முருங்கை இலையின் இந்த அற்புத நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

பாட்டி வைத்தியங்களில் இருந்து பாக்கியராஜ் படங்கள் வரை முருங்கையின் நன்மைகள் கூறப்படாத இடமே இல்லை என்று தான் கூற வேண்டும். முருங்கை காய் மட்டும் இன்றி, முருங்கை பூ, முருங்கை இலையிலும் பல அற்புத நன்மைகள் புதைந்திருக்கின்றன.

Recent Study Claims Moringa Leaves Helps to Boost up Intercourse Activity

பாட்டி வைத்தியங்களில் மட்டும் இருந்து முருங்கையின் நன்மைகளை இப்போது உலக மருத்துவ ஆய்வாளர்களும் கண்டு வியக்கின்றனர். பார்மசி மற்றும் மருந்து அறிவியல் பத்திரிக்கையில் வந்த ஆய்வறிக்கையில், முருங்கை இலைகள் ஆண்மை அதிகரிக்கவும், தாம்பத்திய செயல்பாட்டை ஊக்குவிக்கவும் பெருமளவு உதவுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்மை அதிகரிக்க மட்டுமல்ல, உடல் நலத்தை மேம்படுத்த பல அற்புத ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது முருங்கை இலைகள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நீரிழிவு!

நீரிழிவு!

முருங்கை இல்லை உடலில் சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. எனவே, நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவு குறைக்கவும், கொலஸ்ட்ரால் குறைக்கவும் முருங்கை இலையை உணவில் சேர்த்து வரலாம்.

இதயம்!

இதயம்!

இதயத்திற்கு நல்ல ஆரோக்கியத்தை தரவல்லது முருங்கை இலைகள். இது கொலஸ்ட்ரால் அளவை குறைத்து இதய நலன் மேலோங்க உதவுகிறது. மேலும், தமனிகள், இரத்த குழாய்கள் வலுவையும் அதிகரிக்கிறது.

மூளை!

மூளை!

முருங்கை இலைகள் மூலம் நமது உடலுக்கு கிடைக்கும் ஆன்டி-ஆக்சிடென்ட் நியூரோவை மேம்படுத்தி, அதன் ஆக்டிவிட்டிகளுக்கு ஊக்கமளிக்கிறது. அல்சைமர் பிரச்சனை உள்ளவர்களுக்கு முருங்கை இலைகள் நல்ல தீர்வளிக்க வல்லது.

கல்லீரல்!

கல்லீரல்!

முருங்கை இலைகள் கல்லீரலை பாதுகாத்து, அதில் நச்சுக்கள் அதிகம் சேராமலும், அதிக அழுத்தம் உண்டாகாமலும் காத்து, கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்பட செய்கிறது.

எப்படி உட்கொள்ளலாம்!

எப்படி உட்கொள்ளலாம்!

முருங்கை இலைகளை நீங்கள் உணவில் சேர்த்து உண்ணலாம், வேக வைத்து சாப்பிடலாம், அல்லது அதை காய வைத்து அரைத்து பானமாக, டீயாக பருகலாம். முருங்கை இலைகள், உடலில் இருந்து நச்சுக்களை அழித்து, நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேலோங்க வைக்கிறது.

இதர நன்மைகள்!

இதர நன்மைகள்!

முருங்கை இலைகள் வாந்தி, மலமிளக்க பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வளிக்க வல்லது.

முருங்கை ஈர் பிரச்சனைகளுக்கும் நல்ல பலன் அளிக்கிறது. மேலும், சரியாக சிறுநீர் கழிக்க முடியாமல் இருந்தால், அதை பெருக்க உதவுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Recent Study Claims Moringa Leaves Helps to Boost up Intercourse Activity

Recent Study Claims Moringa Leaves Helps to Boost up Intercourse Activity
Please Wait while comments are loading...
Subscribe Newsletter