For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விந்தணுவை அதிகரிக்க வேண்டுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்க....

By Maha
|

அனைவருக்குமே ஜிங்க் சத்துக்கள் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும் என்று தெரியும். அத்தகைய சத்து குறிப்பிட்ட உணவுகளில், அதுவும் அளவாகத் தான் இருக்கும். ஆனால் அந்த சத்து உடலுக்கு போதிய அளவு வேண்டும். இல்லையெனில் உடலில் எந்த ஒரு செயல்பாடும் சரியாக நடைபெறாது. எனவே அத்தகைய சத்துக்கள் உள்ள உணவுகள் என்னவென்று தெரிந்து கொண்டு, அதனை உணவில் சேர்க்க வேண்டும்.

ஜிங்க் சத்தில் அதிகமான நன்மைகள் உள்ளன. அதிலும் ஜிங்க் உணவுகளை அதிகம் சாப்பிட்டால், நீரிழிவைத் தடுக்கலாம். எனவே அந்த சத்துள்ள உணவுகளை சாப்பிடுவதில் கவனம் செலுத்துங்கள் என்று சொல்கிறார்கள் மருத்துவர்கள். அதுமட்டுமல்லாமல், ஜிங்க் சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை சரியாக நடைபெற வைப்பதோடு, பொடுகுத் தொல்லை மற்றும் சரும நோய்களை தடுக்கும்.

இந்த ஜிங்க் சத்துக்கள் ஆண்களுக்கு மிகவும் இன்றியமையாதது. ஏனென்றால் அந்த சத்துள்ள உணவுகளை சாப்பிட்டால், அவை ஆண்களின் டெஸ்ட்ரோஜென்னின் அளவை சரியாக வைக்க உதவும். சொல்லப்போனால், இந்த சத்துக்கள் அசைவ உணவுகளில் அதிகம் கிடைக்கும். ஆனால் சைவ உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு அந்த அளவு சத்துக்களை சைவ உணவுகளில் பெற முடியாது. ஆனால் ஒரு சில சைவ உணவுகளில் இந்த சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. அந்த உணவுகளை சாப்பிட்டால், நிச்சயம் ஒரு நாளைக்கு வேண்டிய சத்துக்களை பெறலாம்.

இப்போது ஜிங்க் சத்துக்கள் அதிகம் உள்ள உணவுகளை பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, அதை உணவில் சேர்த்து, பயன் பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முட்டை மஞ்சள் கரு

முட்டை மஞ்சள் கரு

முட்டையின் மஞ்சள் கருவில் அதிகமான அளவில் கொலஸ்ட்ரால் உள்ளது. இதனால் பலர் முட்டையின் மஞ்சள் கருவை சாப்பிட மாட்டார்கள். ஆனால் அதில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. அதில் ஒன்று தான் அதிகமான அளவில் ஜிங்க் சத்து இருப்பது.

எள்

எள்

நிறைய விதைகளில் ஜிங்க் சத்துக்கள் உள்ளன. அத்தகைய விதைகளில் ஒன்றான எள்ளிலும் அதிகமாக ஜிங்க் மற்றும் கால்சியம் சத்துக்கள் உள்ளன.

கடல் சிப்பி

கடல் சிப்பி

ஜிங்க் சத்து அதிகம் உள்ள உணவுகளில் கடல் உணவுகள் மிகவும் பிரபலமானது. குறிப்பாக கடல் சிப்பியில் ஜிங்க் என்னும் சத்து அதிகமாக உள்ளது. அதுமட்டுமின்றி மேலும் பல சத்துக்களையும் உடலுக்கு தருகிறது.

வேர்க்கடலை

வேர்க்கடலை

வேர்க்கடலையில் நல்ல கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளது. மேலும் ஜிங்க் சத்தும் அதிகம் இருக்கிறது. எனவே வறுத்த மற்றும் உப்பு உள்ள வேர்க்கடலையை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

பூண்டு

பூண்டு

வாசனைப் பொருட்களில் ஒன்றான பூண்டில் அதிக சத்துக்கள் உள்ளன. அந்த சத்துக்களில் ஜிங்க் சத்தும் ஒன்று.

