Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க..
ஆண்களின் பாலுணர்ச்சியைத் தூண்டும் அற்புத உணவுகள்!!!
ஆண்கள் பல பாலியல் பிரச்சனைகளை சந்திப்பார்கள். இத்தகைய பிரச்சனைகளைப் போக்க உணவுகள் பெரிதும் உதவியாக இருக்கும்.
தற்போது ஒவ்வொருவருக்கும் உடல் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை உள்ளது. அதிலும் பாலியல் ஆரோக்கியம் என்றால் சொல்லவே வேண்டாம். பலரும் அதற்கு தான் முதன்மையான இடத்தைக் கொடுத்து, அதற்காக நிறைய பணம் செலவழித்து, பிரச்சனையை போக்க நினைப்பார்கள். குறிப்பாக ஆண்கள் தான் பல பாலியல் பிரச்சனைகளை சந்திப்பார்கள். இதற்கு முக்கிய காரணம் ஆல்கஹால், போதைப் பொருட்கள், தூக்கமின்மை, குறிப்பிட்ட மருந்துகள் மற்றும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு போன்றவைகள் பாலுணர்ச்சியில் நாட்டத்தைக் குறைக்கின்றன. இதனால் செக்ஸ் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.
அதில் விறைப்புத்தன்மை பிரச்சனை, நீண்ட நேரம் படுக்கையில் சிறப்பாக செயலாற்ற முடியாதது போன்றவை குறிப்பிடத்தக்கவை. இத்தகைய பிரச்சனைகளைப் போக்க உணவுகள் பெரிதும் உதவியாக இருக்கும். இங்கு ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் உணவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த உணவுகளை ஆண்கள் தவறாமல் அன்றாட உணவில் சேர்த்து வந்தால் பாலுணர்ச்சி தூண்டப்பட்டு, படுக்கையில் சிறப்பாக செயலாற்ற முடியும்.

பால்
பாலில் நிறைந்துள்ள நன்மைகள் ஏராளம். அதில் ஒன்று படுக்கையில் சிறப்பாக செயலாற்ற உதவும். எனவே ஆண்கள் தினமும் இரவில் படுக்கும் முன் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலை குடித்து வாருங்கள்.

கடல் சிப்பிகள்
கடல் சிப்பி பாலுணர்ச்சியைத் தூண்டுவதில் முதன்மையான உணவுப் பொருள். இதில் ஜிங்க் அதிக அளவில் இருப்பதால், ஆண்கள் இதனை அடிக்கடி உட்கொண்டு வந்தால், பாலுணர்ச்சி சீரான முறையில் தூண்டப்படும்.

அஸ்பாரகஸ்
அஸ்பாரகஸ் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை குறைத்து, பாலியல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.

ஆட்டு ஈரல்
ஈரலில் ஜிங்க் சத்து வளமாக நிறைந்துள்ளது மற்றும் இது உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவை சீராக பராமரிக்க உதவும்.

முட்டை
தினமும் ஒரு முட்டை சாப்பிட்டு வந்தால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைப்பதோடு, இதில் புரோட்டீன்கள் மற்றும் வைட்டமின்கள் வளமாக நிறைந்திருப்பதால், இது பாலியல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதுடன், பாலுணர்ச்சியையும் தூண்டும்.

மீன் முட்டை
கோழி முட்டையைப் போன்றே மீன் முட்டையிலும் சத்துக்கள் அதிகம் உள்ளது. அதில் வைட்டமின் பி5 மற்றும் வைட்டமின் பி6 போன்றவை அதிகமாக நிறைந்துள்ளது. இதனை அவ்வப்போது உட்கொண்டு வந்தாலும், பாலுணர்ச்சித் தூண்டப்படும்.

வாழைப்பழம்
வாழைப்பழத்தில் பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் வைட்டமின் பி போன்றவையும், மேலும் இது பாலுணர்ச்சியைத் தூண்டி பாலியல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.

ஆளி விதை
ஆண்கள் ஆளி விதையை சாலட் போன்றவற்றுடன் டாப்பிங் போன்று சேர்த்து உட்கொண்டு வந்தால், பாலுணர்ச்சி தூண்டப்படும்.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு
இதனை மிகவும் சிறப்பான ஒரு செக்ஸ் உணவு எனலாம். ஏனெனில் இந்த காய்கறியில் உள்ள பீட்டா-கரோட்டீன், உடலினுள் வைட்டமின் ஏ-வாக மாற்றமடைகிறது. ஆகவே ஆண்கள் இதனை உணவில் சேர்த்து வர வேண்டும்.

