முள்ளங்கியை பச்சையாகத்தான் சாப்பிட்டால்தான் நல்லது!!ஏன் தெரியுமா?

Written By:
Subscribe to Boldsky

முள்ளங்கிக் கிழங்கின் இலை, கிழங்கு, விதை முதலியவை மருத்துவத்தன்மை நிறைந்தவை. பசியைத் தூண்டும் இயல்புடையவை.

இவற்றை உட்கொண்டால் உடல் முழுவதும் சுத்தமான இரத்தம் எப்போதும் பாய்ந்தோடிக் கொண்டிருக்கும். இந்த இரு குணங்களுக்காகவே முள்ளங்கிக் கிழங்கை உலகம் முழுவதும் விரும்பிச் சாப்பிடுகிறார்கள்.

health benefits of radish

சுத்தமான இரத்தத்தால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. இதனால் தொடர்ந்து உடல் நலப் பாதுகாப்புடன் வாழ முடிகிறது. முள்ளங்கி பல நோய்களை கட்டுப்படுத்துகிறது. அவற்றை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிறு நீரக கோளாறு நீங்க :

சிறு நீரக கோளாறு நீங்க :

சிறு நீரக கோளாறு இருப்பவர்கள் தொடர்ந்து தினமும் ஒரு கப் முள்ளங்கி சாறு அருந்தி வந்தால் எரிச்சல் மற்றும் சிறு நீரக வியாதிகள் நீங்கும்.

நுரையீரல் தொற்றுக்கு :

நுரையீரல் தொற்றுக்கு :

இருமல், நெஞ்சு சம்பந்தமான நோய்கள் (இதயவலி) வயிற்று உப்புசம் தொண்டைப்புண், தொண்டைக்கட்டு முதலியவை குணமாக ஒரு தேக்கரண்டி முள்ளங்கிக் கிழங்குச் சாறுடன் அதே அளவு தேனையும் கலந்து சாப்பிட வேண்டும்.

சிறிது உப்பும் இதில் சேர்க்கப்படவேண்டும். தினசரி மூன்று வேளை இது போல் சாப்பிட்டால் மேற்கண்ட கோளாறுகள் குணமாகும். இது மிக உயர்தரமான நன்மையைத் தரும் மருத்துவமுறையாகும்.

சரும வியாதிகளுக்கு :

சரும வியாதிகளுக்கு :

சரும வியாதிகளுக்கு மகத்துமான நன்மைகளை தருகிறது சரும வியாதிகள். படர்தாமரை நோய், முகத்தில் உள்ள கருப்புள்ளிகள், தேமல், மங்கு, எண்ணெய் வடிதல் ஆகியவற்றின் மீதும் முள்ளங்கி விதைப்பசையைத் தடவினால் குணமாகும்.

முள்ளங்கி விதையில் ஒரு வகையான பிளீச்சிங் பொருள் இருக்கிறது. அதுவே, தோல் தொடர்பான நோய்களையும் குணமாக்குகிறது.

 முள்ளங்கியை சமைக்கலாமா?

முள்ளங்கியை சமைக்கலாமா?

முள்ளங்கியை வெள்ளரிக்காயைப் போல் பச்சையாகத்தான் சாப்பிட வேண்டும். வேக வைத்து சாப்பிட்டால் அதிலுள்ள விட்டமின் மற்றும் மினரல்கள் அழித்துவிடும். கேரட்,வெள்ளரி ஆகியவற்றுடன் கலந்து சேலட் செய்து சாப்பிடுவதால் மிகவும் நன்மைகளைத் தரும்.

குழந்தைகளுக்கு அறிவாற்றல் பெருக :

குழந்தைகளுக்கு அறிவாற்றல் பெருக :

குழந்தைகள் மந்தபுத்தி இல்லாமல் சுறுசுறுப்பாய் இருந்து படிக்கவும், நன்கு உடலுறுதியுடன் வளரவும் முள்ளங்கிக் கிழங்குடன் முள்ளங்கிக்கீரையையும் அடிக்கடி உணவில் சேருங்கள். காரணம், கீரையில் பாஸ்பரஸ், கால்சியம் சத்துக்கள் அதிக அளவில் உள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

health benefits of radish

Health benefits of eating raw radish
Story first published: Thursday, December 8, 2016, 12:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter