நொறுக்கு தீனிகளை சாப்பிடாமல் எப்படி கட்டுபடுத்தலாம்?

Written By: Hemalatha V
Subscribe to Boldsky

டயட்டில் இருப்பவர்கள் சரியான மணிக்கு எழுந்து சரியான நேரத்திற்கு சாப்பிட்டு, நன்றாக தொப்பலாக நனையும்படி ஜிம்மில் உடற்ப்யிற்சி செய்வார்கள். எல்லாம் சரிதான். ஆனால் நொறுக்கி தீனிகள் திண்பதில் ஒட்டு மொத்த கட்டுகோப்பையும் கோட்டை விட்டுவிடுவார்கள்.

How to Stop craving ?

உடற்பயிற்சி செய்வதால் அதிக பசி என்று அவர்களாகவே நினைத்து நொறுக்குக் தீனிகளை தேடிப்போவார்கள். இதனால் உடல் எடை குறைய வாய்ப்பேயில்லை. எத்தனை மாதங்கள் ஆனாலும் உடல் குறையாமல் பின்னர் ஜிம்மிற்கு போவதை விட்டுவிடுவார்கள். ஆனால் நொறுக்குத் தீனியை தொடர்வார்கள்.

என்ன செய்தாலும் இப்படி சாப்பிடுவதை கட்டுப்படுத்தமுடியவில்லை என கவலைபடுகிறீர்களா? அப்படியென்றால் இங்கே குறிப்பிடும் டிப்ஸ்களை முயன்று பாருங்கள்.

நீர் :

உங்களுக்கு தெரியுமா? நேரம் கெட்ட வேளையில் உங்களுக்கு பசி எடுத்தால் நீங்கள் போதிய அளவு நீர் குடிக்கவில்லையென அர்த்தம். ஆகவே தினமும் நிறைய நீர் குடிக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். இதனால் எண்ணெய் பதார்த்தங்கள் சாப்பிடும் ஆசை வராது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

How to Stop craving ?

மென்று சாப்பிட வேண்டும் :

நிறைய பேர் அவசர கதியில் மெல்லாமல் முழுங்கி விடுவார்கள். இதனால் போதிய அளவு வயிற்றிற்கு தராமலேயே உணவு அடைத்துவிடும். இதனால் குறைந்த அளவே உண்பீர்கள் வேகமாய் பசி எடுக்கும். ஆகவே மெல்ல மென்று சாப்பிட வேண்டும். அப்போதுதான் ஜீரணமும் நன்றாக நடக்கும். மேலும் துண்டாக்கிய கேரட், வெள்ளரி ஆகியவை மெல்ல மென்றுதான் உண்ண வேண்டும். ஆகவே இந்த மாதிரியான காய்களை நீங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

How to Stop craving ?

உடற்பயிற்சி செய்வதற்கு முன் :

நீங்கள் மாலையில் உடற்ப்யிற்சி செய்பவர்களென்றால், சீக்கிரமே மதிய உணவை உண்ண வேண்டாம். சற்று காலம் தாழ்த்தி 2 மணிக்கு மேல் உண்ணுங்கள். இதனால் பசி எடுக்காது. அப்படியும் பசி உண்டானால் நட்ஸ் வகைகளையும் பழங்களையும் சாப்பிடுங்கள். இவை வயிற்றை நிறைக்கும். உடல் எடையையும் அதிகரிக்கச் செய்யாது.

How to Stop craving ?

மகிழ்ச்சியான நிலையில் தக்க வைத்துக் கொள்ளுங்கள் :

சாப்பிடும்போது உள்ள உங்கள் மன நிலை நீங்கள் சாப்பிடும் அளவை பாதிக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது. சாப்பிடும்போது கோபமாகவோ வெறுப்பாகவோ சாப்பிட்டால் அது உடலில் ஒட்டாது. நீங்கள் சாப்பிட்டது போலவே உணர மாட்டீர்கள்.

How to Stop craving ?

ஆகவே எது எப்படியென்றாலும் சாப்பிடும் நேரத்தில் மகிழ்ச்சியான சூழ் நிலையை உருவாக்கிக் கொள்ளுங்கள். இனிமையான இசையை கேட்டுக் கொண்டே சாப்பிடலாம். அல்லது மகிழ்ச்சியாக உங்கள் குடும்பத்தினருடன் அமர்ந்து சிரித்தபடி சாப்பிடுங்கள். வயிறும் மனதும் நிறையும்.

English summary

How to Stop craving ?

How to control craving and make healthy choice?
Story first published: Tuesday, August 23, 2016, 18:20 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter