For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வயிறு உப்புசம் ஏற்படுவது எதனால் ? எப்படி தடுக்கலாம்?

|

நிறைய கர்ப்பிணிகள் மற்றும் குண்டானவர்களுக்கு பல சமயங்களில் வயிற்றில் காற்று அடைத்த பலூன் போல் இருக்கும். வயிறை இறுகி பிடித்தார்போல் அவதிப்படுவார்கள். இதற்கு காரணங்கள் பல உண்டு.

எல்லாருக்கும் ஒரே மாதிரியான காரணங்களால் வயிறு உப்புதல் ஏற்படுவதில்லை, மனிதருக்கு மனிதர் இது வித்யாசப்படும்.

 How can you beat bloat

அதிக அளவு சாப்பிடுவதால் உண்டாகும். ஒரு வேளை உணவிற்கும், மற்றொரு வேளை உணவிற்கும் இடையே அதிக இடைவெளி இருந்தால் இந்த மாதிரி ஏற்படும்.

அது தவிர அதிகமான கொழுப்பு, மசாலா உணவுகள் சாப்பிட்டாலும் வாயு அடைத்துக் கொள்ளும்.
நீர் குறைவாக எடுத்துக் கொள்ளும்போது, அல்லது அதிக நீரிழப்பு உணாகும்போது வயிறு உப்புசம் உண்டாகும்.

எந்த உணவு எந்த பருவ காலத்தில் :

பருவ காலத்திற்கு தகுந்தாற்போல் சாப்பிட வேண்டும். குளிர் காலத்தில் அதிக பசி எடுக்கும். அந்த சமயங்களில் நிறைய சாப்பிடுவதால் வயிறு உப்புசம் உண்டாகும். வெயில் காலங்களில் நிறைய மசாலா உணவுகளையும் கடைகளிலும் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.

காய்கறிகளில் சாப்பிடக் கூடாதவை :

ஏற்கனவே வாய்வுத் தொல்லையால் அவதிப்படுபவர்கள், புருகோலி, கேரட், முட்டை கோஸ், முளைகட்டிய தானியங்கள், காலி ஃப்ளவர் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். இவை இன்னும் அதிக வாய்வை கொடுத்து தாங்க முடியாத வலியை உண்டாக்கிவிடும்.

சர்க்கரை வியாதிகள் செயற்கை சர்க்கரையை சாப்பிடுவதைதவிர்க்க வேண்டும். இவை வயிறு உப்புசத்தை ஏற்படுத்துபவை.

அதேபோல், ரெடிமேட் உணவுகளிலுள்ள அதிகப்படியான ஃப்ரக்டோஸ் ஜீரணத்தை குறைத்துவிடும். இவைகளை கட்டுப்படுத்த வேண்டும். பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களும் , லாக்டோஸ் சகிப்புத்தன்மையற்றவர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்திவிடும்.

நார்சத்து கொண்ட காய் மற்றும் பழங்களில், ஜீரணிக்க நேரமெடுக்கும் கார்போஹைட்ரேட் உள்ளது. எனவே அதிகப்படியாக நார்சத்து கொண்ட காய் மற்றும் பழங்களை சாப்பிடும்போது, வயிறு உப்புசம் உண்டாகும்.

கோதுமை, ராகி போன்ற தானிய வகைகளை சாப்பிடலாம். மேலும் நிறைய நீர் குடிக்க வேண்டும். இவை வயிற்றில் வாயு உருவாவதை தடுக்கும்

English summary

How can you beat bloat

How can you beat bloat
Story first published: Wednesday, August 3, 2016, 9:25 [IST]
Desktop Bottom Promotion