Latest Updates
-
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்..
கிழக்கிந்திய கம்பெனி எப்படி 200 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட ஆட்சியாளராக மாறியது தெரியுமா?
இந்திய வரலாற்றில் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலம் என்பது ஒரு இருண்ட காலமாகும். வியாபாரிகளாக உள்ளே நுழைந்த ஆங்கிலேயர்கள் கிட்டதட்ட 200 ஆண்டுகள் இந்தியாவை ஆட்சி செய்தனர். ஆங்கிலேயர்கள் கிழக்கிந்திய கம்பெனி முக்கியமாக மசாலாப் பொருட்களை வர்த்தகம் செய்யும் நோக்கத்துடன் இந்தியாவிற்கு வருகை புரிந்தார்கள் என்பது நாம் நன்கு அறிந்ததே. மசாலா பொருட்கள் மட்டுமின்றி, அவர்கள் பட்டு, பருத்தி, இண்டிகோ சாயம், தேயிலை மற்றும் அபின் போன்ற பொருட்களையும் வர்த்தகம் செய்தனர்.

1498-ஆம் ஆண்டு மே 20-ஆம் தேதி வாஸ்கோ ட காமா கோழிக்கோட்டிற்கு வருகை தந்த நிகழ்வு, ஐரோப்பாவிலிருந்து கிழக்கு ஆசியாவிற்கு வருகை புரிபவர்களுக்கு ஒரு கடல் வழியைத் திறந்துவிட்டது. அதன் பிறகு, இந்தியா ஐரோப்பிய வர்த்தகத்தின் ஈர்ப்பு மையமாகத் திகழ்ந்தது, மேலும் இந்தியாவில் வர்த்தக உரிமை கைப்பற்றுவதற்கான ஐரோப்பியர்களின் பேராசை விளைவாக, எண்ணற்ற கடற்போர் மோதல்கள் மூண்டன.
கிழக்கிந்திய கம்பெனி எவ்வாறு உருவானது?
தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் நோக்கில், கி.பி. 1600-ஆம் ஆண்டில் ஜான் வாட்ஸ் மற்றும் ஜார்ஜ் ஒயிட் ஆகியோரால் பிரிட்டிஷ் கூட்டுப் பங்கு நிறுவனமான கிழக்கிந்திய நிறுவனம்(East India Company) நிறுவப்பட்டது. இந்த நிறுவனத்தின் பங்குகள் முதன்மையாகப் பிரிட்டிஷ் வணிகர்கள் மற்றும் உயர்குடியினருக்குச் சொந்தமானவையாக இருந்தன. ஆனால் கிழக்கிந்திய நிறுவனத்திற்கும் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கும் இடையே எவ்வித நேரடித் தொடர்பும் இருக்கவில்லை.
பிரிட்டிஷார் எப்போது இந்தியாவில் தரையிறங்கினர்?
ஆரம்பத்தில், பிரிட்டிஷார் நறுமணப் பொருட்களைத் தேடி வரும் வணிகர்களாகவே இந்தியாவிற்குள் நுழைந்தனர். பண்டைய காலத்தில் ஐரோப்பாவில், இறைச்சியைப் பதப்படுத்தி வைப்பதற்கான முதன்மையான வழியாக நறுமணப் பொருட்களே திகழ்ந்தன. முதலில் வியாபாரத்திற்கு நுழைந்த அவர்கள் நவீன ஆயுதங்களைக் கொண்டு, துப்பாக்கி முனையில் இந்தியாவை தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தனர். வணிக நோக்கத்திற்காகவே ஆங்கிலேயர்கள் கி.பி. 1608 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24 அன்று, இந்தியாவின் சூரத் துறைமுகத்தில் வந்திறங்கினர். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, சர் தாமஸ் ரோவின் தலைமையில் சூரத் நகரில் ஒரு தொழிற்சாலையை அமைத்துக்கொள்ளும் அனுமதியை அவர்கள் பெற்றனர். இதனைத் தொடர்ந்து, மசூலிப்பட்டினத்தில் தங்கள் இரண்டாவது வணிக நிலையத்தை அமைத்துக்கொள்வதற்கான அனுமதியை, விஜயநகரப் பேரரசிடமிருந்து பெற்றது.
காலப்போக்கில், பிரிட்டிஷார் மற்ற ஐரோப்பிய வர்த்தக நிறுவனங்களை மீறி அதிக ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர். அடுத்தடுத்த ஆண்டுகளில், இந்தியாவில் தங்கள் வர்த்தகச் செயல்பாடுகளைப் பெருமளவில் விரிவுபடுத்தினர். இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைப் பகுதிளில் ஏராளமான வர்த்தக மையங்கள் நிறுவப்பட்டன; கல்கத்தா, பம்பாய் மற்றும் சென்னை ஆகிய மூன்று 'பிரசிடென்சி' நகரங்களைச் சுற்றிலும் கணிசமான ஆங்கிலேயச் சமூகங்கள் உருவாகி வேகமாக வளர்ச்சியடைந்தன.
எப்படி ஆட்சியாளர்களாக மாறினர்?
ஒரு வர்த்தக நிறுவனமாகச் செயல்பட்ட காலத்தில், இந்தியா முழுவதும் பல்வேறு பிராந்திய அரசுகளாகச் சிதறிக் கிடப்பதை அவர்கள் உணர்ந்தனர். எனவே இந்தியாவின் அனைத்து வளங்களையும் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் ஒருங்கிணைக்க அவர்கள் முடிவெடுத்தனர். 1750-களில், கிழக்கிந்திய நிறுவனம் இந்திய அரசியலில் தலையிடத் தொடங்கியது. 1757-ஆம் ஆண்டில் நடைபெற்ற பிளாசிப் போரில், அந்நிறுவனத்தின் இராணுவ அதிகாரிகளில் ஒருவரான ராபர்ட் கிளைவ், வங்காள நவாப் ஆன சிராஜ்-உத்-தௌலாவின் படைகளைத் தோற்கடித்தன் மூலம், வர்த்தக நிறுவனத்திலிருந்து ஆட்சியாளர்களாக அவர்கள் மாறினார்.
இறுதியாக, 'சிப்பாய் கலகம்' என்றும் அழைக்கப்படும் முதல் இந்தியச் சுதந்திரப் போர், 1857-இல் நடைபெற்றதைத் தொடர்ந்து, 1858-ஆம் ஆண்டில் கிழக்கிந்திய நிறுவனத்தின் ஆட்சி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இந்தியாவில் கிழக்கிந்திய நிறுவனம் கலைக்கப்பட்ட பிறகு, பிரிட்டிஷ் முடியாட்சி இந்தியாவின் நேரடிக் கட்டுப்பாட்டை ஏற்றுக்கொண்டது. இதன் மூலம் 'பிரிட்டிஷ் ராஜ்ஜியம்' என்று அழைக்கப்படும் ஆட்சிமுறை தொடங்கியது.



Click it and Unblock the Notifications
