Latest Updates
-
52000 கோடி ரூபாய் இழப்பீடு செலுத்தப்போகும் பிரபல நிறுவனம் - அதிர்ச்சியளிக்கும் காரணம் என்ன தெரியுமா? -
கஜலக்ஷ்மி யோகம் ஆகஸ்ட் 05-ல் உருவாவதால் புது சொத்துக்களை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப வைட்டமின் சி குறைபாடு இருக்குன்னு அர்த்தம்.. -
கேரளா ஸ்டைல் மசாலா ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
வக்கீல்களும், நீதிபதிகளும் ஏன் கருப்பு நிற கோட் மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? -
ஆகஸ்ட் மாத செவ்வாய் பெயர்ச்சி: இந்த 5 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
கார கொழுக்கட்டையும், ஆந்திரா மிளகாய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 30 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளை துரதிர்ஷ்டம் விடாமல் துரத்தப்போகுதாம் -
செட்டிநாடு பாகற்காய் சாம்பார் ரெசிபி - இந்த மாதிரி வைச்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட ஆசையா சாப்பிடுவாங்க
பொட்டுக்கடலை பூர்ண பணியாரம் - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைகளுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க..
Pottukadalai Poorna Paniyaram Recipe In Tamil: மாலை வேளையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியுடன் வரும் உங்கள் பிள்ளைகளுக்கு சத்தான அதே சமயம் ருசியான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் பிள்ளைகளுக்கு பணியாரம் பிடிக்குமா? உங்கள் வீட்டில் பொட்டுக்கடலையும், தேங்காயும் உள்ளதா? அப்படியானால் அவற்றைக் கொண்டு பூர்ண பணியாரம் செய்து கொடுங்கள். இந்த பணியாரம் வழக்கமாக சாப்பிடும் பணியாரத்தை விட வித்தியாசமான சுவையில் இருக்கும்.

உங்களுக்கு இந்த பொட்டுக்கடலை பூர்ண பணியாரத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பொட்டுக்கடலை பூர்ண பணியாரம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
பொட்டுக்கடலை பூரணத்திற்கு...
* பொட்டுக்கடலை - 1/2 கப்
* நறுக்கிய தேங்காய் - 1/2 கப்
* பொடித்த வெல்லம் - 1/2 கப்
* தண்ணீர் - 2 டேபிள் ஸ்பூன்
* நெய் - 1 ஸ்பூன்
* ஏலக்காய் தூள் - 2 சிட்டிகை
வெளிமாவிற்கு...
* புளிப்பில்லாத இட்லி மாவு
* அரிசி மாவு - 2 ஸ்பூன்
* ஏலக்காய் தூள் - 2 சிட்டிகை
* உப்பு - 2 சிட்டிகை
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் பொட்டுக்கடலையை சேர்த்து கொரகொரவென்று
அரைத்து, ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே ஜாரில் நறுக்கிய தேங்காயை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* அடுத்து ஒரு பாத்திரத்தில் பொடித்த வெல்லத்தை சேர்த்து, சிறிது நீரை
ஊற்றி, கரைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 ஸ்பூன் நெய் ஊற்றி
சூடானதும், தேங்காயை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுக்க
வேண்டும்.
* பின்பு அதில் அரைத்த பொட்டுக்கடலை மாவை சேர்த்து நன்கு வறுக்க
வேண்டும்.
* பிறகு அதில் வெல்ல நீரை வடிகட்டி சேர்த்து, ஏலக்காய் தூளை சேர்த்து
நன்கு கிளறி, ஈரப்பதம் போகும் அளவில் கிளறி இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* பின் அதை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து ஒரு தட்டில் வைத்துக்
கொள்ள வேண்டும்.
* அடுத்து மேல் மாவிற்கு புளிப்பில்லாத இட்லி மாவை எடுத்து, அத்துடன்
அரிசி மாவு, ஏலக்காய் தூள் மற்றும் உப்பு சேர்த்து கட்டிகளின்றி நன்கு
கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து, குழிகளில் நெய் ஊற்றி,
பின் ஒவ்வொரு உருண்டையையும் எடுத்து, இட்லி மாவில் போட்டு,
குழிக்கரண்டியால் எடுத்து, பணியாரக் குழிகளில் ஊற்றி மிதமான தீயில்
வைத்து முன்னும் பின்னும் பொன்னிறமாகும் வரை வேக வைத்து எடுத்தால்,
பொட்டுக்கடலை பூர்ண பணியாரம் தயார்.



Click it and Unblock the Notifications