Latest Updates
-
ரவா அடையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 19 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஜூன் 30-ல் நடக்கும் ராகு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
மதியம் லன்ச் பாக்ஸ்-க்கு இந்த ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
ஃபேஸ் பேக் Vs ஃபேஸ் மாஸ்க் - இவற்றில் சிறந்தது எது? -
ஜூன் 22-ல் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பணமழை கொட்டப்போகுது! -
முருங்கைக்கீரை கடையலும், வாழைக்காய் வறுவலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
எகிறும் முட்டை விலை.. இந்த முட்டைக்கு இணையான புரோட்டீன் நிறைந்த சைவ உணவுகள் இதோ! -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
தள்ளுவண்டி கடை புதினா கொத்தமல்லி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்..
நிச்சயம் உணவில் சேர்க்க வேண்டிய வேர் காய்கறிகள்!!!
பெரும்பாலும் காய்கறிகளில் தண்டு அல்லது வேர் காய்கறிகள் என்று பிரித்து பார்க்காமல், காய்கறிகள் என்று சொல்லி தான் டயட்டில் சேர்த்து வருகிறோம். இருப்பினும் தண்டில் இருந்து கிடைக்கும் காய்கறிகளை விட, வேரிலிருந்து கிடைக்கும் காய்கறிகளில் ஒருசில சிறப்பான ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்திருக்கும். அந்த வகையில் வேரிலிருந்து கிடைக்கக்கூடிய காய்கறிகள் அதிகம் உள்ளன. மேலும் அவை பொதுவாக அனைத்து வீடுகளின் சமையலறையிலும் இருக்கக்கூடியதே. உதாரணமாக, உருளைக்கிழங்கு, வெங்காயம், பூண்டு போன்றவை அன்றாடம் உணவில் சேர்க்கும் உணவுப் பொருட்களே.
ஆனால் அதுமட்டுமின்றி இன்னும் நிறைய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த வேர் காய்கறிகள் உள்ளன. மேலும் அவை மிகவும் பிரபலமானவையும் கூட. அதுமட்டுமல்லாமல், வேரிலிருந்து கிடைக்கும் காய்கறிகள் உடலுக்கு சிறப்பான அளவில் ஆற்றலைக் கொடுக்கக்கூடியவை. ஒவ்வொரு வேர் காய்கறிகளிலும் ஒவ்வொருவிதமான சத்துக்கள் நிறைந்துள்ளன.
இப்போது வேரிலிருந்து கிடைக்கக்கூடிய சில ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகளைப் பார்ப்போம். அதைப் பார்த்து உணவில் சேர்த்து, நன்மைகளை பெறுங்கள்.

பீட்ரூட்
அனைவருக்குமே பீட்ரூட் ஒரு வேர் காய்கறி என்பது தெரியும். அத்தகைய பீட்ரூட்டில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. குறிப்பாக அவை இரத்த சோகை பிரச்சனை உள்ளவர்களுக்கு ஒரு சிறப்பான உணவுப் பொருள். மேலும் இதில் பீட்டா-கரோட்டீன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் வளமாக நிறைந்துள்ளது.

டர்னிப்
டர்னிப் சாலட்டில் சேர்க்கக்கூடிய ஒரு சிறப்பான காய்கறி. அதிலும் முக்கியமாக இந்த டர்னிப் இதயத்திற்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய ஒரு வேர் காய்கறி. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமான அளவில் அடங்கியுள்ளது.

உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கில் ஸ்டார்ச் நிறைய உள்ளது. மேலும் இவை உடலுக்கு அதிகப்படியான ஆற்றலையும் கொடுக்கக்கூடியவை. ஆனால் உடல் எடையை குறைக்க நினைத்தால், இதனை டயட்டில் சேர்க்கக்கூடாது.

வெங்காயம்
வெங்காயத்தில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி பொருள் அதிகம் நிறைந்துள்ளதால், அவை நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடும். மேலும் இதில் ஜிங்கு உள்ளதால், ஆண்களின் ஹார்மோன்களின் செயல்பாடுகளை அதிகரிக்கும்.

பூண்டு
பூண்டில் அல்லிசின் என்னும் பொருள் நிறைந்துள்ளது. எனவே இதனை உணவில் அதிகம் சேர்த்தால், இதயம் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் பச்சையாக பூண்டை சாப்பிட்டால், சளி மற்றும் இருமல் குணமாகிவிடும்.

இஞ்சி
இஞ்சியில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. அதை சொன்னால் தான் தெரிய வேண்டும் என்பதில்லை. இருப்பினும் இஞ்சியில் நிறைய செரிமான நொதிகள் நிறைந்திருப்பால், அவை அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்களுக்கு மிகவும் சிறந்தது. குறிப்பாக இருமல், சளி மற்றும் தொண்டையில் தொற்று உள்ளவர்களுக்கு இஞ்சி நல்ல நிவாரணத்தைக் கொடுக்கும்.

கேரட்
கேரட் சாப்பிட்டால், கண்களுக்கு மிகவும் நல்லது. ஏனெனில் இதில் கண்களுக்கு ஆரோக்கியத்தை தரும் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. மேலும் இதனை தினமும் சாப்பிட்டால், சருமம் பொலிவாக இருக்கும்.

முள்ளங்கி
நீரிழிவு நோயாளிகளுக்கு முள்ளங்கி ஒரு சிறப்பான உணவுப் பொருள். ஏனென்றால் இதில் கிளைசீமிக் இன்டெக்ஸ் மிகவும் குறைவாக உள்ளது. மேலும் இவற்றில் பொட்டாசியம் அதிக அளவில் நிறைந்துள்ளதால், இரத்த அழுத்தத்தை சீராக வைக்கும்.

சேனைக்கிழங்கு
சேனைக்கிழங்கில் கார்போஹைட்ரேட் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் இதில் வைட்டமின்-பி காம்ப்ளக்ஸ் அதிகம் இருப்பதால், அவை நரம்புகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும்.

சர்க்கரைவள்ளி கிழங்கு
சர்க்கரைவள்ளிக் கிழங்கு சூப்பர் உணவுகளுள் ஒன்று என்று சொல்லாம். ஏனெனில் இதில் உடலுக்கு வேண்டிய ஆற்றல் அதிகம் இருப்பதோடு, சாதாரண உருளைக்கிழங்கை விட குறைவாகவே ஸ்டார்ச்சானது உள்ளது. மேலும் இதில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் அதிகம் இருப்பதால், இன்சுலின் சுரப்பை சீராக வைக்கும்.



Click it and Unblock the Notifications