Latest Updates
-
வக்கீல்களும், நீதிபதிகளும் ஏன் கருப்பு நிற கோட் மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? -
ஆகஸ்ட் மாத செவ்வாய் பெயர்ச்சி: இந்த 5 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
கார கொழுக்கட்டையும், ஆந்திரா மிளகாய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 30 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளை துரதிர்ஷ்டம் விடாமல் துரத்தப்போகுதாம் -
செட்டிநாடு பாகற்காய் சாம்பார் ரெசிபி - இந்த மாதிரி வைச்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட ஆசையா சாப்பிடுவாங்க -
இந்தியாவில் அதிக கட்டணம் வசூலிக்கும் டாப் 5 சுங்கச்சாவடிகள் என்னென்ன தெரியுமா? -
சத்தான மீல் மேக்கர் கட்லெட் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மொறுமொறுனு சாப்பிட சூப்பரா இருக்கும் -
ஆகஸ்ட் 05-ல் புதன் கடக ராசிக்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தாபா ஸ்டைல் முட்டை பட்டாணி மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும்
கேரளா ஸ்டைல் மசாலா ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும்
Kerala Style Rasam Recipe in Tamil: உங்கள் வீட்டில் தினமும் ரசம் செய்வீர்களா? எப்படி ரசம் செய்தாலும் அந்த ரசம் சுவையாக இருப்பதில்லையா? ஒரு நாள் நன்றாக வைத்தால், அடுத்த நாள் சொதப்பிவிடுகிறதா? அப்படியானால் அடுத்தமுறை ரசம் செய்வதாக இருந்தால், கேரளா ஸ்டைல் ரசத்தை முயற்சி செய்து பாருங்கள். இப்படி ரசம் செய்யும் போது, அந்த ரசம் சுவையாக இருப்பதோடு, வீடே மணக்கும். இந்த ஸ்டைலில் ரசம் செய்தால், ஒரு தட்டு சோறு டக்கென்று காலியாகிவிடும். அந்த அளவிற்கு இதன் சுவையும், மணமும் இருக்கும்.

கேரளா ஸ்டைலில் நாம் சிக்கன், சட்னி, மீன் என பல உணவுகளை முயற்சித்திருப்போம், ஆனால் கேரளா ஸ்டைல் ரசத்தை இதுவரை முயற்சி செய்திருக்க மாட்டோம். இந்த ரசம் செய்வதற்கு எளிதாக இருப்பதுடன் இதன் சுவையும் மிகவும் வித்தியாசமானதாக இருக்கும்.
உங்களுக்கு கேரள ஸ்டைல் சுவையான ரசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கேரளா ரச ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- நெய் - ½ ஸ்பூன்
- கடுகு - ½ ஸ்பூன்
- சீரகம் - 1 ஸ்பூன்
- கறிவேப்பிலை - 1 கொத்து
- பெருங்காயத் தூள் - ¼ ஸ்பூன்
- தக்காளி - 2
- உப்பு - தேவையான அளவு
- மஞ்சள் தூள் - ½ ஸ்பூன்
- மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
- மல்லித் தூள் - 1 ஸ்பூன்
- மிளகுத் தூள் - 1 ஸ்பூன்
- புளிக் கரைசல் - கால் கப்
- தண்ணீர் - 3 கப்
- தட்டிய பூண்டு - 3 பற்கள்
- நறுக்கிய கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி
செய்முறை:
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து மிதமான தீயில் சூடாக்கவும். பின் நெய், கடுகு, சீரகம், பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- கடுகு வெடித்ததும் நறுக்கிய தக்காளி மற்றும் நசுக்கிய பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும்.
- பின்னர் உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். மூடி வைத்து, இரண்டு நிமிடங்கள் அல்லது தக்காளி மென்மையாகும் வரை சமைக்கவும்.
- தக்காளி நன்கு குழைந்து மென்மையாகும் போது, தனியாத் தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகுத் தூள் மற்றும் புளிக் கரைசலைச் சேர்க்கவும்.
- நன்றாகக் கலந்து, ஒரு கப் தண்ணீர் ஊற்றவும். மசாலா மற்றும் புளியின் பச்சை வாசனை போகும் வரை அல்லது ஐந்து நிமிடங்கள் வரை கொதிக்க விடவும்.
- ரசம் கொதிக்கத் தொடங்கியதும், நறுக்கிய கொத்தமல்லித் தழை மற்றும் மேலும் இரண்டு கப் தண்ணீர் சேர்க்கவும்.
- நன்றாகக் கலந்து, ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்துவிடவும்.
- அவ்வளவுதான் கேரளா ஸ்டைல் இன்ஸ்டன்ட் ரசம் தயார்.



Click it and Unblock the Notifications