Latest Updates
-
ரவா குழிப்பணியாரமும்.. தேங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்..
மசாலா கோதுமை தோசையும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..
Gothumai Dosa With Coconut Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி தோசை செய்வீர்களா? ஏனெனில் உங்கள் வீட்டில் உள்ளோர் தோசை பிரியர்களா? சொல்லப்போனால் இட்லியை விட, தோசையைத் தான் நிறைய பேருக்கு பிடிக்கும். இந்த தோசைக்கு சட்னி அருமையான சைடு டிஷ். தோசையில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒன்று தான் கோதுமை மாவு கொண்டு செய்யக்கூடிய கோதுமை தோசை.

பொதுவாக இந்த கோதுமை தோசையை செய்ய கோதுமை மாவை நீரில் கரைத்து தான் தோசை சுடுவோம். ஆனால் இப்படி வெறும் கோதுமை தோசையை சாப்பிட சிலருக்கு பிடிக்காது. அப்படிப்பட்டவர்களுக்கு கோதுமை மாவுடன் ஒருசில பொருட்களை சேர்த்து அரைத்து, தோசையாக சுட்டுக் கொடுத்தால், விரும்பி சாப்பிடுவார்கள். இந்த தோசைக்கு தேங்காய் சட்னி அருமையான சைடு டிஷ்ஷாக இருக்கும்.
இந்த கோதுமை தோசை மற்றும் தேங்காய் சட்னி குறித்து ஈரோடு அம்மாச்சி சமையல் என்னும் யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்த கோதுமை தோசை மற்றும் தேங்காய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோதுமை தோசை மற்றும் தேங்காய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
தோசை மாவிற்கு..
* கோதுமை மாவு - 1/4 கிலோ
* அரிசி மாவு - 25 கிராம்
* வரமிளகாய் - 1
* இஞ்சி - சிறிய துண்டு
* பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்
* மிளகு - 10
* சீரகம் - 2 சிட்டிகை
* உப்பு - சுவைக்கேற்ப
* கறிவேப்பிலை - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
* தண்ணீர் - தேவையான அளவு
தேங்காய் சட்னிக்கு...
* துருவிய தேங்காய் - 1/4 கப்
* பச்சை மிளகாய் - 2
* பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* இஞ்சி - சிறிய துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் பெரிய மிக்சர் ஜாரை எடுத்து, அதில் 1/4 கிலோ கோதுமை
மாவு, 25 கிராம் அரிசி மாவு, வரமிளகாய், இஞ்சி, மிளகு, சீரகம்,
சுவைக்கேற்ப உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து நன்கு
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்ததை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, தோசை மாவு பதத்திற்கு
தேவையான அளவு நீரை ஊற்றி நன்கு கலந்து, மூடி வைத்து 5 நிமிடம் ஊற
வைக்க வேண்டும்.
* அதற்குள் சட்னி செய்து விடலாம். அதற்கு மிக்சர் ஜாரில் 1/4 கப்
துருவிய தேங்காய், பச்சை மிளகாய், பொட்டுக்கடலை, கறிவேப்பிலை, இஞ்சி
மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு கிண்ணத்தில் அரைத்த சட்னியை எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* அடுத்து சட்னியை தாளிப்பதற்கு ஒரு சிறிய வாணலியை அடுப்பில் வைத்து,
அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை
சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கலந்தால், தேங்காய் சட்னி
தயார். கோதுமை தோசைக்கு தேங்காய் சட்னி கெட்டியாக இருந்தால் தான்
நன்றாக இருக்கும். எனவே சட்னிக்கு அளவாக நீரை ஊற்றி கலந்து
கொள்ளுங்கள்.
* இறுதியாக ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், கலந்து
வைத்துள்ள மாவை தோசையாக ஊற்றி எடுத்தால், அருமையான கோதுமை தோசை
தயார்.



Click it and Unblock the Notifications
