Latest Updates
-
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளை துரதிர்ஷ்டம் விடாமல் துரத்தப்போகுதாம் -
இந்தியாவில் அதிக கட்டணம் வசூலிக்கும் டாப் 5 சுங்கச்சாவடிகள் என்னென்ன தெரியுமா? -
சத்தான மீல் மேக்கர் கட்லெட் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மொறுமொறுனு சாப்பிட சூப்பரா இருக்கும் -
ஆகஸ்ட் 05-ல் புதன் கடக ராசிக்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தாபா ஸ்டைல் முட்டை பட்டாணி மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும் -
Commonwealth Games 2026: காமன்வெல்த் போட்டிகளுக்கும், ஒலிம்பிக் போட்டிகளுக்கும் உள்ள வேறுபாடுகள் என்னென்ன? -
Headline for Deeplink -
பீர்க்கங்காய் தக்காளி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 29 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பணமழை கொட்டும் நாளாக இருக்குமாம் -
56 ஆண்டுகளுக்கு பின் குரு பூர்ணிமா நாளில் உருவாகும் 3 ராஜயோகங்கள்: அதிர்ஷ்ட மழையில் நனையும் 3 ராசிகள்!
செட்டிநாடு பாகற்காய் சாம்பார் ரெசிபி - இந்த மாதிரி வைச்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட ஆசையா சாப்பிடுவாங்க
Chettinad Pavakkai Sambar Recipe in Tamil: பாகற்காயில் பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்திருக்கின்றன. இது வயதானவர்களுக்கு ஏற்படும் சர்க்கரை நோய்க்கு ஏற்ற உணவு பொருள். இது குழந்தைகளின் வயிற்றில் இருக்கும் குடல் புழுக்களை நீக்குவதற்கும் உதவுகிறது. இது பெரும்பாலானவர்களுக்கு பிடிக்காத ஒன்று. காரணம் அதன் கசப்பு சுவை தான். அந்த கசப்பு சுவை அதிகம் இல்லாமல் அனைவரும் விரும்பி சாப்பிட வைக்க இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் சாம்பார் செய்து பாருங்க.

இன்று மதியம் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் பாவக்காய் உள்ளதா? இதுவரை பாவக்காயை பொரியல் தான் செய்துள்ளீர்களா? அப்படியானால் ஒருமுறை இந்த செட்டிநாடு சாம்பாரை செய்யுங்கள். இந்த பாகற்காய் சாம்பார் சாதத்துடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். இந்த ஸ்டைலில் சாம்பார் வைத்தால் பாகற்காய் பிடிக்காதவர்கள் கூட ஆசையாக சாப்பிடுவார்கள்.
உங்களுக்கு செட்டிநாடு பாகற்காய் சாம்பாரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பாகற்காய் சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- நறுக்கிய பாகற்காய் - 1கப்
- துவரம் பருப்பு - 2 ஸ்பூன்
- கடலைப்பருப்பு: 2 ஸ்பூன்
- அரிசி மாவு - 2 ஸ்பூன்
- சாம்பார் பொடி - 2 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
- வெல்லம் - 1 ஸ்பூன்
- புளிக்கரைசல்: 1 கப்
- உப்பு - தேவையான அளவு
அரைக்க:
- கடலைப்பருப்பு - 2 ஸ்பூன்
- மல்லி விதை - 2 ஸ்பூன்
- வர மிளகாய் - 2
- துருவிய தேங்காய் - 1 ஸ்பூன்
தாளிக்க:
- கடுகு - 1 ஸ்பூன்
- பெருங்காயம் - 1 சிட்டிகை
- கறிவேப்பிலை
செய்முறை:
- துவரம் பருப்பு மற்றும் கடலைப் பருப்பைத் தனித்தனியாக மென்மையாகும் வரை வேக வைக்கவும். இதை தனியாக எடுத்து வைக்கவும்
- ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். கடலைப்பருப்பு, மல்லி விதை, வர மிளகாய் மற்றும் தேங்காயை சேர்த்து வதக்கவும். இவை ஆறியதும் அவற்றை ஒரு மென்மையான விழுதாக அரைக்கவும்.
- அரிசி மாவைச் சிறிதளவு தண்ணீருடன் கலந்து மென்மையான கரைசலாகத் தயார் செய்து தனியே வைக்கவும்.
- பாகற்காய் துண்டுகளை மென்மையாகும் வரை வேகவைக்கவும். பின்னர் நீரை வடித்துவிட்டுத் தனியே வைக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் புளிக் கரைசல், உப்பு, மஞ்சள் தூள் மற்றும் சாம்பார் தூள் ஆகியவற்றைச் சேர்த்து கலக்கவும். மிதமான தீயில் வைத்து கொதிக்கவிடவும்.
- மசாலா பச்சை வாசனை போனதும் வேகவைத்த பாகற்காய் துண்டுகளைச் சேர்த்து, 2 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
- பின்னர் வேகவைத்த பருப்பை சேர்த்து நன்றாகக் கலக்கவும். கலவை நன்கு கொதித்ததும் அரைத்த மசாலா, அரிசி மாவு கலவை மற்றும் வெல்லம் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறவும். இந்தக் கலவையை நன்கு கொதிக்கவிடவும்.
- ஒரு சிறிய கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும். இந்தத் தாளிப்பைச் சாம்பாரில் சேர்க்கவும்.
- சாம்பாரை மேலும் ஒரு நிமிடம் மிதமான தீயில் கொதிக்கவிட்டு, பிறகு அடுப்பிலிருந்து இறக்கவும்.



Click it and Unblock the Notifications