உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அழிக்கும் உணவுகள்!!!

Posted By: Staff
Subscribe to Boldsky

பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பு மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுக்கலாம். அடிக்கடி வைரல் காய்ச்சலால் நீங்கள் தாக்கப்பட்டு, அது உங்களையும், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பையும், மேலும் பலவீனமடையச் செய்யும். நீங்கள் எத்தனை முறை இப்படி வைரல் காய்ச்சலால் அவதிப்படுகிறீர்கள்? காற்றின் திசையில் மாற்றம் ஏற்படும் போது உங்களுக்கு சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறதா? வெளியே நின்று குளிர்ந்த காற்றை சுவாசித்தால் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பு பலவீனமடைகிறதா? இவையனைத்தும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பிற்கான அறிகுறிகளாகும்.

உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 15 சக்தி வாய்ந்த உணவுகள்!!!

நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பு இயற்கையாகவே பலவீனமடைகிறதா அல்லது ஏதேனும் சில வழியில் அப்படி நடக்கிறதா? பல நேரங்களில், பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பு இருப்பது இயற்கையே. சிலர் தங்களின் சிறு வயது முதலே பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பை கொண்டுள்ளதாக கூறுவார்கள்.

ஆனால் சிலருக்கோ அவர்கள் உண்ணும் உணவுகள் மற்றும் வாழும் சுற்றுச் சூழலால் இது ஏற்படுகிறது. ஆம், பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பிற்கு சுற்றுச்சூழல் முக்கிய காரணமாக விளங்குகிறது. அது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பை பாதிக்கக்கூடும். அதே போல் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பை முழுமையாக அழிக்கும் உணவுகளும் கூட இருக்கிறது.

செரிமான மண்டலத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுகள்!!!

அவைகள் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பை பலவீனமடைய செய்வதோடு மட்டுமல்லாது, மெதுவாக அதனை அழித்திடவும் செய்யும். அப்படிப்பட்ட உணவுகளைப் பற்றி தான் நாம் பார்க்கப் போகிறோம். அந்த உணவுகளை நீங்கள் உட்கொண்டால், மிகுந்த கவனுத்துடன் அவைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காப்ஃபைன் மற்றும் மதுபானம்

காப்ஃபைன் மற்றும் மதுபானம்

நீண்ட நேரம் விழித்திருந்து வேலை பார்க்க இது உங்களுக்கு உதவுகிறது என நீங்க வாதாடலாம். ஆனால் இவைகளை அதிகளவில் எடுத்துக் கொண்டால், அதனால் ஏற்பட போகும் விளைவுகளைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் உங்கள் உடலையும், அதன் அமைப்புகளையும் மட்டும் தொந்தரவு செய்யாமல், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பிற்கும் சேர்த்தே தொந்தரவு கொடுக்கிறீர்கள். இவைகளை குறைவாக பருகினால் உடலை எவ்வகையிலும் பாதிக்காது. ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சே.

சர்க்கரை கலந்த சோடா பானங்கள்

சர்க்கரை கலந்த சோடா பானங்கள்

சோடா மற்றும் சர்க்கரை கலந்த எதுவாக இருந்தாலும் அது நம் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பிற்கு ஆபத்தானது. அதிலும் சோடா கலந்த பானத்தை பருகும் போது நல்ல உற்சாகத்தை அளித்தாலும், நம் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பு அதனால் பாதிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. மாறாக அவ்வகை பானங்களை தவிர்த்து விடுங்கள். சோடா பாப்ஸ், சோடா கலந்த குளிர் பானங்கள் மற்றும் இதர சோடா பானங்கள் இதில் அடக்கம். இது உங்கள் குடல் பாதையை பாதித்து உடலுக்குள் கிருமிகள் நுழைய வழிவகுக்கும்.

