்பட்டுள்ள நோய் / ஆரோக்கிய பாதிப்புகள் உண்டாக நிறைய வாய்ப்புகள் உண்டு...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆரோக்கிய பாதிப்புகள்

ஆரோக்கிய பாதிப்புகள்

இழைநார் வளர்ச்சி; கல்லீரல் உள்ளே கொழுப்பு; ஹெபடைடிஸ்; கல்லீரல் திசுக்களில் கோளாறு; புற்றுநோய்; வில்சனின் நோய்; ஆல்ஃபா 1 - அன்டிட்ரிப்சின்.

கல்லீரல் நோய்கள்

கல்லீரல் நோய்கள்

கல்லீரல்நோய் உண்டாக காரணியாக இருப்பவை,

நச்சுக் கலந்த போதை பொருட்கள், ஹெபடைடிஸ், மதுசார்பற்ற கொழுப்பு கல்லீரல் நோய், பரம்பரை / மரபணு ரீதியான கல்லீரல் இயல்பு நிலை மாற்றம்.

கல்லீரல் நோய் அறிகுறிகள்!

கல்லீரல் நோய் அறிகுறிகள்!

குமட்டல்; வாந்தி; எடை இழப்பு; மூட்டு வீக்கம்; காய்ச்சல்; கருமையான சிறுநீர்; உடல்சோர்வு; இரத்த வாந்தி ; இரத்த சோகை; மன நிலை மாற்றம்; மேல் வலது கை வலி.

கல்லீரலை சுத்தம் செய்வது எப்படி?

கல்லீரலை சுத்தம் செய்வது எப்படி?

கல்லீரலை சுத்தம் செய்ய முதலில் நீங்கள் சோடா பானம், மது, கொழுப்பு உணவுகளை தவிர்க்க வேண்டும். மேலும், நாம் அடுத்து கூறியிருக்கும் ஜூஸை குடித்து வந்தால் கல்லீரலை எளிமையாக சுத்தம் செய்ய முடியும்.

தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

1.மீடியமான அளவு பீட்ரூட் ஒன்று;

2.சிறிய அளவிலான கேரட் ஒன்று அல்லது இரண்டு;

3.ஓர் பெரிய ஆப்பிள்;

4.ஒரு டம்ளர் தண்ணீர்.

செய்முறை:

செய்முறை:

முதலில் பீட்ரூட், கேரட், ஆப்பிள் மூன்றையும் நன்கு ஸ்மூத்தாக ஆகும் வரை ஜூசர் மிக்சரில் போட்டு அரைத்துக்கொள்ளவும். இதை தண்ணீர் கலக்காமலேயே நீங்கள் செய்யலாம். பிறகு உங்களுக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள்.

உட்கொள்ளும் முறை:

உட்கொள்ளும் முறை:

இந்த ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும். மேலும், இந்த ஜூஸை குடிப்பதற்கு முன்னர், ஒரு டேபிள்ஸ்பூன் ஆலிவ் ஆயிலில் அரைவாசி எலுமிச்சை பழத்தை பிழிந்து கலந்து குடிக்க வேண்டும்.

நன்மைகள்!

நன்மைகள்!

தொடர்ந்து ஐந்து நாட்கள் இதை குடித்து வர உங்கள் கல்லீரலில் இருக்கும் நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி, உங்கள் கல்லீரல் நன்கு செயல்படும். இதனால், உங்கள் உடலில் இருக்கும் நச்சுக்களையும் வேகமாக வெளியேற்ற முடியும். உடல் புத்துணர்ச்சி அடையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Regenerate Your Liver In 5 Days With This Amazing Recipe

Regenerate Your Liver In 5 Days With This Amazing Recipe, read here in tamil.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter