For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மலச்சிக்கலை உண்டாக்கும் 7 உணவுகள்!!!

By Super
|

மலச்சிக்கல் என்பது பலர் சந்திக்கும் பொதுவான ஒரு பிரச்சனையே. மலச்சிக்கல் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளது. சரியான நேரத்தில் உண்ணாதது மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கங்களை கடைப்பிடிப்பதால் ஏற்படக் கூடியது தான் மலச்சிக்கல். அதனால் முதலில் மழங்கழித்தல் சீரான முறையில் நடைபெறாது. நாளடைவில் மலம் கழிக்கும் வேளையில் வலியை ஏற்படுத்தி, இரத்தக்கசிவு கூட ஏற்படலாம். மலச்சிக்கல் இருப்பதால் பயணம் மேற்கொள்வது அல்லது விழாக்களுக்கு செல்வது போன்றவற்றில் சிக்கல்கள் ஏற்படும். அதிலும் முன்னிலையில் ஒரு விழா நடக்க வேண்டும் என்றால், அப்போது ஏற்படும் தர்மசங்கடத்தை யோசித்துப் பாருங்கள்.

மலச்சிக்கலை தடுக்க வலி நிவாரணிகள், சிப்ஸ், பால் பொருட்கள், பிஸ்கட், கேக், மாட்டிறைச்சி, பழுக்காத வாழைப்பழம் மற்றும் பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும். ஏனெனில் மலச்சிக்கலை ஏற்படுத்துவது இவ்வகை உணவுகள் தான். இப்போது மலச்சிக்கலை உண்டாக்கும் அப்படிப்பட்ட உணவுகளில் ஒரு 7 வகையைப் பற்றி கொஞ்சம் பார்க்கலாமா...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வலி நிவாரணிகள்

வலி நிவாரணிகள்

வலி நிவாரணிகள் என்பது இன்றைய காலகட்டத்தில் நம் வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே மாறி வருகிறது. அதன் பயன்பாட்டை கண்டிப்பாக குறைக்க வேண்டும். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், தூக்க மாத்திரைகளை உட்கொள்ளும் போது, அவை உங்கள் செரிமான பாதையை அடைத்து கொண்டு, கழிவுகள் அனைத்தும் வெளியேறுவதை நிறுத்திவிடும். அதனால் இவ்வகை மருந்துகளை எல்லாம் கண்டிப்பாக தேவைப்படும் நேரத்தில் அவசரத்திற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும்.

சிப்ஸ்

சிப்ஸ்

சிப்ஸ் என்பது இளைஞர்கள் மத்தியில் புகழ் பெற்ற ஒரு நொறுக்குத் தீனியாகும். அவர்களிடம் அதை பிரிக்க முடியாத அளவிற்கு அவர்களுடன் ஒன்றிவிட்ட நொறுக்கத் தீனியாக அது விளங்குகிறது. ஆனால் மலச்சிக்கலை தூண்டும் ஒரு ஆபத்தான உணவு இது என்பது பலருக்கு தெரிவதில்லை. குறைந்த அளவில் அதனை உட்கொள்வதில் எந்த பிரச்சனையும் கிடையாது. உதாரணத்திற்கு, அதிக கொழுப்பு நிறைந்துள்ள உருளைக்கிழங்கு சிப்ஸ் கலோரிகளை மட்டும் அதிகரிப்பதில்லை. அதனுடன் சேர்த்து செரிமான நேரத்தையும் அதிகமாக்கும்.

பால் பொருட்கள்

பால் பொருட்கள்

பால், சீஸ், ஐஸ் க்ரீம் போன்ற பால் பொருட்களை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால், அவை செரிமான அமைப்புக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும். பால் பொருட்களில் கொழுப்பு அதிகமாக உள்ளது. ஆனால் நார்ச்சத்து குறைவாகவே உள்ளது. அதனால் அவை மலச்சிக்கலை ஏற்படுத்துவதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை.

பிஸ்கட்

பிஸ்கட்

நம்மில் பலருக்கு பிஸ்கட் என்றால் பிரியமான உணவாக விளங்குகிறது. ஆனால் பிஸ்கட், குக்கீஸ், பேஸ்ட்ரீஸ் மற்றும் கேக் போன்றவற்றில் அதிக அளவில் கொழுப்பு அடங்கியுள்ளது. ஆனால் நார்ச்சத்தோ, ஈர்ப்பதமோ மிகவும் குறைவு. அதனால் அவைகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால், வயிற்றுக்கு அது நல்லதல்ல.

வாழைப்பழம்

வாழைப்பழம்

வாழைப்பழம் என்றதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். ஆனால் மலச்சிக்கலுக்கு வாழைப்பழமும் கூட ஒரு காரணமாக அமையலாம். நன்றாக பழுத்த வாழைப்பழம், உடலில் உள்ள கழிவை வெளியேற்ற பெரிதும் உதவும். ஆனால் பழுக்காத வாழைப்பழத்தில் நார்ச்சத்து குறைவாக இருக்கும். அதனால் அது மலச்சிக்கலை உண்டாக்கும்.

பொரித்த உணவுகள்

பொரித்த உணவுகள்

மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால், பிரெஞ்சு பிரைஸ், வெங்காய பக்கோடா போன்ற பொரித்த உணவுகளையெல்லாம் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அதிக கொழுப்பு நிறைந்த இந்த உணவுகள் செரிமான அமைப்பை மந்தமாக்கும். இவ்வகை உணவுகளை கொஞ்சமாக உட்கொண்டாலும் கூட, வயிறு நிறைந்து விடும். இரையக குடலிய அசைவுகளை மந்தமாக்குவதை தவிர்க்க, இவ்வகை பொரித்த உணவுகளை உண்ணுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். பொரித்த உணவுகளுக்கு பதிலாக அவித்த அல்லது வேக வைத்த உணவுகளையே உட்கொள்ளுங்கள்.

மாட்டிறைச்சி

மாட்டிறைச்சி

அடிக்கடி மாட்டிறைச்சிகளை உட்கொண்டாலும் கூட, செரிமான அமைப்பு கெட்டுவிடும். இது உடலில் உள்ள நார்ச்சத்தை முழுமையாக துண்டித்துவிடும். அதனால் தான் குறைவாக உண்டாலும், வயிறு நிறைந்துவிடுகிறது.

ஆகவே தினசரி உணவில் நார்ச்சத்தின் அளவு இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். இது மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும். மேலும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை வாழ்வதனாலும், அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பதனாலும், மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

7 Foods That Cause Constipation

Constipation is a common issue that we face often due to irregular schedule of meals or even sometimes due to the unhealthy food habits. So Some of the food items that you should avoid to reduce constipation.
Story first published: Thursday, October 31, 2013, 20:38 [IST]
Desktop Bottom Promotion