உங்கள் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் உணவுகள்!

Posted By:
Subscribe to Boldsky

ஒருவரின் உடல் ஆரோக்கியம் அவர்களது செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தைப் பொறுத்தது. ஒருவருக்கு செரிமான மண்டலத்தில் பிரச்சனை இருந்தால், அவரால் எந்த ஒரு வேலையையும் சிறப்பாக செய்ய முடியாது. ஏனெனில் செரிமான மண்டலம் ஆரோக்கியமாக செயல்பட்டால் தான், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்கும்.

இல்லாவிட்டால் உண்ணும் உணவுகள் செரிமான மண்டலத்தில் தங்கி, வயிற்று உப்புசம், குமட்டல், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே ஒவ்வொருவரும் தாம் உண்ணும் உணவுகளின் மீது கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த நார்ச்சத்துக்கள், புரோட்டீன், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.

அதுமட்டுமின்றி, செரிமான மண்டலத்திற்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். அதற்கு அந்த உணவுகள் என்னவென்று ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும். இங்கு செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இனிப்புகள்

இனிப்புகள்

செரிமான மண்டலத்திற்கு இனிப்பு மற்றும் உப்பு நிறைந்த உணவுகளை செரிக்க பிடிக்காது. அதனால் உங்களுக்கு செரிமான பிரச்சனைகள் இருக்கும் போது, இனிப்பு நிறைந்த உணவுகள் உட்கொள்வதைத் தவிர்த்திடுங்கள்.

மது

மது

பொதுவாக மது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஓர் பானம். குறிப்பாக இது கல்லீரலுக்கு கேடு விளைவிக்கும். அதே சமயம் இதனை அளவுக்கு அதிகமாக குடித்தால், செரிமான மண்டலம் படுமோசமாக பாதிப்பிற்குள்ளாகும்.

பிரெஞ்சு ப்ரைஸ்

பிரெஞ்சு ப்ரைஸ்

பிரெஞ்சு ப்ரைஸை அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் போது, வயிற்றுப்போக்கால் அவஸ்தைப்படக்கூடும். சிலருக்கு வயிற்று உப்புசம் மற்றும் மலச்சிக்கல் ஏற்படும். எனவே உங்களுக்கு வயிறு சரியில்லாதது போல் இருந்தால், இவற்றைத் தவிர்த்திடுங்கள்.

அசிட்டிக் உணவுகள்

அசிட்டிக் உணவுகள்

அசிட்டிக் உணவுகளான தக்காளி, எலுமிச்சை போன்றவற்றை வயிறு பிரச்சனையாக இருக்கும் போது உட்கொண்டால், அதில் உள்ள அமிலம், நிலைமையை இன்னும் மோசமாக்கும்.

பால் பொருட்கள்

பால் பொருட்கள்

பால் பொருட்கள் கூட செரிமானமாக கடினமாக இருக்கும். அதிலும் உங்களுக்கு லாக்டோஸ் சகிப்புத்தன்மை என்றால், பால் பொருட்களில் இருந்து முற்றிலும் விலகி இருப்பது நல்லது.

காபி

காபி

காபியில் உள்ள காப்ஃபைன் வயிறு மற்றும் குடலின் செயல்பாட்டில் இடையூறை ஏற்படுத்தும். எனவே உங்களுக்கு மலச்சிக்கல், வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் இருந்தால், காபி குடிப்பதைத் தவிர்த்திடுங்கள்.

காரமான உணவுகள்

காரமான உணவுகள்

உங்களுக்கு ஏற்கனவே செரிமான பிரச்சனைகள் இருந்தால், காரமான உணவுகளை முழுமையாகத் தவித்திடுங்கள். இல்லாவிட்டால், அது வயிற்றில் கடுமையான எரிச்சலை ஏற்படுத்தும்.

ஜங்க் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள்

ஜங்க் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள்

ஜங்க் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் ஏராளமான செயற்கை ரசாயனங்கள் கலக்கப்பட்டிருக்கும். அதனை அதிகம் உட்கொண்டு வந்தால், உங்கள் செரிமான மண்டலம் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகும். மேலும் இந்த உணவுகளில் நார்ச்சத்து எதுவும் இல்லாததால், இது செரிமானமாகாமல், வயிற்றிலேயே தங்கி, மலச்சிக்கல், வயிறு உப்புசம் போன்றவற்றை உண்டாக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Foods That Are Bad For Digestion

Foods that are bad for digestion must be avoided especially when your stomach is upset. Read on to know more about such foods.
Subscribe Newsletter