Latest Updates
-
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
Mothers Day 2026: வேலைக்கு செல்லும் அம்மாக்களுக்கான சில ஆரோக்கிய டிப்ஸ்!
Mothers Day 2026: தற்போதைய காலகட்டத்தில் பெண்கள் குடும்பத்தையும், தொழிலையும் சமநிலையில் பராமரித்து முன்னேறுகிறார்கள். அதுவும் ஒரு தாயாக இருந்து வேலை பார்ப்பது பெருமையாக இருந்தாலும், நிறைய பொறுப்புக்கள் இருக்கும். வீட்டு வேலை, அலுவலக வேலை, குழந்தைகளை பராமரிப்பது என அனைத்தையும் ஒரே வேளையில் கவனிக்கும் போது, நிறைய தாய்மார்கள் தங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி சற்றும் பொருட்படுத்தாமல் அசால்ட்டாக இருக்கிறார்கள். ஆனால் ஒரு வீட்டில் அம்மாக்கள் ஆரோக்கியமாக இருந்தால் தான், அந்த குடும்பமே ஆரோக்கியமாக இருக்கும், தொழிலையும் சிறப்பாக கவனிக்க முடியும்.

இப்படிப்பட்ட அம்மாக்களை கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் வரும் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை அன்னையர் தினம் அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு மே 10 ஆம் தேதி அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இத்தினத்தை முன்னிட்டு வேலை செய்யும் அம்மாக்கள் தங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள அவசியம் பின்பற்ற வேண்டியவைகள் குறித்து இப்போது காண்போம்.
1. சமநிலையான உணவு முறையை பின்பற்றவும்
வேலைக்கு செல்லும் பல அம்மாக்கள் நேரமின்மையால் சரியான உணவை தவிர்க்கிறார்கள். முக்கியமாக காலை உணவை தவிர்ப்பது அல்லது ஜங்க் உணவுகளை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். அதற்கு பதிலாக, புரோட்டீன், நார்ச்சத்து, வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதுவும் காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், பால் பொருட்கள் போன்றவை உடலுக்கு தேவையான ஆற்றலைத் தரும். அதோடு, தினமும் குறைந்தது 2-3 லிட்டர் தண்ணீரை குடிப்பது என்பது மிகவும் அவசியம்.
2. உடற்பயிற்சியை தவறாமல் செய்யவும்
நேரம் இல்லை என்பதற்காக உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்கக்கூடாது. தினமும் குறைந்தது 20-30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தாலே, உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும். அதுவும் வாக்கிங், யோகா, லேசான உடற்பயிற்சி போன்றவற்றை தினசரி அட்டவணையில் சேர்க்கலாம். இது உடல் எடையை கட்டுப்படுத்துவதோடு, மன அழுத்தத்தையும் குறைக்க உதவும்.
3. போதுமான தூக்கம் அவசியம்
அலுவலக வேலை, வீட்டு பொறுப்புகள், குழந்தைகள் என அனைத்தையும் சமாளிக்கும் போது, பல தாய்மார்கள் தூக்கத்தை குறைத்து விடுகிறார்கள். இது அவர்களின் ஆரோக்கியத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதைத் தவிர்க்க தினமும் குறைந்தது 7-8 மணிநேரம் தூங்குவது அவசியம். சரியான அளவு தூக்கத்தை மேற்கொள்ளாமல் இருந்தால், அது உடல் சோர்வு, மன அழுத்தம், கவனக்குறைவு போன்ற பிரச்சனைகளை உருவாக்கும். எனவே, தூக்கத்திற்கு முன்னுரிமை கொடுங்கள்.
4. மன அழுத்தத்தை நிர்வகிக்க கற்றுக்கொள்ளவும்
வேலைக்கு செல்லும் அம்மாக்களுக்கு அலுவலக வேலை மற்றும் குடும்ப பொறுப்புகள் காரணமாக மன அழுத்தம் அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இதை சரியாக நிர்வகிக்கவில்லை என்றால், அது ஆரோக்கியத்தையும் பாதிக்கும். எனவே தியானம், யோகா, ஆழ்ந்த மூச்சு பயிற்சி போன்றவற்றில் ஈடுபடுவதன் மூலம் மனதிற்கு அமைதி கிடைக்கும். இது தவிர நண்பர்களுடன் நேரத்தை செலவழிப்பது, பிடித்த விஷயங்களைச் செய்வது போன்றவை மனதை இலகுவாக்கும்.
5. தங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கவும்
பல அம்மாக்கள் தங்களை மறந்து குடும்பத்திற்காக மட்டுமே வாழ்கிறார்கள். ஆனால், உங்கள் நலனும் சமமாக முக்கியமானது. எனவே தினமும் சில நிமிடங்கள் உங்கள் விருப்பமான செயல்களை செய்ய சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். இது உங்கள் மனநிலையை மேம்படுத்தும். நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால், உங்கள் குடும்பமும் மகிழ்ச்சியாக இருக்கும்.
6. மருத்துவ பரிசோதனைகளை தவறாமல் செய்யவும்
தாய்மார்கள் தங்கள் ஆரோக்கியத்தை பராமரிக்க, அவ்வப்போது மருத்துவ பரிசோதனைகளை செய்வது அவசியம். ஆனால் பல அம்மாக்கள் தங்கள் உடல்நிலை குறித்த சிறிய அறிகுறிகளையும் புறக்கணிக்கிறார்கள். அது பெரிய பிரச்சனையாக மாறுவதற்கு முன்பே கவனிக்க வேண்டும். மேலும் வருடத்திற்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும். இது நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிய பெரிதும் உதவும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