சிப்ஸ்

சிப்ஸ்

அடிப்படையில் இது கொழுப்பு உணவிற்கு மாற்று உணவாக கருதப்படுகிறது. உருளைக்கிழங்கு சிப்ஸ் மூலமாக சில வருடங்களுக்கு முன்பு தான் இது அறிமுகப்படுத்தப்பட்டது. இது கொழுப்பு உணவிற்கு மாற்றாக இருந்தாலும் கூட பலரும் நினைப்பதை போல் ஆரோக்கியமானது அல்ல. சொல்லப்போனால், இந்த ஆரோக்கியமற்ற மாற்று உணவு உங்கள் செரிமான அமைப்பில் சில பிரச்சனைகளை உருவாக்கிறது. இதனால் ஒட்டுமொத்த அமைப்பும் பாதிக்கப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பிற்கு தீங்கை விளைவிக்கும் இவ்வகை உணவுகளை விட்டு தள்ளியே இருங்கள். இவைகளால் உடலுக்கு தேவையான வைட்டமின் ஏ, டி மற்றும் கே தடுக்கப்படுகிறது.

அமிலம் அடங்கிய உணவுகள்

அமிலம் அடங்கிய உணவுகள்

அதிகளவிலான அமிலம் அடங்கிய உணவுகளை கண்டிப்பாக தவிர்க்கவும். உணவுகளில் உள்ள அதிக அமிலத்தன்மை உங்கள் இரைப்பை உட்பூச்சை அழிக்கும். இதனால் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பும் அழியும். அதிகளவிலான அமிலம் அடங்கிய உணவுகளை உண்ணும் போது இதனை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எதுவுமே குறைவான அளவில் இருந்தால், அதிலும் ஒரு பழமாக இருந்தால் அது ஆபத்தை விளைவிக்காது. உதாரணமாக மிதமான அமிலத்தன்மை அடங்கிய திராட்சையை சற்று உண்ணலாம். ஆனால் அதனை அதிகமாக எடுத்துக் கொண்டால், அதிலும் செரிமான அமைப்பு பலவீனமாக இருக்கும் இரவு நேரத்தில் என்றால், கேட்கவே வேண்டாம்.

நட்ஸ்

நட்ஸ்

எப்போதுமே நட்ஸ் என்றால் மிதமான அளவில் உண்ணுங்கள்; அதுவும் ஒரு கையளவு மட்டுமே. ஒரு கிண்ணம் முழுவதுமான நட்ஸ் அல்லது அதற்கு மேலாக உட்கொண்டால், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பை நீங்களே கெடுத்துக் கொள்கிறீர்கள். அதே போல் நீங்கள் நட்ஸை உட்கொள்ளும் முறையை வைத்து உங்கள் உடலில் கிருமிகள் நுழையுமா இல்லையா என கூறி விடலாம். அதனால் சுத்தமான முறையில் நட்ஸை உண்ணுங்கள். உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பை அழிக்கும் உணவுகளில் இதுவும் ஒன்றாகும்.

காலை உணவுகளில் பாவங்களை சேர்த்தல்

காலை உணவுகளில் பாவங்களை சேர்த்தல்

காலை வேளையில் உங்களுக்கு தொப்பை விழ காரணமாக இருக்கும் உணவுகளை சேர்க்கக் கூடாது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பையும் அவை பலவீனமடையச் செய்யும். இதை நீங்கள் நம்ப மறுக்கலாம். ஆனால் கொழுப்பு கலந்த உணவுகளான கேரமல் தோசை போன்றவற்றை சேர்த்து கொண்டால், அவை உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பை அழித்துவிடும். குறைந்தது காலை உணவிற்காவது அவைகளை தவிர்ப்பது நல்லது. நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பை அழிக்கும் உணவுகளில் இதுவும் ஒன்றாகும்.

இதுப்போன்று சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பல தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Foods That Destroy Your Immunity

Here are some foods that destroy immunity. If you are consuming such foods, try to consume with caution. Take a look at these immunity bad foods.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter