Latest Updates
-
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும்
வெயிலால் எரியும் சருமத்தை கூலாக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை தினமும் நைட் போடுங்க..
Summer Skin Care Tips In Tamil: அக்னி நட்சத்திரம் தொடங்கிவிட்டது. வெயிலின் தாக்கம் இனி கடுமையாக இருக்கும். இந்த அக்னி நட்சத்திர காலத்தில் வெளியே சென்றால் சருமம் பொசுங்கும் அளவில் வெயிலின் தாக்கம் தீவிரமாக இருக்கும். அதுமட்டுமல்லால் காலநிலை மிகவும் சூடாக இருப்பதால், முகத்தில் எண்ணெய் வழிவது, முகப்பரு போன்ற பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இப்படி வெயிலால் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு கடைகளில் விற்கப்படும் விலை அதிகமான அழகு சாதன பொருட்களை வாங்கி பயன்படுத்த வேண்டும் என்பதில்லை.

நம் வீட்டில் உள்ள ஒருசில பொருட்களைக் கொண்டு ஃபேஸ் பேக்குகளை போடலாம். அதுவும் குளிர்ச்சி பண்புகளைக் கொண்ட இயற்கை பொருட்களைக் கொண்டு ஃபேஸ் பேக் போடும் போது, வெயிலால் சருமத்தில் ஏற்படும் எரிச்சல் தடுக்கப்படுவதோடு, சருமம் குளிர்ச்சியாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும். இப்போது அந்த ஃபேஸ் பேக்குகளைக் காண்போம்.
1. வெள்ளரிக்காய் மற்றும் தயிர் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் துருவிய வெள்ளரிக்காயை எடுத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கெள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தலாம்.
2. புதினா மற்றும் ரோஸ் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு 10-15 புதினா இலைகளை அரைத்து எடுத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர், 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 10-12 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் சருமத்தை குளிர்ச்சியாக வைத்துக் கொள்வதோடு, சரும துளைகளை சுருங்கச் செய்யும் மற்றும் கருவளையங்களைப் போக்கும்.
3. கற்றாழை மற்றும் முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி மற்றும் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தலாம். அதிக சரும வறட்சியை சந்தித்தால், ஃபேஸ் பேக்குடன் 1 டீஸ்பூன் தேன் சேர்த்துக் கொள்ளுங்கள்.
4. சந்தனம் மற்றும் வேப்பிலை ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் சந்தன பவுடர் மற்றும் சிறிது வேப்பிலை பொடியை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

