அதிக புரத உணவுகள் சாப்பிட்டால் உண்டாகும் பிரச்சனைகள் என்ன தெரியுமா?

Written By:
Subscribe to Boldsky

புரோட்டின் நமது உடலுக்கு மிக அவசியமான சத்து. உடல் வளர்ச்சிக்கு, திசு மற்றும் ஹார்மோன் செயல்பாடுகளுக்கு மிக முக்கியமாகும்.

Impacts of Intake of high amount Protein

புரதச் சத்து குறைந்தால் உடல் வளர்ச்சி, உயரம் தடை படும். உடல் மெலிந்து காணப்படும். அதே போல் புரோட்டின் அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் உண்டாகும் விளைவுகள் பற்றி தெரியுமா? இதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வாய் துர்நாற்றம் :

வாய் துர்நாற்றம் :

கார்போஹைட்ரேட் உணவு குறைத்து அதிக புரத உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது , கீட்டோ மெக்கானிசம் உடலில் நடைபெறும்.

அதாவது உடல் சக்திக்காக கொழுப்பை எரிக்க ஆரம்பிக்கும். இந்த வளர்சிதை மாற்றத்தில் கீட்டோன் அதிகமாக உற்பத்தியாகும். இவை வாய் துர் நாற்றத்தை உண்டாக்கும்.

மன உளைச்சல் உண்டாகும் :

மன உளைச்சல் உண்டாகும் :

நமது மூளை செரடோனின் ஹார்மோனை உற்பத்தி செய்ய கார்போஹைட்ரேட் தேவை. ஆனால் புரத உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளும்போது, செரடோனின் உற்பத்தி குறையும். இதனால் எரிச்சல், கோபம், மன உளைச்சல் உண்டாகும்.

சிறு நீரகத்திற்கு அதிக வேலை :

சிறு நீரகத்திற்கு அதிக வேலை :

புரத உணவுகள் அதிக நைட்ரோஜனை உற்பத்தி செய்யும். நீங்கள் அளவோடு எடுப்பதை விட அதிகமாக புரத உணவுகள் சாப்பிடும்போது அவை அதிக நைட்ரோஜனை உண்டாக்கும். இதனால் சிறு நீரகம் இருமடங்கு வேலையை செய்ய வேண்டியதாக இருக்கும்.

 ஜீரண மண்டலங்கள் சிரமத்தை மேற்கொள்ளும் :

ஜீரண மண்டலங்கள் சிரமத்தை மேற்கொள்ளும் :

அதிகமாக பீன்ஸ், பட்டாணி, மற்றும் காய்கறிகளை தினமும் சாப்பிடும்போது, அதிக அமிலம் உருவாகும். இதனால் அசிடிட்டி, வாயு ஆகியவை உண்டாக்கி வயிற்ரு உப்புசம் அஜீரணம் ஆகிய்வற்றை ஏற்படுத்தும்.

உடல் எடை அதிகரிக்கும் :

உடல் எடை அதிகரிக்கும் :

புரதம் எடுத்துக் கொண்டால் உடல் எடை குறையும் என கேள்விப்படுவீர்கள். ஆனால் அதிக புரத உணவுகள் உடல் எடையை அதிகரிக்கும் என பல ஆய்வுகள் கூறுகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Impacts of Intake of high amount Protein

These things would happen when you take high amount of protein rich foods
Story first published: Thursday, November 3, 2016, 15:30 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter