அடிக்கடி சோர்வாக உணர்கிறீர்களா? அப்போ உங்க உடம்புக்கு இந்த மூணும் அவசியம் தேவை!

Posted By:
Subscribe to Boldsky

காலை எழுந்தவுடனேயே சிலர் சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பித்துவிடுவார்கள். சிலர் டீ குடித்த பிறகு மின்னல் வேகத்தில் நாளை துவக்க ஆரம்பித்துவிடுவார்கள். ஆனால், சிலர், எழுந்து டீ குடித்து, குளித்து, சிற்றுண்டி முடித்து அலுவலகம் சென்ற பிறகும் கூட தூங்கி வழிந்தபடி இருப்பார்கள்.

Always Tired? Add These 3 Energy-Boosting Minerals to Your Diet

இவர்களுக்கு உடல்நல குறைபாடு ஏதும் இருக்காது. பெரிதாய் எந்த வேலையும் செய்திருக்க மாட்டார்கள். ஆனாலும் உடல் சோர்வு அதிகம் உணர்வார்கள். இதற்கு காரணம் உடல் சுறுசுறுப்பாக இருக்க தேவையான முக்கியமான மினரல் சத்து குறைந்து இருப்பது தான்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
துத்தநாகம் (Zinc)

துத்தநாகம் (Zinc)

நமது உடல் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்றால் துத்தநாக சத்து அவசியம் தேவை. குறிப்பாக உடல் சோர்வாக இருப்பவர்கள் தினமும் உணவில் துத்தநாகம் சத்துள்ள உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். 15 மில்லிகிராம் அளவு இந்த சத்து அவசியம் தேவைப்படுகிறது.

துத்தநாக சத்துள்ள உணவுகள்...

துத்தநாக சத்துள்ள உணவுகள்...

கீரை,

பூசணிக்காய் மற்றும் ஸ்குவாஷ் விதைகள்,

கடல் உணவுகள்,

நட்ஸ்,

கொக்கோ, சாக்லேட்,

சிக்கன்,

பீன்ஸ்,

மஷ்ரூம்.

செலினியம்!

செலினியம்!

உடல் சோர்வை போக்க அடுத்து நீங்கள் அன்றாடம் சேர்த்துக் கொள்ள வேண்டிய மினரல் சத்து செலினியம். உடல் சோர்வு நீங்க இதை 200 மில்லிகிராம் அளவு நீங்கள் உங்கள் உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

செலினியம் சத்துள்ள உணவுகள்...

செலினியம் சத்துள்ள உணவுகள்...

ப்ரோக்கோலி,

முட்டைக்கோஸ்,

கீரை,

சூரியகாந்தி விதைகள்,

எள் விதைகள்,

ஆளி விதைகள்.

ஐயோடின்!

ஐயோடின்!

அடிக்கடி ஏற்படும் உடல் சோர்வில் இருந்து மீண்டு வர, மூன்றாவதாக நீங்கள் தினமும் எடுத்துக் கொள்ள வேண்டிய மினரல் சத்து ஐயோடின். இதை நீங்கள் 150 மில்லிகிராம் தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

ஐயோடின் சத்துள்ள உணவுகள்...

ஐயோடின் சத்துள்ள உணவுகள்...

வேகவைத்த முட்டை,

ஸ்ட்ராபெர்ரி,

கிரான்பெர்ரி,

யோகர்ட்,

வான்கோழி நெஞ்சுபகுதி,

பீன்ஸ்,

சூரை மீன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Always Tired? Add These 3 Energy-Boosting Minerals to Your Diet

Always Tired? Add These 3 Energy-Boosting Minerals to Your Diet
Story first published: Saturday, November 5, 2016, 12:55 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter