For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எடையை குறைக்கும் இந்த டயட் உங்கள் ஆயுளையும் எப்படி அதிகரிக்கிறது தெரியுமா?

சைவ உணவுகளைக் கொண்டு எடையை குறைக்க உலகம் முழுவதும் பலராலும் பின்பற்றப்படும் ஒரு டயட்தான் லாக்டோ-வெஜிடேரியன் டயட் ஆகும்.

|

உலகளவில் எடை அதிகரிப்பு என்பது மிகப்பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அதனால் எடையை குறைக்க பலராலும் பலவகை டயட்கள் பரிந்துரைக்கப்படுகிறது. டயட் என்றால் பெரும்பாலும் அனைவரின் மனதிலும் முதலில் வருவது சைவ உணவுகள்தான். அப்படி சைவ உணவுகளைக் கொண்டு எடையை குறைக்க உலகம் முழுவதும் பலராலும் பின்பற்றப்படும் ஒரு டயட்தான் லாக்டோ-வெஜிடேரியன் டயட் ஆகும்.

What is lacto-vegetarian diet

சைவ உணவுகளை மட்டும் சாப்பிடுபவர்களுக்கு இது மிகவும் பொருத்தமானதாகும். அதேசமயம் எடைகுறைப்புடன் ஆரோக்கியத்தையும் விரும்புபவர்களுக்கு இது மிகவும் ஏற்ற டயட் முறையாகும். இந்த பதிவில் லாக்டோ-வெஜிடேரியன் டயட் என்றால் என்ன அதனால் உங்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
லாக்டோ-வெஜிடேரியன் டயட்

லாக்டோ-வெஜிடேரியன் டயட்

முட்டை சாப்பிடாத பலரும் பால் தொடர்பான பொருட்கள் பலவற்றை சாப்பிடுவார்கள். இந்த பொருட்கள் லாக்டோ-வெஜிடேரியன்ஸ் என்று அழைக்கப்படுகிறது. பெரும்பாலான சைவ உணவுகளை சாப்பிடுபவர்கள் பால் முதற்கொண்டு விலங்குகளில் இருந்து கிடைக்கும் எந்த பொருளையும் சாப்பிட மாட்டார்கள். ஆனால் ஆரோக்கிய நன்மைகளை கருத்தில் கொண்டு முட்டை, மாமிசம் தவிர்த்து பாலைக் குடிக்கும் டயட்டை பலர் பின்பற்ற தொடங்கியிருக்கிறார்கள். இந்த லாக்டோ-வெஜிடேரியன் டயட் மிகவும் நெகிழ்வானது மற்றும் உங்கள் சுற்றுச்சூழல் தாக்கத்தை குறைக்கிறது. மேலும் லாக்டோ-ஓவோ-வெஜிடேரியன் டயட், ஓவோ-வெஜிடேரியன் டயட் போன்ற வகைகள் இதில் உள்ளது.

லாக்டோ-வெஜிடேரியன் டயட்டின் நன்மைகள்

லாக்டோ-வெஜிடேரியன் டயட்டின் நன்மைகள்

இந்த சுவாரஸ்யமான டயட்டில் ஒருபோதும் தவறாகப் போகாத ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. ரு லாக்டோ-வெஜிடேரியன் டயட்டில் சில ஆரோக்கியமான கொழுப்புகள், ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின்கள் மற்றும் பிற அத்தியாவசிய தாதுக்கள் உள்ளன. இந்த சமநிலையான டயட் உங்கள் நோயெதிர்ப்பு சக்தியையும், வளர்சிதை மாற்றத்தையும் அதிகைக்கக்கூடும். இதனால் சில முக்கிய ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கிறது.

இதய ஆரோக்கியம்

இதய ஆரோக்கியம்

இந்த லாக்டோ-வெஜிடேரியன் டயட்டை பின்பற்றுபவர்களுக்கு இதய குறைபாடுகள் ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவு ஆகும். ஆரோக்கியமான கொழுப்புக்களும், அவசியமான ஊட்டச்சத்துக்களும் இருக்கும் இந்த டயட் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை குறைப்பதுடன், நல்ல கொழுப்பின் அளவையும் அதிகரிக்கிறது. மேலும் இது உடலில் சீரான இரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது. அதனால்தான் பல மருத்துவர்கள் இந்த டயட்டை பரிந்துரைக்கிறார்கள்.

MOST READ: இந்த 6 ராசிக்காரர்களுக்கு பயம்னா என்னன்னே தெரியாதாம்... பார்த்து ஜாக்கிரதையா இருங்க...!

இரத்த குளுக்கோஸ் அளவை பராமரிக்கிறது

இரத்த குளுக்கோஸ் அளவை பராமரிக்கிறது

பச்சை இலை காய்கறிகள், பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகள், பல்வேறு தானியங்கள், நல்ல தரமான தாவர அடிப்படையிலான புரதங்கள் மற்றும் சில ஆரோக்கியமான பால் பொருட்கள் ஆகியவற்றை சீரான வடிவத்தில் சேர்ப்பதால், லாக்டோ-வெஜிடேரியன் டயட் உயர்ந்த இரத்த குளுக்கோஸ் அளவைக் கொண்டவர்களுக்கு சிறந்தது. உங்களுக்கு சர்க்கரை நோயோ அல்லது ஹார்மோன் சமநிலையின்மையோ இருந்தால் இந்த டயட்டிற்கு மாறுவது உங்களுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களான நார்ச்சத்துக்கள், ஆன்டிஆக்சிடண்ட்கள், பாஸ்பரஸ், கால்சியம், ஜின்க், இரும்புச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இவை அனைத்தும் உங்கள் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை சீராக பராமரிக்க உதவுகிறது.

எடை குறைப்பு

எடை குறைப்பு

நீங்கள் எடையை விரைவாக குறைக்க விரும்பினால் இறைச்சிகளிடம் இருந்து விலகி இருக்க வேண்டியது அவசியமாகும். இந்த டயட் முறையை பின்பற்றும்போது நீங்கள் சிறிதளவு கலோரிகளும், அதிகளவு ஊட்டச்சத்துக்களும் பெறுவதற்கு வாய்ப்புள்ளது. இறைச்சி சாப்பிடுபவர்களுக்கு போதுமான நார்ச்சத்துக்கள் கிடைக்க வாய்ப்பில்லை, எனவே நார்ச்சத்துக்கள் அதிகமிருக்கும் காய்கறிகள், பழங்கள், தானியங்கள் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளும் போது அதிலிருக்கும் நார்ச்சத்துக்கள் எடையை குறைக்க உதவுகிறது.

என்ன சாப்பிடலாம்? என்ன சாப்பிடக்கூடாது?

என்ன சாப்பிடலாம்? என்ன சாப்பிடக்கூடாது?

இந்த டயட்டை பின்பற்றுபவர்கள் அனைத்து வகையான இறைச்சி, முட்டை, மீன் என அனைத்தையும் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக அனைத்து வகையான காய்கறிகள், பழங்கள், தானியங்கள், விதைகள்ம் பால் போன்றவற்றை சாப்பிடலாம். அனைத்து வகை சைவ உணவுகளும் லாக்டோ-வெஜிடேரியன் டயட் கீழ்தான் வரும்.

MOST READ: உங்கள் ஆன்மா உங்களை பற்றி உங்களிடம் கூற விரும்பும் உண்மைகள் என்ன தெரியுமா?

எப்படி செய்ய வேண்டும்?

எப்படி செய்ய வேண்டும்?

லாக்டோ-வெஜிடேரியன் டயட் என்பது முட்டை சாப்பிடுபவர்களுக்கும், அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கும் பின்பற்ற கடினமான டயட் ஆகும். முட்டையில் ஆரோக்கியத்திற்கு தேவையான புரோட்டினும், பல ஊட்டச்சத்துக்களும் உள்ளது எனவே லாக்டோ-வெஜிடேரியன் டயடை பின்பற்றுபவர்கள் முட்டைக்கு பதிலாக அதிலிருக்கும் ஊட்டச்சத்துக்கள் இருக்கும் பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்வதை உறுதிசெய்ய வேண்டும். அதுபோல்தான் மீனில் இருக்கும் ஒமேகா-3 அமிலமும். எனவே எந்த ஊட்டச்சத்தும் குறையாத வகையில் சமநிலையான டயட்டை மேற்கொண்டால் உங்களுக்கு ஆயுள் அதிகரிப்பது உறுதி.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What is lacto-vegetarian diet and its benefits

Here are the health benefits of lacto-vegetarian diet.
Desktop Bottom Promotion