Latest Updates
-
கேரளா ஸ்டைல் நாடன் சிக்கன் கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 09 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க அதிர்ஷ்ட படிக்கட்டில் வேகமாக ஏறப் போறாங்களாம் -
வார ராசிபலன் (09 August 2026- 15 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
மழைக்காலத்தில் பார்லர் போக நேரமில்லையா? அப்ப இந்த 5 ஃபேஸ் ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
தொங்கும் தொப்பையின் கொழுப்பை கரைக்க தினமும் ஆப்பிள், வெங்காயம் சாப்பிடுங்க!
ஆப்பிள் மற்றும் வெங்காயம் எப்படிப்பட்ட கலவை உணவு என சிலர் விந்தையாக யோசிக்கலாம். ஆனால், உடலை உறுதியாக வைத்துக் கொள்ள இந்த இரு உணவுகள் உதவும் அளவிற்கு வேறு எந்த பழமும், காய்கறியும் உதவுவதில்லை என் சமீபத்திய ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் கண்டரிந்துக் கூறியுள்ளனர்.
7 நாட்கள் வெறும் வயிற்றில் தேனில் ஊற வைத்த பூண்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!
ஆப்பிள் மற்றும் வெங்காயத்தில் இருக்கும் தனித்தன்மை உடைய ஃபிளாவனாய்டுகள் மூலம் நம் உடலுக்கு ஆற்றல் வாய்ந்த ஆதாயங்கள் நிறைய கிடைக்கின்றன என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்...
உலக மக்கள் கண்டு வியக்கும் இந்தியர்களின் 5 உணவுப் பழக்கங்கள்!

ஃபிளாவனாய்டுகளின் ஆற்றல்
காய்கறி மற்றும் பழங்களில் ஏறத்தாழ 6000-திற்கும் மேற்பட்ட ஃபிளாவனாய்டுகள் இருக்கின்றன. ஃபிளாவனாய்டுகளின் ஆற்றலில் மிக முக்கியமானது உடல் எடை குறைப்பு.

ஃபிளாவனாய்டுகளின் ஆற்றல்
உடல் எடை குறைக்க கிரீன் டீயில் பயன்படுவதற்கு காரணம் இதிலிருக்கும் ஃபிளாவனாய்டுகளும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கொழுப்பை கரைக்க
ஃபிளாவனாய்டில் இருக்கும் மற்றுமொரு முதன்மை பொருள் ஃபிளாவன் 3-ol. இதன் மீது ஆய்வாளர்கள் கவனம் செலுத்தக் கூறுவதன் காரணம். இது உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பை கரைக்கவும் உதவுகிறது.

பாதிப்புகள்
உடலில் கொழுப்பு அதிகப்படியாக சேர்வதால் நீரிழிவு, இதய நோய்கள், உயர் இரத்த அழுத்தம், புற்றுநோய், உடல் பருமன் போன்ற உடல்நல அபாயங்கள் உண்டாக காரணியாக இருக்கிறது.

பாதிப்புகள்
கடந்த பத்து ஆண்டுகளில் நடுவயதில் நிறைய உயிரிழப்பு ஏற்படுவதற்கு இந்த உடல்நலப் பிரச்சனைகள் பெரியளவில் காரணிகளாக இருந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

வெங்காயம் மற்றும் ஆப்பிள்
வெங்காயத்தில் ஃபிளாவனாய்டுகளும் மற்றும் ஆப்பிளில் ஃபிளாவன் 3-ol-ம் அதிகமாக இருக்கிறது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வெங்காயம் மற்றும் ஆப்பிள்
மேலும் இவற்றை தினசரி உண்பதால் உடலுக்கு எந்த பக்கவிளைவுகளும் வராது மற்றும் அன்றாடம் சந்தையில் கிடைக்க கூடிய உணவுப் பொருட்களாகவும் இவையிரண்டும் இருக்கின்றன.

கொழுப்பு பிரச்சனை
ஆப்பிள் மற்றும் வெங்காயத்தில் இருக்கும் தனித்தன்மை வாய்ந்த ஃபிளாவனாய்டுகள் உடலில் உள்வாங்கப்படும் கொழுப்பின் அளவையே குறைக்க செய்கிறது. இதனால், உடல் எடை அதிகரிக்காமல் பாதுகாக்கப்படும். மேலும், சீரான முறையில் உடல் எடையையும் குறைக்க முடியும்.

கிரீன் டீ
கிரீன் டீ பருகுவதால் உடல் எடை குறைவது என்பது ஃபிளாவனாய்டுகளின் தாக்கம் மட்டுமின்றி, அதிலிருக்கும் காஃபின் மற்றும் ஆண்டியாக்ஸிடண்ட்களும் கூட காரணியாக இருக்கிறது.

கிரீன் டீ
மேலும், கிரீன் டீயை அளவிற்கு அதிகமாக பருகுவது உடல் நலனுக்கு நல்லதல்ல என்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications