Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
மாதவிடாய் சுழற்சியை சீராக்கும் உணவுகள்!!!
நிறைய பெண்கள் மாதவிடாய் பிரச்சனையில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இவையே பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுள் முதன்மையானது. சிலருக்கு மாதவிடாய் சுழற்சியானது சற்று தாமதமாக ஏற்படும். ஆனால் அந்த தாமதம் சிலருக்கு 2 மாதங்கள் தள்ளிக் கூட போகும். இத்தகைய பிரச்சனையால், பிற்காலத்தில், அவர்களுக்கு குழந்தை பெறுவதில் பிரச்சனை ஏற்படுகிறது.
பொதுவாக மாதவிடாய் சுழற்சியானது 28-30 நாட்களுக்கு ஒரு முறை நடைபெறும். ஆனால் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, புகைப்பிடித்தல், மது அருந்துதல், அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி, தேவையில்லாமல் மருந்துக்கள் உட்கொள்வது போன்றவை மாதவிடாய் சுழற்சிக்கு தடையை ஏற்படுத்துகின்றன.
அதிலும் அவ்வாறு தாமதமாக மாதவிடாய் சுழற்சி நடைபெறும் போது, சில சமயங்களில் அளவுக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இரத்தப் போக்கு ஏற்படுவதோடு, கடுமையான வயிற்று வலியும் ஏற்படும். எனவே இத்தகைய பிரச்சனைகளை தவிர்க்கவும், தாமதமான மாதவிடாய் சுழற்சியை தடுக்கவும், ஒரு சில ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு வந்தால், சீரான மாதவிடாய் சுழற்சியைப் பெறலாம். இப்போது அந்த உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!

ப்ராக்கோலி
இந்த காய்கறியை மாதவிடாய் சுழற்சி சரியாக நடைபெறாத பொழுது சாப்பிட்டு வந்தால், சரியான மாதவிடாய் சுழற்சியைப் பெறலாம்.

சோம்பு
சோம்பை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், மாதவிடாய் சுழற்சியானது சரியாக நடைபெறுவதோடு, உடலும் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். அதற்கு சோம்பை இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து, காலையில் அந்த நீரைக் குடித்து வர வேண்டும்.

சாலமன்
மீனில் சாலமனில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி அதிகம் உள்ளது. இதனால் எலும்புகள் வலுவடைவதோடு, உடலில் மாதவிடாய் சுழற்சியைத் தூண்டும் ஹார்மோன்களை நன்கு செயல்பட வைத்து, மாதவிடாய் சுழற்சியை முறையாக நடைபெறச் செய்யும்.

காய்கறிகள்
தினமும் உணவை சாப்பிடும் போது, அதில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பச்சை காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிலும் கீரைகள், கத்திரிக்காய் போன்றவை மிகவும் சிறந்தவை. இவை சீரான மாதவிடாய் சுழற்சியை நடைபெறச் செய்யும்.

மீன் அல்லது மீன் எண்ணெய்
மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் மெர்குரி அதிகம் உள்ளது. இதில் உள்ள ஒமேகா-3 இரத்தக் குழாய்களில் எந்த பிரச்சனையும் ஏற்படாமல் தடுத்து, மாதவிடாய் சுழற்சி தாமதமாவதை தடுக்கும். எனவே மீன் அல்லது மீன் எண்ணெய் மாத்திரையை சாப்பிடுவது நல்லது.

பாதாம்
பொதுவாக நட்ஸில் உடலுக்கு வேண்டிய அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளன. அதிலும் பாதாமில் நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் அதிகம் உள்ளதால், அவை மாதவிடாய் சுழற்சியை சீராக நடைபெறச் செய்வதோடு, ஹார்மோன்களின் செயல்பாட்டையும் சீராக வைக்கிறது.

எள்
எள் சாப்பிட்டாலும், சீரான மாதவிடாய் சுழற்சியை பெறலாம். எனவே இதனை அளவாக சாப்பிட்டு வந்தால், அவை உடல் வெப்பதை சற்று அதிகரித்து, மாதவிடாய் சுழற்சியை சீராக்கும்.

தயிர்
பால் பொருட்களில் கால்சியம் மற்றும் புரோட்டீன் அதிகம் நிறைந்துள்ளது. எனவே தினமும் தயிரை சாப்பிட்டு வந்தால், உடல் குளிர்ச்சி அடைவதோடு, மாதவிடாயும் சரியாக நடக்கும்.

சோயா பால்
சோயா பால் சாப்பிட்டாலும், மாதவிடாய் சுழற்சி தவறாமல் நடைபெறும்.

முட்டை
முட்டையை வேக வைத்து சாப்பிட்டால், அதில் உள்ள புரோட்டீன், கால்சியம் மற்றும் வைட்டமின்கள் மாதவிடாய் சுழற்சியில் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும்.

சிவப்பு திராட்சை
தினமும் ஒரு டம்ளர் சிவப்பு அல்லது பச்சை நிற திராட்சை ஜூஸை குடித்து வந்தால், மாதவிடாய் பிரச்சனையை தடுக்கலாம்.

டோஃபு
கொழுப்பு குறைவாக உள்ள பால் பொருட்கள் வேண்டுமெனில், பன்னீரை போன்று டோஃபுவையும் சாப்பிடலாம். இதிலும் கால்சியம் அதிகம் உள்ளது, அதனால் மாதவிடாய் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.



Click it and Unblock the Notifications











