For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தினமும் கொஞ்சம் திராட்சை, இடை மெலியவும், உறவு சிலிர்க்கவும் உதவுகிறதாம்...

|

1,24,000 பேர் பங்கெடுத்துக் கொண்ட ஹார்வர்ட் சுகாதாரப் பள்ளி மற்றும் கிழக்கு ஆங்கிலியாவில் பல்கலைக்கழகம் நடத்திய புதிய ஆய்வொன்றில் தினமும் கொஞ்சம் திராட்சை சாப்பிடுவது உடல் எடை குறைத்து இடை மெலியவும், இதன் காரணமாய் உடலுறவு வாழ்க்கை மேன்மையடையவும் உதவுகிறது என கண்டறியப்பட்டுள்ளது.

பெண்களின் பாலுணர்ச்சியைத் தூண்டிவிடும் உணவுகள்!

ஃபிளாவனாய்டுகள் உள்ள பழங்களினால் தான் இந்த நன்மைகள் கிடைக்கப் பெறுகிறது என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஃபிளாவனாய்டுகள் உள்ள பழங்களில் திராட்சை சிறந்து விளங்குவதாகவும், மற்றவற்றை விட நல்ல பலனை அளிக்கிறது என்றும் ஆய்வாரள்கள் தெரிவித்துள்ளனர்....

திருமணமான ஆண்கள் தங்கள் டயட்டில் கட்டாயம் சேர்க்க வேண்டிய உணவுகள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புதிய ஆய்வு

புதிய ஆய்வு

சமீபத்திய ஆய்வில் உடல் எடை குறைப்பதால், உடலுறவு வாழ்க்கையை மேம்பட செய்ய முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

திராட்சை

திராட்சை

உடல் எடை குறைக்க டயட்டில் உள்ளவர்களுக்கு திராட்சை ஒரு சிறந்த உணவாக திகழ்கிறது.

கையளவு

கையளவு

தினமும் ஒரு கையளவு அல்லது அரைக் கப் அளவு திராட்சை சாப்பிடுவது உடல் எடையை குறைக்க மட்டுமில்லாது, உடலுறவு வாழ்க்கையை தூண்டிவிடவும் செய்கிறதாம்.

ஃபிளாவனாய்டுகள்

ஃபிளாவனாய்டுகள்

இதிலிருக்கும் ஃபிளாவனாய்டுகள் இரத்த அழுத்தத்தை குறைக்கவும், கொலஸ்ட்ரால் அளவை குறைக்கவும் உதவுகிறது.

கடந்த வாரம்...

கடந்த வாரம்...

கடந்த வாரம் நடத்தப்பட்ட ஆய்வில், முதன் முறையாக உடல் எடையை குறைப்பது ஆரோக்கியமான எடையை கட்டுபடுத்த மட்டுமில்லாது, தாம்பத்திய வாழ்க்கை சிறக்கவும் உதவுகிறது என கண்டறியப்பட்டது.

பிரிட்டிஷ் உணவு கட்டுப்பாடு சங்கம்

பிரிட்டிஷ் உணவு கட்டுப்பாடு சங்கம்

பிரிட்டிஷ் உணவு கட்டுப்பாடு சங்கத்தை சேர்ந்த ஹெலன் பான்ட் என்பவர் பழங்கள், காய்கறி மூலம் கிடைக்கும் நன்மைகள் ஏராளம் இருக்கின்றன என கூறியுள்ளார்.

பொறுப்பு

பொறுப்பு

திராட்சை மூலமாக உடலுறவு வாழ்க்கையும் நல்ல முறையில் தூண்டிவிடப் படுகிறது என்பதற்கான பொறுப்பு மற்றும் காரணம் ஃபிளாவனாய்டுகள் தான் எனவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

ஆய்வு நடத்தியவர்கள்

ஆய்வு நடத்தியவர்கள்

இந்த ஆய்வினை, ஹார்வர்ட் சுகாதாரப் பள்ளி மற்றும் கிழக்கு ஆங்கிலியாவில் பல்கலைக்கழகம் சேர்ந்து நடத்தினர். ஏறத்தாழ இந்த ஆய்வில் 1,24,000 பேர் பங்கெடுத்துள்ளனர். 36, 47 மற்றும் 48 என மூன்று வயதினர் குழுவாக பிரித்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

அந்தோசியனின்கள் (Anthocyanins)

அந்தோசியனின்கள் (Anthocyanins)

ஃபிளாவனாய்டுகள் அதிக நன்மை கிடைப்பவற்றை அந்தோசியனின்கள் (Anthocyanins) என்ற குழுவாக பிரிக்கிறார்கள். திராட்சை, நெல்லிகள், ஸ்ட்ராபெர்ரி, செர்ரிகளில், ப்ளாக்பெர்ரி, போன்ற உணவுகள் இந்த வகையின் கீழ் தான் வகுக்கப்பட்டுள்ளன.

மாற்றங்கள்

மாற்றங்கள்

இவற்றில் திராட்சை தான் உடல் எடையை கட்டுப்படுத்தவும், அதன் மூலம் உடலுறவு வாழ்க்கை சிறக்கவும் பெருமளவு உதவுகிறது என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பாதிப்புகளை தடுக்க...

பாதிப்புகளை தடுக்க...

நாற்பதுகளை தாண்டும் போது நீரிழிவு, உடல்பருமன், இதயக் கோளாறுகள் ஏற்படும் அபாயம் இருக்கின்றன, இவற்றை தடுக்கவும் திராட்சையில் இருக்கும் ஃபிளாவனாய்டுகள் உதவுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

A Few Grapes Really Can Slim Your Waist And Boost Your Love Life

A Few Grapes Really Can Slim Your Waist And Boost Your Love Life, read here in tamil.
Story first published: Wednesday, February 3, 2016, 14:25 [IST]
Desktop Bottom Promotion