For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அசிடிட்டி பிரச்சனை இருக்கா? அப்ப இத ட்ரை பண்ணுங்க...

By Maha
|

பொதுவாக உண்ணும் உணவு செரிமானமாவதற்கு இரைப்பையில் சுரக்கும் அமிலம் தான் உதவியாக உள்ளது. ஆனால் இந்த அமிலமானது அளவுக்கு அதிகமாக சுரக்கும் போது, அவை இரைப்பையை அரிக்க ஆரம்பித்து, வயிற்றில் எரிச்சலை உண்டாக்குகிறது. இவ்வாறு வயிற்றில் ஏற்படும் அதிகப்படியான எரிச்சலைத் தான் அசிடிட்டி (acidity) என்று சொல்வார்கள்.

இத்தகைய அசிடிட்டி வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் சரியான நேரத்திற்கு உணவு சாப்பிடாமல் இருப்பது, வறுத்த மற்றும் காரமான உணவுகளை அதிகம் சாப்பிடுவது, அதிகமாக புகைப்பிடிப்பது மற்றும் மது அருந்துவது போன்றவை குறிப்பிடத்தக்கவை. மேலும் காலை உணவை தவிர்ப்பது, வெறும் வயிற்றில் நீண்ட நேரம் இருப்பது, கொழுப்பு உள்ள உணவுகளை அதிகம் சாப்பிடுவது போன்றவையும் அசிடிட்டியை ஏற்படுத்தக்கூடியவையே.

இத்தகைய அசிடிட்டியை சில அறிகுறிகள் கொண்டு அறியலாம். அவை நெஞ்செரிச்சல், குமட்டல், வாந்தி, உணவு உண்ட பின் ஒரு மணி நேரத்தில் இருந்து நான்கு மணி நேரத்திற்குள் வயிற்றில் வலி அல்லது எரிச்சல் ஏற்படுவது, அடிக்கடி ஏப்பம், வாயில் கசப்பு சுவையை உணர்வது, அடிக்கடி பசி எடுத்தல் போன்றவை. ஆகவே இத்தகைய அறிகுறிகள் இருந்தால், அப்போது உடனே அதனை குணப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். இல்லாவிட்டால், அவை பெரும் பிரச்சனையை உண்டாக்கிவிடும். அதிலும் அசிடிட்டியை போக்குவதற்கு எங்கும் செல்ல வேண்டாம். அதனை சரிசெய்ய பல இயற்கை வைத்தியங்கள் உள்ளன. அவை என்னவென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து பின்பற்றி வந்தாலே, அவற்றை எளிதில் குணப்படுத்தலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தண்ணீர்

தண்ணீர்

தினமும் காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் இரண்டு டம்ளர் தண்ணீர் குடித்து வந்தால், அசிடிட்டி வராமல் தடுக்கலாம்.

முட்டைகோஸ் சாறு

முட்டைகோஸ் சாறு

தினமும் முட்டைகோஸை அரைத்து சாறு எடுத்து குடித்து வந்தால் அசிடிட்டியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

மோர்

மோர்

மோருடன் ஒரு டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி சாறு கலந்து தினமும் குடித்து வந்தால், அசிடிட்டிக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

கிராம்பு

கிராம்பு

கிராம்பு மிகவும் காரமாகத் தான் இருக்கும். இருப்பினும் அதனை வாயில் போட்டு மென்று சாப்பிட்டால், அசிடிட்டி பிரச்சனையை போக்கலாம்.

தேன் மற்றும் ஆப்பிள் சிடர் வினிகர்

தேன் மற்றும் ஆப்பிள் சிடர் வினிகர்

சாப்பிடுவதற்கு முன் ஒரு டேபிள் ஸ்பூன் தேன்னுடன், இரண்டு டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகரை கலந்து குடித்தால், அசிடிட்டி வராமல் தவிர்க்கலாம்.

புதினா சாறு

புதினா சாறு

உணவை சாப்பிட்டு முடித்த பின், கொதிக்கும் நீரில் புதினா இலையைப் போட்டு கொதிக்க விட்டு, பின் குளிர வைதது குடித்தால், அசிடிட்டிக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும்.

இளநீர்

இளநீர்

பல மருத்துவ குணம் கொண்ட இளநீரை, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் அசிடிட்டி குணமடையும்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. அத்தகைய வெள்ளரிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால், அசிடிட்டிக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.

துளசி இலை

துளசி இலை

அசிடிட்டி, வாயு தொல்லை, குமட்டல் போன்றவற்றிற்கு துளசி இலை ஒரு சிறந்த நிவாரணியாகும்.

குளிர்ந்த பால்

குளிர்ந்த பால்

அசிடிட்டியின் போது ஒரு டம்ளர் குளிர்ந்த பாலை குடித்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.

தர்பூசணி

தர்பூசணி

அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்கள், அதிக நீர்ச்சத்து கொண்ட தர்பூசணி பழம் சாப்பிடுவது சிறந்தது.

வாழைப்பழம்

வாழைப்பழம்

வாழைப்பழத்தை தினமும் 2 சாப்பிட்டு வந்தால், அசிடிட்டியால் ஏற்படும் எரிச்சலை தவிர்க்கலாம்.

வினிகர்

வினிகர்

உணவு சாப்பிடும் போது இரண்டு டீஸ்பூன் வினிகர் உட்கொண்டால், அசிடிட்டி வராமல் தடுக்கலாம்.

ஓட்ஸ்

ஓட்ஸ்

அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்கள், காலை உணவாக ஓட்ஸை சாப்பிட்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

இஞ்சி

இஞ்சி

மருத்துவ குணம் அதிகம் நிறைந்த ஒரு துண்டு இஞ்சியை வாயில் போட்டு மெதுவாக சாப்பிட்டால், இரைப்பையில் சுரக்கும் அதிகப்படியான அமிலச் சுரப்பானது தடைபட்டு, வயிற்று எரிச்சல் நீங்கும். மேலும் இஞ்சி செரிமானத்தை சீராக வைக்கும்.

காபி

காபி

காப்ஃபைன் அதிகம் உள்ள காபி குடிக்கும் பழக்கத்தை அறவே தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக க்ரீன் டீ, இஞ்சி டீ போன்றவற்றை குடிக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods that Help Fight Acidity

Acidity occurs when there is excess secretion of acids in the gastric glands of the stomach. When the secretion is more than usual, we feel, what is commonly known as heartburn, which is normally triggered off by consumption of spicy foods. Below are the foods which can help to reduce acidity.
Desktop Bottom Promotion