Latest Updates
-
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்..
ஹயாடல் ஹெர்னியாவா?: காரமா சாப்பிடாதீங்க

வயிற்றுப் பகுதியின் அடிப்புறச் சுவர், சில பகுதிகளில் வலுவிழந்து காணப்படும். அந்த வழியே, சிறுகுடல் பிதுக்கிக் கொண்டு அல்லது துருத்திக் கொண்டு இறங்கி விடும். இதுவே ஹெர்னியா அல்லது குடலிறக்கம் எனப்படுகிறது.
பெண்களுக்கு, வயிற்றுப் பகுதியில் அறுவைச் சிகிச்சை செய்யப்படும் போது குடலிறக்கம் ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக, சிசேரியன்' எனப்படும் மகப்பேறு கால அறுவைச் சிகிச்சை மற்றும் கர்ப்பப்பை நீக்கும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு சம்பந்தப்பட்ட பெண்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது.
ஹையாடல் குடலிறக்கம்
ஹயாடல் குடலிறக்கத்தினால் பெரும்பாலோனோர் பாதிக்கப்பட்டு வயிறு வலியினால் அவதிப்படுகின்றனர். இதனால் ஜீரணத்தில் பாதிப்பு, அமிலம் சுரத்தல், புளித்த ஏப்பம் போன்றவை ஏற்படும். உணவுக்கட்டுப்பாட்டின் மூலம் இவற்றை சரி செய்யலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
ஹயாடல் ஹெர்னியாவினால் பாதிக்கப்பட்டவர்கள் உணவு சரியாக ஜீரணமாகமல் வயிற்றில் இருந்து தொண்டைக்கு வந்து நெஞ்சு எரிச்சலை ஏற்படுத்தும் எனவே அவர்கள் உண்ணவேண்டிய, தவிர்க்கவேண்டிய உணவுகளை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கொழுப்பு குறைந்த பால்
வாழைப்பழம் மற்றும் ஆப்பிள் பழங்களை அதிகம் எடுத்துக்கொள்ளலாம். அதேபோல் பீன்ஸ், காரட், புருக்கோலி போன்றவைகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். குறைந்த அளவு சிக்கன், மட்டன், மீன் உணவுகளை சேர்த்துக் கொள்ளலாம். கொழுப்பு குறைந்த பால், சீஸ், கிரீம் வகைகளை உண்ணலாம் என்பது மருத்துவர்களின் அறிவுரை.
அதிக அளவு தண்ணீர் பருக வேண்டும். இதனால் உணவு எளிதில் ஜீரணமாகும் மலச்சிக்கல் நீங்கும். சிரமம் ஏற்படாது. குறைந்த கலோரி உள்ள இனிப்புகளை எடுத்துக்கொள்ளலாம்.
காரமான உணவு வேண்டாம்
சிட்ரஸ் வகை பழங்களான ஆரஞ்ச், திராட்சை போன்ற பழங்களையும், பழரசங்களையும் தவிர்க்கவேண்டும். கொழுப்பு சத்து நிறைந்த உணவுப்பொருட்கள், சாக்லேட், வெள்ளைப்பூண்டு, வெங்காயம் போன்றவைகளையும் அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்ளக்கூடாது.
உணவில் அதிகம் காரம் சேர்த்துக்கொள்ளக்கூடாது என்பது மருத்துவர்களின் அறிவுரை. தக்காளி அதிகம் சேர்க்கப்பட்ட பிட்ஸா, தக்காளி ஜூஸ் போன்றவைகளை தவிர்க்க வேண்டும். கார்பன் அதிகம் சேர்க்கப்பட்ட குளிர்பானங்களை தொடவே கூடாது. எண்ணெயில் பொரித்த உணவுகளை எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதும் மருத்துவர்களின் அறிவுரை.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
