Latest Updates
-
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? -
2 கைப்பிடி முருங்கைக்கீரை இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. சாதத்துக்கு தாறுமாறா இருக்கும்.. -
திருநெல்வேலி ஸ்டைல் பொரிச்ச குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - டக்கரா இருக்கும் -
புதாதித்ய ராஜயோகம்: இன்று முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 6 ராசிக்கு பணம் கொட்டும்.. தொழில் செழிக்கும்.. -
புரட்டாசி மாதம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு புது வாழ்க்கை கிடைக்கும் அதிர்ஷ்ட மாதமாக இருக்கப்போகுதாம் -
1 பாக்கெட் சேமியா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும்.. -
செப்டம்பர் 18,, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஆபத்துகள் சூழும் கடினமான நாளாக இருக்குமாம் -
சனி-சூரியன் உருவாக்கிய சமசப்தம யோகம்: இன்று முதல் அடுத்த 30 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
விநாயகர் சதுர்த்திக்கு வாங்குன விளாங்காய் இருக்கா? அப்ப இப்படி சட்னி செய்யுங்க.. தோசைக்கு அள்ளும்.. -
உங்க வாயைச் சுற்றி ரொம்ப கருப்பா இருக்குதா? அப்ப இந்த 7 ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணி பாருங்க..
ராகு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கிரகண யோகம்: மே 10 முதல் இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்..
Grahan Yog 2026: வேத ஜோதிடத்தில் ராகு ஒரு நிழல் கிரகமாகும். இந்த ராகு ஒரு ராசியில் 18 மாதங்கள் வரை இருப்பார். மேலும் இவர் எப்போதும் பின்னோக்கி வக்ர நிலையில் தான் பயணிப்பார். தற்போது ராகு கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் மனதின் காரணியாக கருதப்படும் சந்திரன் மே 10 ஆம் தேதி கும்ப ராசிக்குள் நுழையவுள்ளார். இதனால் கும்ப ராசியில் ராகு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் கிரகண யோகம் உருவாகவுள்ளது.

இந்த யோகத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதில் சிலருக்கு சிறப்பாக இருந்தாலும், சில ராசிக்காரர்கள் வாழ்வில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். குறிப்பாக முடிவெடுக்கும் திறன் பாதிக்கப்படும். வேலையில் தடைகளை சந்திக்க நேரிடும். உறவுகளில் விரிசல் ஏற்படலாம். இப்போது மே 10 ஆம் தேதி கும்ப ராசியில் ராகு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் உருவாகும் கிரகண யோகத்தால் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கடகம்
ராகு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் உருவாகும் கிரகண யோகத்தால் கடக ராசிக்காரர்கள் ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். செய்யும் வேலை மற்றும் தொழிலில் ஆர்வம் குறையக்கூடும். இதனால் உங்களின் வேலை முடிவடையாமல் நிலுவையில் இருக்கும். நிலம் அல்லது சொத்து தொடர்பான பிரச்சனைகளுக்காக நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டியிருக்கும். இக்காலத்தில் உங்களை நீங்களே வருத்திக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாமல் சிரமப்படக்கூடும்.
கன்னி
ராகு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் உருவாகும் கிரகண யோகத்தால் கன்னி ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எந்த ஒரு அவசர முடிவுகளை எடுப்பதையும் தவிர்க்க வேண்டும். நிதி விஷயங்களில் அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய இழப்பை சந்திப்பீர்கள். உடல் நலம் மற்றும் தினசரி வழக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும். அவற்றைப் புறக்கணித்தால் பெரிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தொழில் மற்றும் வணிக முடிவுகளை எடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். முக்கியமாக எந்த ஒரு பிரச்சனையையும் பேசி தீர்க்க முயற்சிக்க வேண்டும்.
கும்பம்
ராகு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் உருவாகும் கிரகண யோகத்தால் கும்ப ராசிக்காரர்கள் வாழ்க்கையில் திடீர் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். காதல் வாழ்க்கையில் பிரச்சனைகள் தலைத்தூக்கும். அகங்காரம் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் உறவில் விரிசல் ஏற்படும். யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். இல்லாவிட்டால் பெரிய ஏமாற்றத்தை சந்திப்பீர்கள். பணியிடத்தில் அழுத்தம் அதிகரிக்கும். உங்களின் திட்டங்களை அல்லது யோசனைகளை யாருடனும் இக்காலத்தில் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications



