Latest Updates
-
தலைசுற்ற வைக்கும் இந்திய அரசர்களின் ஆடம்பரம் - எதுக்கெல்லாம் கோடிக்கணக்குல செலவு பண்ணிருக்காங்க பாருங்க -
ராகு-கேது பெயர்ச்சி 2026: மேஷம் முதல் கன்னி வரை யாருக்கு ராஜயோகம்?- விளக்கும் ஜோதிடர்! -
கேரட் தோசையும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
செப்டம்பர் 11, 2026: இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது தெரியுமா? -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் 2027 வரை சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் சொஜ்ஜி அப்பம் ரெசிபி - இந்த வருஷம் இந்த சூப்பரான இனிப்பை செஞ்சு பாருங்க -
காளான் வாங்குனா ஒரே மாதிரி கிரேவி செய்யாம.. ஒருடைம் இப்படி சைடு டிஷ் செய்யுங்க.. அள்ளும்.. -
வாஸ்துப்படி வீட்டின் இந்த இடத்துல கண்ணாடியை வெக்காதீங்க.. இல்ல பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பீங்க.. -
97 ஆண்டுகளாக ஒரு குழந்தை கூட பிறக்காத நாடு எது தெரியுமா? இந்த நாட்டில் ஒரு ஹாஸ்பிடல் கூட இல்லையாம்
Commonwealth Games 2026: காமன்வெல்த் போட்டிகளுக்கும், ஒலிம்பிக் போட்டிகளுக்கும் உள்ள வேறுபாடுகள் என்னென்ன?
Commonwealth Games 2026: தற்போது நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுகளில் இந்திய வீரர்கள் தொடர்ச்சியாக பதக்கங்களை வென்று இந்தியர்களை பெருமைப்படுத்தி வருகிறார்கள். ஒலிம்பிக் போட்டிகளுக்கு அடுத்தப்படியாக உலகப்புகழ் பெற்ற விளையாட்டுப் போட்டிகள் என்றால் அது காமன்வெல்த் போட்டிகள்தான். ஆனால் காமன்வெல்த் போட்டிகளுக்கும், ஒலிம்பிக் போட்டிகளுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்று எப்போதாவது சிந்தித்து உள்ளீர்களா?

ஒலிம்பிக்ஸ் போட்டி உலகின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வாகும். முதலாவது ஒலிம்பிக் போட்டிகள் 1896-ஆம் ஆண்டு கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகரில் நடைபெற்றன. அன்று முதல் இந்தப் போட்டிகள் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகின்றன. அதேசமயம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளும் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒரு சர்வதேச விளையாட்டு நிகழ்வாகும். முதலாவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 1930-ஆம் ஆண்டில் நடைபெற்றன. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ஒலிம்பிக் போட்டிகள் என்றால் என்ன?
ஒலிம்பிக் போட்டிகள் உலகின் மிகப் பழமையான மற்றும் பிரம்மாண்டமான விளையாட்டு நிகழ்வுகளில் ஒன்றாகும். ஒலிம்பிக் போட்டிகள் முதன்முதலில் 1896-ஆம் ஆண்டு ஏதென்ஸ் நகரில் நடத்தப்பட்டன. ஒலிம்பிக் என்பது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒரு உலகளாவிய விளையாட்டு நிகழ்வாகும். உலகின் அனைத்து நாடுகளும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கின்றன.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் என்றால் என்ன?
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் என்பது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பல விளையாட்டுக்களை உள்ளடக்கிய ஒரு நிகழ்வாகும். முதல் காமன்வெல்த் போட்டி 1930-ஆம் ஆண்டு கனடாவில் நடைபெற்றது. தற்போது காமன்வெல்த் போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வருகிறது.
காமன்வெல்த் போட்டிகளுக்கும், ஒலிம்பிக் போட்டிகளுக்கும் உள்ள வேறுபாடுகள்
பங்கேற்கும் நாடுகள்: ஒலிம்பிக் போட்டிகளில் உலகம் முழுவதுமிருந்து கிட்டதட்ட 200-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கின்றன; ஆனால் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் காமன்வெல்த் அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகள் மட்டுமே பங்கேற்கின்றன. அதாவது கிட்டதட்ட 70 நாடுகளே பங்கேற்கின்றன.
கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை: ஒலிம்பிக்ஸ் உலகின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வாகும். ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியிலும் சராசரியாக சுமார் 10,000 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். அதேசமயம், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் சுமார் 4,000 முதல் 5,000 வரையிலான விளையாட்டு வீரர்களே பங்கேற்கின்றனர்.
நடைபெறும் கால இடைவெளி: ஒலிம்பிக் போட்டிகள் கோடைக்கால மற்றும் குளிர்காலப் போட்டிகள் என இரு வகைகளில் நடத்தப்படுகின்றன. ஆனால், காமன்வெல்த் போட்டிகள் ஒரு முறை மட்டுமே நடத்தப்படுகின்றன. கடந்த காலங்களில், காமன்வெல்த் போட்டிகளின் குளிர்காலப் போட்டிகளை நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனால் அவை வெற்றிபெறாததால் 1970-ல் கைவிடப்பட்டன.



Click it and Unblock the Notifications