காபி
தினமும் காலையில் ஒரு கப் காபி குடித்து வாருங்கள், நிச்சயம் உங்கள் மனநிலை புத்துணர்ச்சி அடைந்ததுடன், உங்களின் பாலுணர்ச்சியும் தூண்டப்படும்.

சாக்லேட்
சாக்லேட்டில் உள்ள தியோபுரோமைன் என்னும் பொருள், ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதுடன், பாலுகர்ச்சியைத் தரும்.

பூசணிக்காய் விதை
பூசணிக்காய் விதையில் ஜிங்க் அதிகம் இருப்பதால், இவற்றை ஆண்கள் உணவில் அவ்வப்போது சேர்த்து வர வேட்ணடும்.

ஜாதிக்காய்
ஜாதிக்காய் நரம்பு செல்களை தூண்டி, இரத்த ஓட்டத்தை அதிகரித்து, பாலுறுப்புகளுக்கு இரத்த ஓட்டத்தை சீராக்கி, பாலுணர்ச்சியைத் தூண்டும். ஆகவே இதன் பொடியை உணவில் சேர்த்து வந்தால், பாலுணர்ச்சி அதிகமாகும்.

உணவு பண்டங்களுக்கு மணமூட்டும் காளான் (Truffles)
இந்த வகையான காளான் உணவு பண்டங்களில் மணமூட்டுவதற்காக சேர்க்கப்படும். இந்த வகை காளானை ஆண்கள் உட்கொண்டு வந்தால், பாலுணர்ச்சி தூண்டப்பட்டு, படுக்கையில் சிறப்பாக செயல்பட முடியும்.

சூரியகாந்தி விதை
சூரியகாந்திப் பூவின் விதையில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே இதன் விதையையோ அல்லது சூரியகாந்தி எண்ணெயையோ உணவில் சேர்த்து வந்தால், ஹார்மோன் அளவுகள் அதிகரித்து, படுக்கையில் நன்று செயலாற்ற முடியும்.

மீன்
மீன்களில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நிறைந்துள்ளது. இவற்றை உட்கொண்டு வந்தால், பாலுணர்ச்சி அதிகரித்து, செக்ஸ் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

வேர்க்கடலை
வேர்க்கடலையில் ஜிங்க் அதிகம் உள்ளது. பொதுவாக ஜிங்க் சத்து ஆரோக்கியமான விந்தணுக்களின் உற்பத்திக்கு வழிவகுக்கும். ஆகவே ஆண்கள் இதனை அடிக்கடி உட்கொண்டு வந்தால், விந்தணுக்களின் அளவு அதிகரித்து, பாலுணர்வும் அதிகமாகும்.

மாட்டிறைச்சி
மாட்டிறைச்சியிலும் ஜிங்க் வளமாக நிறைந்துள்ளது. எனவே ஆண்கள் மாட்றைச்சியை அவ்வப்போது சிறு அளவில் எடுத்து வந்தால், பாலியல் பிரச்சனைகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

மட்டன்
மட்டனிலும் ஜிங்க் உள்ளது. எனவே ஆண்கள் தங்கள் மனைவியிடம் மட்டனைக் கொண்டு பல சுவையான ரெசிபிக்களை சமைத்து கொடுக்குமாறு கேட்டு செய்து சாப்பிடலாம். இதனால் படுக்கையில் நன்கு செயல்பட முடியும்.

அவகேடோ
வெண்ணெய் பழம் என்னும் அவகேடோவில் வைட்டமின் பி6 மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இவை பாலுணர்ச்சியைத் தூண்டுவதில் மிகவும் சிறப்பானவை.

ஓட்ஸ்
காலை உணவாக ஓட்ஸை எடுத்து வந்தால், உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைப்பதோடு, கட்டிலிலும் நன்கு சிறப்பாக செயல்பட முடியும்.

ஸ்ட்ராபெர்ரி
ஸ்ட்ராபெர்ரியில் வைட்டமின் சி அதிகம் இருப்பதோடு, அவை உடலின் அனைத்து பாகங்களுக்கும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, பாலுணர்ச்சியைத் தூண்டும்.

தர்பூசணி
நேச்சுரல் வயகரா என்று செல்லமாக அழைக்கப்படும் தர்பூசணியில், பீட்டா கரோட்டீன் மற்றும் இரத்த நாளங்களை ரிலாக்ஸ் அடையச் செய்யும் சிட்ருலின் உள்ளது.

ரெட் ஒயின்
ஆல்கஹால் செக்ஸ் உணர்வை அழிப்பவை தான். ஆனால் ரெட் ஒயின் குடித்தால், பாலுணர்ச்சி தூண்டப்படும்.



Click it and Unblock the Notifications











