Latest Updates
-
சனி-சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: ஜூன் 25 முதல் இந்த 5 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டும்... -
2 உருளைக்கிழங்கு இருந்தா, இப்படி குருமா செய்யுங்க.. சிக்கன், மட்டன்-லாம் தோத்துடும்.. -
ஜூன் 17-ல் உருவாகும் அரிய கிரக சேர்க்கையால் அற்புதமான நன்மைகளை அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
கோவை அன்னபூர்ணா ஹோட்டல் வெஜ் குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும் -
இனிப்புகளின் ராஜா என்று அழைக்கப்படும் இனிப்பு எது தெரியுமா? உங்களுக்கு இந்த இனிப்பு பிடிக்குமா? -
எந்த கீரை வாங்கினாலும் இப்படி ஒருவாட்டி செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஜூலை 27-ல் நடக்கும் சனி வக்ர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கனவு நனவாகப்போகுது..! -
இந்த 4 மாதங்களில் பிறந்த பெண்கள் மிகச்சிறந்த அம்மாக்களாக இருப்பார்களாம் - நீங்க பிறந்த மாதம் என்ன? -
முதலைகள் ஏன் கற்களை விரும்பி சாப்பிடுகின்றன தெரியுமா? இதுக்குப் பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கா? -
International Yoga day 2026: வாய்வு தொல்லையால் அவதிப்படுகிறீர்களா? அப்ப தினமும் இந்த யோசனங்களை செய்யுங்க..
காலையில் சாப்பிடுவதற்கு ஏற்ற மிகவும் சிறப்பான பழங்கள்!!!
காலை உணவானது மிகவும் இன்றியமையாதது. ஏனெனில் ஒருவர் நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்பட வேண்டுமானால், காலை உணவை தவறாமல் சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிடும் போது, காலை வேளையில் நல்ல ஆரோக்கியமான உணவை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். குறிப்பாக உடல் எடையை குறைக்க நினைப்போர் காலை உணவில் கவனமாக இருக்க வேண்டும்.
இதுப்போன்று வேறு: ஆண்கள் தவறாமல் சாப்பிட வேண்டிய 20 உணவுகள்!!!
அதுவும் அத்தகையவர்கள் காலையில் காய்கறிகள் மற்றும் பழங்களை எடுத்துக் கொள்வது மிகவும் சிறந்தது. இந்த கட்டுரையில் காலையில் பழங்களை எடுத்துக் கொள்வதாக இருந்தால், எந்த பழங்களை சாப்பிட்டால் உடலின் ஸ்டாமினாவானது குறையாமல் நாள் முழுவதும் இருக்கும் என்று பார்க்க போகிறோம்.
இப்போது காலையில் சாப்பிடுவதற்கு ஏற்ற மிகவும் சிறப்பான பழங்கள் எவையென்று பார்ப்போமா!!!
அவசியம் படிக்க வேண்டியவை: A முதல் Z வரை உள்ள ஆரோக்கியத்தைக் காக்கும் சூப்பர் உணவுகள்!!!

வாழைப்பழம்
குடலியக்க பிரச்சனையோ அல்லது மலச்சிக்கல் பிரச்சனையோ இருப்பவர்கள், காலையில் வாழைப்பழத்தை சாப்பிட்டால், வயிற்றில் உள்ள நச்சுக்களானது சீரான முறையில் தள்ளப்பட்டு, செரிமான மண்டலமானது முறையாக இயங்கி, மலச்சிக்கல் பிரச்சனையானது நீங்கும். மேலும் வாழைப்பழத்தை சாப்பிட்டால், உடலின் எனர்ஜியானது நாள் முழுவதும் இருக்கும்.

தர்பூசணி
கோடையில் தர்பூசணி அதிகம் கிடைப்பதால், இதனை எடுத்துக் கொள்வதும் மிகவும் சிறந்தது. ஏனெனில் இவற்றில் நீர்ச்சத்து அதிம் இருப்பதால், இதனை காலை வேளையில் உட்கொண்டால், அது உடலின் ஆற்றலை நாள் முழுவதும் தக்க வைக்கும். அதிலும் இதனை துண்டுகளாக்கி, அதில் சிறிது உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து காலையில் சாப்பிட்டால், இதன் சுவை அருமையாக இருக்கும்.

சிட்ரிக் ஆசிட்
சிட்ரிக் ஆசிட்டானது பொதுவாக எலுமிச்சை, ஆரஞ்சு போன்றவற்றில் அதிகம் இருக்கும். மேலும் இந்த ஆசிட்டானது மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடலின் செயல்பாடுகள் முறையாக இயங்க உதவும். அதுமட்டுமின்றி, இவற்றிலும் நீர்ச்சத்து நிறைந்துள்ளது. ஆகவே இதுவும் காலையில் சாப்பிடுவதற்கு ஏற்ற பழங்களுள் ஒன்றாக உள்ளது. ஆனால் இந்த பழங்களை அசிடிட்டி உள்ளவர்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது.

உலர் பழங்கள்
உலர் பழங்களான முந்திரி, பாதாம் மற்றும் உலர் திராட்சை போன்றவைகளில் கார்போஹைட்ரேட் இருப்பதால், இதனை காலையில் எடுத்துக் கொண்டால், நாள் முழுவதும் ஸ்டாமினாவானது இருக்கும். குறிப்பாக இது உடல் எடையை அதிகரிக்க நினைப்போருக்கு மிகவும் சிறப்பான உணவுப் பொருள்.

பப்பாளி
பப்பாளி ஒரு சிறப்பான உடலில் தங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றும் பழங்களில் முக்கியமான ஒன்று. அதுமட்டுமின்றி, சருமம் பொலிவோடு இருக்க வேண்டுமானால், காலையில் பப்பாளியை சாப்பிடுவது நல்லது. ஆனால் இதை உடல் வெப்பம் அதிகம் இருப்போர் உட்கொள்ளக்கூடாது. இல்லாவிட்டால், இது சூட்டைக் கிளப்பிவிடும். மேலும் கர்ப்பிணிகள் இந்த பழத்தை சாப்பிடக்கூடாது.



Click it and Unblock the Notifications