உங்கள் எடையை குறைக்கும் ஆசனங்கள் எவை தெரியுமா?

Written By: Hemalatha V
Subscribe to Boldsky

யோகா செய்வது என்பது ஒருவகையில் தியானம் செய்வது போன்றதுதான். சக்தி பெற முடியும். ஒருமுகப்படுத்துதல், ஞாபக சக்தி, உடல் பலம், மனோபலம், மன அழுத்தம் குறைவு என பல நன்மைகளை தருகிறது. தினமும் செய்து கொண்டு வந்தால் எந்த நோயும் நெருங்காது.

உடலின் சகல பிரச்சனைகளுக்கும் காரண கர்த்தா உடல்பருமன். உடல் பருமனை குறைக்கவும் கலோரிகளை எரிக்கவும் அன்றாடம் யோகா செய்தால் போதும்.

இங்கே கூறப்பட்டுள்ள யோகாக்கள் கலோரிகளை கரைத்து உடலை ஸ்லிம்மாக வைத்துக் கொள்ள உதவுபவை. எல்லாம் செய்ய வேண்டும் என்பதில்லை. உங்களுக்கு எது முடிகிறதோ அதை தவறாமல் தினமும் செய்து பாருங்கள். பலன் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மகர அதோ முக ஸ்வனாசனம்

மகர அதோ முக ஸ்வனாசனம்

இது பலகை போன்று தட்டையாக செய்யப்படுவதாகும். உங்கள் தசைகள் அதிக பயிற்சி பெற்று கலோரிகளை கரைக்கும். இந்த நிலையில் 30- 5 நிமிடம் வரை இருக்கலாம். எவ்வளவு தாக்குபிடிக்க முடியுமோ அவ்வளவு தூரம் நிற்கலாம்.

 உத்கடாசனம் :

உத்கடாசனம் :

நாற்காலியில் அமரும் போன்ற நிலையில் செய்யபப்டும் இந்த யோகாவினால் கால், தொடை, இடுப்பு ஆகிய பகுதிகலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பு கரையும். உடல் பருமனை வேகமாக குறைக்கச் செய்யலாம்

சதுரங்க தண்டாசனம் :

சதுரங்க தண்டாசனம் :

இது பார்ப்பதற்கு எளியதாக இருந்தாலும் தம் பிடித்து செய்யப்படவேண்டிய யோகா. உங்கள் கால்கள் இறுக்கமடைந்து முழங்கைகள் 9-0 டிகிரி கோணத்தில் இருப்பதால் வேகமக கலோரிகள் எரிக்கப்படுகின்றன.

அர்த்த பிஞ்ச மயுராசனம் :

அர்த்த பிஞ்ச மயுராசனம் :

டால்பின் போன்ற தோற்றத்தில் செய்யப்படுவதால் இந்த பெயர் பெற்றது. இந்த ஆசனத்தால் வயிறு, தொடை பகுதிகளுக்கு அழுத்தம் தரப்படுகிறது. இதனால் கொழுப்புகள் அந்த பகுதிகளில் கரையும். இது உடல் பருமனானவர்கல் செய்யும்போது நல்லபலன் தரும்.

சூர்ய நமஸ்காரம் :

சூர்ய நமஸ்காரம் :

12 நிலைகளில் செய்யப்படும் இந்த யோகா மிகவும் நல்லது. அன்றாடம் சாப்ப்பிடும் கலோரிகளை எரிக்க இந்த ஆசனங்கள் செய்தால் போதுமானது. செய்வதற்கு 15 நிமிடங்கள் இருந்தால் ஆகும். மிகவும் புத்துணர்வு தரும் ஆசனங்கள் இவை..

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Different yoga poses to burn your calories

Do these different yoga poses to burn your calories
Subscribe Newsletter