For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முடி உதிர்வை தடுக்கவும், உடல் எடையை குறைக்கவும் தேனை எப்படி பயன்படுத்தலாம்?

By Hemalatha
|

பலருக்கும் மருந்து சாப்பிடப் பிடிக்காது ஆனால் தேன் சாப்பிடப் பிடிக்கும் தானே. தேனே மருந்து ஆகும்போது இன்னும் குஷிதானே! தேனிற்கு இருக்கும் பலன்கள் அற்புதம். பல நறுமண பூக்களிலில் இருந்து சேகரித்து, தேனிக்கள் நமக்கு பரிசளிக்கும் தேனின் இயற்கையான மருத்துவ குணங்கள் அதிசயம் தான்.

ஃப்ரீ ரேடிகல்ஸ் எனப்படும் உடலில் உருவாகும் தேவையற்ற மூலக்கூறுகள், சாதாரண நோயிலிருந்து கொடிய புற்று நோய் வரைக்கும் காரண கர்த்தாவாய் இருக்கிறது. அதன் ஒரே எதிரி ஆன்டி-ஆக்ஸிடென்ட் தான். தேனில் இருக்கும் அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடென்ட் உடலிலுள்ள தேவையற்ற மூலக்கூறுகளை நீக்குகிறது, உடலிலுள்ள கொழுப்பை கரைக்கிறது. இதனால் உடல் எடையை குறைத்து, ஸ்லிம்மாக இருக்கவும் தேன் வெகுவாக உதவுகிறது.

Amazing Benefits of Honey for Hair and Skin

எப்படி தேனை சாப்பிடலாம்?

சர்க்கரைக்கு பதில் தேனை எடுத்துக் கொள்வது உத்தமம். காலையில் வெறும் வெயிற்றில் மிதமான வெந்நீரில் சில எலுமிச்சை துளிகளை விட்டு, தேன் அரை தேக்கரண்டி அளவு கலந்து தினமும் சாப்பிட்டால் உடல் இளைப்பதை கண்கூடாக பார்ப்பீர்கள்.

தேன் இருந்தால் அழகிய தோற்றத்திற்கும் கியாரண்டி!

தழும்புகள் குறைய!!

தழும்புகள் நமது தோற்றத்தின் பொலிவை சிதைக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.தேன் அந்த தழும்பினை மட்டுப்படுத்தும்.கடினமான தோலினை மிருதுவாக்கும். தேனுடன் சம அளவு ஆலிவ் என்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொள்ளுங்கள்.

அந்த கலவையை தழும்பின் மேல் 1 லிருந்து 2 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யுங்கள். ஒரு சுத்தமான காட்டன் துணியை எடுத்து மிதமான சூட்டில் அதன் மேல் கவர் செய்து விடுங்கள். துணி குளிர்ந்தவுடன் ,எடுத்துவிடலாம். பின்னர் அந்த இடத்தை துடைத்து விடவும்.தினமும் இருமுறை செய்யலாம்.

முகப்பரு கரும்புள்ளிகள் அகல!

தேனை முகத்தில் தடவி அரைமணி நேரம் காய விடவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் அலம்ப வேண்டும். அதே போல் ஒரு தேக்கரண்டி அளவு தேனுடன், அரை தேக்கரண்டி அளவு பட்டை பொடியை கலந்து முகத்தில் தடவி பதினைந்து நிமிடம் வரை காய வைக்கவும். பின் வெதுவெதுப்பான நீரில் கழுவவும். தினமும் ஒன்று அல்லது இருமுறை இம்முறையை பின்பற்றலாம்.

வயதான தோற்றத்தை தடுக்க!

இளமையின் ஆயுளை நீட்டிக்கும் ரகசியம் தேனில் இருக்கிறது. இரண்டு தேக்கரண்டி தேனுடன் சிறிது அவகேடோ பழத்தின் சதைப் பற்றை கலந்து, அக்கலவையை முகத்திலும் கழுத்திலும் மசாஜ் செய்யவும். அரைமணி நேரம் கழித்து கழுவவும். இந்த ஃபேஸ் பேக்கை வாரம் ஒரு முறை செய்து வந்தால் வயதான தோற்றத்தை குறைக்க முடியும். என்றும் இளமையாக காட்சியளிப்பீர்கள்.

முடி உதிர்வதை தடுக்க!

ஒரு தேக்கரண்டி தேனுடன் அதே அளவு வெங்காய சாறு கலந்து தலைமுடியின் வேர்க்கால்களில் தடவி மசாஜ் செய்தால் வேர்கள் பலப்படும்.,பொடுகு தொல்லை நீங்கும். வாரம் இருமுறை செய்யலாம். அதே போல்,தேனுடன் யோகார்ட் கலந்து, தலையில் தடவி 40 நிமிடங்கள் வரை காய விடவும். அதன் பின் குளிர்ந்த நீரினால் அலசவும். இதை வாரம் இரண்டு அல்லது மூன்று முறை செய்து வந்தால் முடி உதிர்வு குறையும்.

English summary

Amazing Benefits of Honey for Hair and Skin

Amazing Benefits of Honey for Hair and Skin, read here in tamil.
Story first published: Monday, April 25, 2016, 15:40 [IST]
Desktop Bottom Promotion