வயதாவதற்கும், கொலஸ்ட்ராலுக்கும் என்ன தொடர்பு? கொலஸ்ட்ரால் பற்றி தெரியாத உண்மைகள் !!

Written By:
Subscribe to Boldsky

கொலஸ்ட்ரால் என்றாலே அலற ஆரம்பித்து விட்டோம். கொலஸ்ட்ரால் சிறிதும் உடலில் இருந்தால் கேடு என நினைத்து பலரும் சிறிதும் எண்ணெய், கொழுப்பு இல்லாத உணவுகளையே உண்கிறார்கள். ஆனால் அது முழுதும் தவறு. கொழுப்பே இல்லாமல் இருந்தால் நாம் பல வித பிரச்சனைகளை எதிர்கொள்ளவேண்டியது வரும்.

5 Things to know about cholesterol in your body

ஏன் நமது உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களும் உருவாக கொழுப்பு தேவை. ஏன் எலும்பு வளர்சிக்கும், கண் பார்வைக்குமே கொழுப்பு தேவை. அவற்றைப் பற்றி நீங்கள் இந்த விஷயங்களை அறியாமல் இருந்திருக்கலாம்.உங்களுக்காக அதனைப் பற்றி சில

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆரோக்கியமான உடல் நிலைக்கு கொழுப்பு தேவை :

ஆரோக்கியமான உடல் நிலைக்கு கொழுப்பு தேவை :

உங்கள் செல்களின் இயல்பான இயக்கத்திற்கு கொழுப்பு மிக அவசியம். பல முக்கியமான மூலக்கூறுகளை சத்துக்களை உடலில் மற்ற பாகங்களை கடத்திச் செல்ல கொழுப்பு முக்கியம்.

அதுபோல் கொழுப்பும் கொலஸ்ட்ராலும் ஒன்றல்ல. கொழுப்பில் பலவகைகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதால் கொலஸ்ட்ரால்.

அதிக கொலஸ்ட்ரால் மற்றும் இதய நோய் :

அதிக கொலஸ்ட்ரால் மற்றும் இதய நோய் :

அதிக கொழுப்பு உள்ளவர்கள் எல்லாருக்கும் இதய நோய் வர வேண்டியதில்லை. இது மரபியல் சம்பந்தப்பட்டதும் கூட. தமனிகளில் கொழுப்பு படியும்போதுதான் இதய நோய்கள் உருவாகிறது.

இயற்கையாக உருவாகும் கொலஸ்ட்ரால் எரிபொருளாக மாற்றுவதைப் பொறுத்து இதய நோய்கள் உருவாகிறதே தவிர கொலஸ்ட்ரால் அதிகமானாலே இதய நோய் வர வேண்டுமென்பதில்லை.

கொலஸ்ட்ராலிற்கும் முதுமைக்கும் சம்பந்தம் :

கொலஸ்ட்ராலிற்கும் முதுமைக்கும் சம்பந்தம் :

உங்கள் உடல் முதிர்ச்சி அடைய அடைய, கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும். இது இயற்கையானது. குறிப்பாக பெண்களுக்கு வயதாகும்போது கொழுப்பு அதிகமாகிறது. இதனால்தான் வயதானவர்களுக்கு இதய நோய் அதிகரிக்கிறது.

கொழுப்பிலாத உணவுகள் கொலஸ்ட்ராலை அதிகரிக்கச் செய்யும் :

கொழுப்பிலாத உணவுகள் கொலஸ்ட்ராலை அதிகரிக்கச் செய்யும் :

கொழுப்பு உணவுகள் மட்டுமே கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கச் செய்யும் என்பது தவறு. பொதுவாக நிறௌவுறும் கொழுப்பு, ட்ரான்ஸ் கொழுப்பு மற்றும் பால் கொழுப்பு உணவுகள் உடலில் சென்றதும் கொலஸ்ட்ராலாக மாறுகிறது. வெறும் 2% ட்ரான்ஸ் கொழுப்பு உங்கள் கொலஸ்ட்ரால் அளவை 20 % அதிகரிக்கச் செய்கிறது.

கொலஸ்ரால் பரிசோதனை :

கொலஸ்ரால் பரிசோதனை :

சர்க்கரை பரிசோதனைக்கு சாப்பிடுவதற்கு முன் , சாப்பிடுவதற்கு பின் செய்யப்படும் பரிசோதனை போல், கொலஸ்ட்ராலிற்கு செய்யத் தேவையில்லை.

குறிப்பாக சாப்பிட்ட பின் பரிசோதனை செய்தால்தான் மிகச் சரியான கொலஸ்ட்ரால் அளவை கணிக்க முடியும் என சர்குலேஷன் என்ற மருத்துவ இதழ் ஒரு ஆய்வை வெளியிட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

5 Things to know about cholesterol in your body

5 Things to know about cholesterol in your body
Story first published: Thursday, December 22, 2016, 10:28 [IST]
Subscribe Newsletter