உடல் எடையை குறைக்க விரும்புகிறீர்களா? புரதம் அதிகம் சாப்பிடுங்க...

Written By: Hemalatha V
Subscribe to Boldsky

உடல் எடை கூடுவதற்கு முக்கிய காரணங்கள் போதிய உடற்பயிற்சி இல்லாதது மற்றொன்று அதிகமாய் சாப்பிடுவது. இதுவே சிலருக்கு நோயாகவே மாறிவிடும்.

ஏதாவது ஒன்றை கொறித்துக் கொண்டேயிருக்கத் தோன்றும். உண்பதற்கு அடிமையாகிவிடக் கூடும். விரைவில் உடல்பருமனாகிவிடுகிறது. உடல் பருமனாகிவிட்டால் குறைப்பது எளிதல்ல.

Increase intake of protein food to reduce weight

பசிக்காக மட்டுமே அனைவரும் உணவு உண்பதில்லை. வேறு காரணங்களும் இருப்பதாக கூறுகின்றனர். பேசிக் கொண்டே ஏதாவது சாப்பிடுவது, டென்ஷன் போக்க சாப்பிடுவது, சோர்வு ஏற்படும்போதெல்லாம் சாப்பிடுவது என உடல் பருமனாய் இருப்பவரகள் நிறைய காரணங்களைக் கூறுகின்றனர்.

Increase intake of protein food to reduce weight

அடிக்கடி உண்ணாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? இதற்குத்தான் அமெரிக்காவில் உள்ள பர்டியூ பல்கலைக்கழக்ம் ஆய்வு செய்து நமக்காக ஒரு வழியினை கண்டுபிடித்திருக்கிறது.

உயர் ரக புரோட்டின் உணவுகளை சாப்பிட்டால், பசி ஏற்படுவதை குறைக்கும். உடலில் படியும் கொழுப்புக்களை கரைகிறது. உடல் எடை குறையும் என புதிய ஆய்வு கூறுகிறது.

உயர் ரக அமினோ அமிலங்கள் என்றால் என்ன தெரியுமா?

பல்வேறு அமினோ அமிலங்கள் கலந்ததுதான் புரோட்டின் என்று சொல்கிறோம். இதில் சில அமினோ அமிலங்கள் நம் உடலில் உருவாகாது. அவற்றை உணவிலிருந்துதான் பெற வேண்டும். அந்த வகையான அமிலோ அமிலங்கள் "முக்கிய அமினோ அமிலங்கள் " என்று பெயர்.

Increase intake of protein food to reduce weight

இந்த முக்கிய அமினோ அமிலங்களை கொண்ட உணவுகளைத்தான் முழுமையான அல்லது உயர் ரக புரோட்டின் என்று சொல்கிறோம்.

புரோட்டின் நிறைந்த உணவுகள் :

முட்டை, இறைச்சி, பீன்ஸ், நட்ஸ், யோகார்ட், பருப்புவகைகள், பட்டாணி, ஆகியவை அதிகமாக் புரோட்டின் சத்தை கொண்டுள்ளது.

Increase intake of protein food to reduce weight

குறைவான புரதச் சத்து உணவினை சாப்பிட்டாலே வயிறு நிறைந்துவிடும். புரோட்டின் உடலில் எல்லா ஹார்மோன்களையும் தூண்டுகிறது. இதனால் உடலின் மொத்த செயல்களும் தூண்டப்பட்டு, ஆரோக்கியமான தேகத்திற்கு உதவிபுரிகிறது என்று ஆய்வு கூறுகின்றது.

Increase intake of protein food to reduce weight

புரோட்டின் உணவுகளை அதிகமாகவும் எடுத்துக்கக் கூடாது. இவை உடலில் அமிலத் தன்மையை ஏற்படுத்தும். நெஞ்செரிச்சல், வாய்வு போன்றவற்றை உருவாக்கும். மிதமான அளவு புரத உணவுகளை எடுத்துக் கொண்டாலே பசியை ஏற்படுத்தாது. உடல் எடையை குறைக்கும் என ஆய்வு செய்த ரிசார்ட் மேட்ஸ் என்ற விரிவுரையாளர் கூறுகிறார்.

புரோட்டின் உணவுகள் உடல் எடையை மட்டும் குறைப்பதில்லை பல்வேறு உடல் ஆரோக்கியத்திற்கும் முக்கியமானது. குறிப்பாக இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. ஸ்ட்ரோக் வராமல் தடுக்கிறது.

English summary

Increase intake of protein food to reduce weight

Increase intake of protein food to reduce weight
Subscribe Newsletter