தேன் கலந்த சுரைக்காய் சாறு குடிப்பதால் உண்டாகும் நன்மைகள் தெரியுமா?

Written By: Hemalatha V
Subscribe to Boldsky

சுரைக்காய் குடுவையை போன்ற வடிவத்தில் இருக்கிரது. அது நமது உடலின் ஒரு உறுப்பு போலவே கானப்படும். ஆமாம். கர்ப்பப்பை. இது தோற்றத்தில் மட்டுமல்ல, நிஜத்திலும் கர்ப்பப்பைக்கு வலு சேர்க்கக் கூடியது.

கர்ப்பப்பை பலஹீனமாக இருப்பவர்கள் சுரைக்காயை வாரம் தவறாமல் சேர்த்துக் கொண்டால் உடலுக்கு பல நன்மைகளைத் தரும். சுரைக்காயில் அதிக நீர்சத்து உள்ளது. சுரைக்காயில் தேன்  கலந்து செய்யப்படும் இந்த சுரைக்காய் ஜூஸ் குடிப்பதால் உண்டாகும் நன்மைகளை தெரிந்து கொள்ள விருப்பப்படுகிறீர்களா? இதோ படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சுரைக்காய் ஜூஸ் செய்யும் முறை :

சுரைக்காய் ஜூஸ் செய்யும் முறை :

சுரைக்காயை தோல் நீக்கி துண்டுகளாக்கி ஒரு டம்ளர் நீர் விட்டு அரைத்துக் கொள்ளுங்கள் இதனை வடிகட்டி அதனுடன் தேன் கலந்து குடிக்க வேண்டும். இதனை குடிப்பதால் உண்டாகும் நன்மைகளை தொடர்ந்து படியுங்கள்.

ஜீரண சக்தி அதிகரிக்கும் :

ஜீரண சக்தி அதிகரிக்கும் :

வாழைக்காய் வேணாம் வாய்வு, கத்திரிக்காய் அஜீரணம் என எடுத்ததெற்கெல்லாம் வயிற்றைப் பிடிப்பவர்கள் இந்த சுரைக்காய் ஜூஸை குடித்தால் கல்லையும் ஜீரணிக்கும் சக்தியை கொடுக்கும்.

உடல் எடையை குறைக்கும் :

உடல் எடையை குறைக்கும் :

சுரைக்காய் ஜூஸ் அதிக நீர்ச்சத்து கொண்டது. இது கொழுப்புகளைக் குறைக்கும். வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்.

 சிறுநீரக தொற்றிற்கு :

சிறுநீரக தொற்றிற்கு :

சிறுநீர் பாதை மற்றும் சிறு நீரகத்தில் உண்டாகும் கிருமிகளை வெளியேற்றும். நச்சுக்களை அகற்றும். இதனல் உண்டாகும் சிறு நீரக தொற்றை குணப்படுத்த முடியும்.

உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும் :

உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும் :

சுரைக்காய் மற்றும் தேன் இரண்டுமே ரத்த அழுத்தத்தை குறைப்பவை. ஆரோக்கியமான ரத்த ஓட்டத்தை தூண்டச் செய்வதால் ஆரோக்கியம் மேம்படும்.

கர்ப்பிணிகளுக்கு நல்லது :

கர்ப்பிணிகளுக்கு நல்லது :

இதில் தேவையான கால்சியம். இரும்பு சத்து, விட்டமின் இருப்பதால் கர்ப்பிணிகள் எடுத்துக் கொண்டால் கருவின் வளர்ச்சி நன்றாக இருக்கும். அளவு எவ்வளவு எடுத்துக் கொள்ள வேண்டுமென மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்று எடுத்துக் கொள்ளுங்கள்

 மன அழுத்தத்தை போக்கும் :

மன அழுத்தத்தை போக்கும் :

நரம்புகளில் உண்டாகும் இறுக்கங்களை போக்குகிறது. ஸ்ட்ரெஸ் ஹார்மோன் சுரப்பை கட்டுப்படுத்துகிறது.

கல்லீரல் பாதிப்புகளை ஆற்றும் :

கல்லீரல் பாதிப்புகளை ஆற்றும் :

கல்லீரலில் உண்டாகும் பிரச்சனைகளை சரிப்படுத்தும். வயிற்றில் உண்டாகும் புண்களை ஆற்றும். அல்சர் வராமல் தடுக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Health Benefits of Bottle gourd juice

Health Benefits of Bottle gourd juice
Story first published: Friday, September 2, 2016, 15:50 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter