எலும்பு முறிவை விரைவில் சரிப்படுத்த நீங்கள் தினமும் செய்ய வேண்டியவை!!

Written By: Hemalatha V
Subscribe to Boldsky

விபத்தினால் உடைந்த எலும்புகள் கூடுவதற்கு மாதக் கணக்கில் ஆகும். சரியான உணவு எடுத்துக் கொள்ளாதபோது தாமதமாக எலும்புகள் கூடும் அல்லது பலவீனமான எலும்புகள் உருவாகும். இதனால் அந்த இடத்திலேயே சாதரண அடிப்பட்டாலும் மீண்டும் எலும்பு உடைய வாய்ப்புகள் இருக்கிறது.

எனவே உண்ணும் உணவுகள், உடைந்த இடத்தில் மீண்டுல் எலும்பு வளர மிகப் பெரிய பங்கு வகிக்கின்றது. எந்த மாதிரியான உணவுகளை நீங்கள் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உணவு -1

உணவு -1

எலும்புகள் பெரும்பான்மையாக கால்சியம், மெக்னீசியம் பாஸ்பரஸ் ஆகியவற்றால் உருவாகிறது. இந்த சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுகள் கட்டாயம் தினமும் சாப்பிட வேண்டும். அதோடு இந்த சத்துக்கள் உடம்பில் வெறும் உணவுகளால் மட்டும் பெற்றிட முடியாது. விட்டமின் டி தான் இந்த சத்துக்களை உடலுக்கு உறிய உதவி புரிகிறது. எனவே விட்டமின் டி நிறைந்த சூரிய ஒளிபெறும்படியார்த்துக் கொள்ளுங்கள். அசைவம் சாப்பிடுபவர்கள் மீன் தினமும் சாப்பிடுவது நல்லது. ஒரு சேர விட்டமின் டி, கால்சியம் மற்றும் ஒமேகா-3 ஆகியவை கிடைக்கும்.

உணவு - 2

உணவு - 2

பால் பொருட்கள் தினமும் அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள். சீஸ், பனீர் ஆகியவை விரைவில் எலும்புகளை பலப்படுத்தும். அதேபோல், மோர், தயிர் ஆகியவற்றில் அதிக கால்சியம் உள்ளதால், இவற்றை அதிகமாக உபயோகிக்க வேண்டும்.

உணவு -2

உணவு -2

தினமும் ஏதாவது ஒரு கீரை உணவை சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் கால்சியம் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் அதிக அளவு கிடைக்கும். அடிப்பட்ட இடத்தில் உள்ள வீக்கம் மற்றும் காயத்தை ஆற்ற கீரை உணவுகள் மிக அவசியம்.

உணவு -4

உணவு -4

முட்டை, எலுமிச்சை ஆகியவை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதிலுள்ள இரும்புச் சத்து மற்றும் விட்டமின் சி சத்துக்கள் நோய் எதிர்ப்பு செல்களை பலப்படுத்தும். இதனால் பாதிக்கப்பட்ட இடத்தில் தொற்று , வீக்கம் ஏற்படாமல் தடுக்கும். ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும்.

பிசியோதெரபி :

பிசியோதெரபி :

உண்ணும் உணவோடு உங்கள் மருத்துவரையை அணுகி எந்த விதமான பிஸியோதெரபி பயிற்சி செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு அதனை தினமும் செய்யுங்கள். இவை எலும்புகளில் உண்டாகும் விறைப்பை கட்டுப்படுத்தி, தசைகளுக்கிடையே நெகிழ்வுத் தன்மையை அதிகப்படுத்தும். இதனால் எலும்பு இணைப்பில் தேக்கம் ஏற்படாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How to heel Bone Fracture Faster

Foods to consume to Heal Bone fracture
Please Wait while comments are loading...
Subscribe Newsletter