Latest Updates
-
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்..
உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் பூசணி வகைகள்!!!
உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில் காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும் என்பது நன்கு தெரியும். அவ்வாறு ஆரோக்கியத்தை தரும் காய்கறிகளில் பெரும்பாலும் பச்சை இலைக் காய்கறிகள் அல்லது குடைமிளகாயை தான் சாப்பிடுவோம். அப்போது நாம் பூசணி வகைக் காய்கறிகளை நினைக்கவே மாட்டோம். ஏனெனில் நமக்கு அவற்றில் உள்ள சத்துக்களைப் பற்றி அவ்வளவாக தெரியாது. ஆனால் உண்மையில் அந்த வகையான காய்கறிகளில் நிறைய ஊட்டசத்துக்கள் அடங்கியுள்ளன. அத்தகைய காய்கறிகள் உலகம் முழுவதும் பிரபலமானது அல்ல, இந்தியாவில் மட்டும் தான் இந்த காய்கறிகளை சமையலில் பயன்படுத்துவோம்.
மேலும் இந்த காய்கறிகளை வைத்து நிறைய வெரைட்டியான ஸ்டைலில் சமைப்போம். ஆனால் அவற்றை அடிக்கடி பயன்படுத்தமாட்டோம். ஏனென்றால் அதன் அருமை நமக்கு சரியாக தெரியாதது தான் காரணம். ஆகவே தற்போது அந்த பூசணி வகைக் காய்கறிகளில் உள்ள நன்மைகளை உங்களுக்காக கூறியுள்ளோம். அவற்றை என்னவென்று தெரிந்து கொண்டு, இனிமேல் அந்த காய்கறிகளையும் தினமும் உண்ணும் உணவில் சேர்த்து, அதில் உள்ள நன்மையை பெற்று ஆரோக்கியமாக வாழுங்கள்.
இப்போது உங்களுக்காக ஒரு சில பூசணி வகைக் காய்கறிகளையும், அதன் நன்மைகளையும் பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்களேன்...

பாகற்காய்
பூசணி வகை காய்கறிகளிலேயே பாகற்காய் மிகவும் ஆரோக்கியமானது. இந்த காயை நீரிழிவு உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கிருமிகள் வெளியேற்றப்படுவதோடு, இரத்தம் சுத்திகரிக்கப்படும் மற்றும் இதனை அதிகம் சாப்பிட்டால் சருமம் அழகாக மின்னும்.

சுரைக்காய்
சிறுநீரகப் பிரச்சனை இருப்பவர்கள், சுரைக்காயை சாப்பிட்டு வந்தால், அந்த பிரச்சனை குணமாகிவிடும்.

புடலங்காய்
புடலங்காயில் கலோரி குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருக்கிறது. ஆகவே இதனை டயட்டில் இருப்பவர்கள் அதிகம் சாப்பிட்டால், அடிக்கடி பசி ஏற்படுவது கட்டுப்படும். இதனால் உடல் எடையும் குறையும்.

பீர்க்கங்காய்
இந்த காய்கறியில் ஜிங்க் மற்றும் மெக்னீசியம் அதிகம் நிறைந்துள்ளது. அதுமட்டுமின்றி இதில் தையமின் மற்றும் ரிபோஃப்ளேவினும் அடங்கியுள்ளது. எனவே இதனை உணவில் சேர்த்தால், இந்த ஊட்டச்சத்துக்களை பெறலாம்.

கோவைக்காய்
பூசணி வகையான காய்கறிகளிலேயே கோவைக்காய் மிகவும் பிரபலமானது. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது. ஆகவே தான் மருத்துவர்கள், இந்த காயை நீரிழிவுள்ளவர்கள் அதிகம் சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர்.



Click it and Unblock the Notifications