இறைச்சி

இறைச்சி

இறைச்சியில் செம்மறி ஆடு மற்றும் மாட்டு இறைச்சியில் அதிகமான அளவில் ஜிங்க் சத்தானது உள்ளது. இந்த உணவை ஆண்கள் அதிகம் சாப்பிட்டால், ஜிங்க் சத்தோடு, புரோட்டீனும் கிடைக்கும்.

காளான்

காளான்

சூப்பர் உணவுகளில் ஒன்றான காளானிலும் ஜிங்க் சத்துள்ளது. எனவே இதனை வாரத்திற்கு 2 முறை சாப்பிட்டு வந்தால் நல்லது.

ஆளி விதை

ஆளி விதை

விதைகளில் ஒன்றான ஆளி விதையிலும் ஜிங்க் உள்ளது. இந்த விதைகளில் ஜிங்க் மட்டுமின்றி, ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டும் உள்ளது.

காராமணி

காராமணி

பருப்பு வகைகளில் ஒன்றான காராமணியில் நிறைய புரோட்டீன் மற்றும் ஜிங்க் சத்து உள்ளது. ஆனால் அதே சமயம், அதிக் கொழுப்புக்களும் அதிகமாக உள்ளன. எனவே இந்த உணவை எப்போதாவது சாப்பிடுவது நல்லது.

நண்டு

நண்டு

கடல் உணவுகள் அனைத்திலுமே ஜிங்க் சத்துக்களை பார்க்கலாம். ஆனால் அதில் ஒன்றான நண்டை நன்கு ரோஸ்ட் செய்து சாப்பிட்டால், டெஸ்ட்ரோஜென் அளவை சீராக்கலாம்.

ப்ரௌன் அரிசி

ப்ரௌன் அரிசி

பொதுவாக முழு தானியங்களில் ஜிங்க் சத்துக்கள் இருக்கும். அதிலும் சுத்திகரிக்கப்படாமல் இருக்கும் ப்ரௌன் அரிசியில் ஜிங்க் சத்து உள்ளது.

பசலைக் கீரை

பசலைக் கீரை

பச்சை இலைக் காய்கறிகளில் பசலைக் கீரையில் நிறைய நன்மைகள் உள்ளங்கியுள்ளன. இதில் வைட்டமின் கே, கால்சியம் மற்றும் இரும்புச் சத்து இருப்பதோடு, ஜிங்க் சத்தும் அதிகம் உள்ளது.

டார்க் சாக்லெட்

டார்க் சாக்லெட்

சாக்லெட்களில், ஜிங்க் சத்து அதிகம் உள்ள இனிப்பு இல்லாத கொக்கோ உள்ளது. எனவே அவ்வப்போது டார்க் சாக்லெட் சாப்பிட்டால், மனம் அமைதியடைவதோடு, உணர்ச்சியும் பெருக்கெடுக்கும்.

பூசணிக்காய் விதைகள்

பூசணிக்காய் விதைகள்

பூசணிக்காய் விதைகளை வைத்து நிறைய ஸ்நாக்ஸ்கள் உள்ளன. எனவே இந்த வகையான ஸ்நாக்ஸ்களை வாங்கி சாப்பிட்டால், உடலுக்கு ஜிங்க் சத்துக்கள் கிடைப்பதோடு, குறைவான கலோரியும், 0% கொழுப்பும் இருப்பதால், உடல் எடை அதிகரிக்காமலும் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

14 Zinc-Rich Foods For Men

We all know that zinc is a trace mineral when it comes to foods. This means that zinc is present in selected foods and in very small amounts. The body needs very minor quantity of zinc but cannot function without it. Even men needs to have foods that are rich in zinc to maintain the testosterone (male hormone) levels. So, here are some of the best sources of zinc. Men must also include these foods in their diet.
Desktop Bottom Promotion